தனது கை ரேகையை ஒட்டி நண்பரை தேர்வெழுத அனுப்பிய பீகார் நபர்..கடைசியில் எதிர்பாராத ட்விஸ்ட்!

ரயில்வே குரூப் டி தேர்வில் வெற்றி பெற தனது கை ரேகையை நண்பருக்கு ஒட்டி தேர்வெழுத அனுப்பிய சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது. ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம் (RRB), குரூப் D CBT தேர்வுக்கான அறிவிப்பை அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேர்வுகள் அனைத்தும் ஆகஸ்டு 17 முதல் 25ஆம் தேதிவரை நடக்கும் என்ற அறிவிப்பு தேர்வு நாளிற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கான தேர்வுகள் ஆகஸ்ட் 17ல் தொடங்கிய நிலையில் இன்றுடன் முடியவிருக்கின்றன. இந்நிலையில் இந்த ரயில்வே … Read more

ஹரியாணாவில் மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் கட்டப்பட்ட நாட்டின் மிகப்பெரிய மருத்துவமனை தொடக்கம்

ஃபரிதாபாத்: ஹரியாணாவின் ஃபரிதாபாத் நகரில், டெல்லி-மதுரா சாலையில் மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில், 130 ஏக்கர் நிலத்தில் 2,600 படுக்கை வசதிகளுடன் நவீன மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி ரூ.6,000 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 500 படுக்கைகளுடன் இந்த மருத்துவமனை செயல் பாட்டுக்கு வந்துள்ளது. மருத்துவ மனை கட்டிடத்தின் மேல் மாடியில் ஹெலிகாப்டர் தளமும் உள்ளது. இந்த மருத்துவமனை, அடுத்த 5 ஆண்டில் இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையாக திகழும். இதை மாதா அமிர்தானந்த மயி … Read more

பாஜக தலைவரும், நடிகையுமான சோனாலி போகத் மரணத்தில் திடீர் திருப்பம்.!

அரியானா பாஜக தலைவரும், நடிகையுமான சோனாலி போகத்தின் உடலில் ஏராளமான காயங்கள் இருப்பதாக உடற்கூராய்வில் தெரியவந்ததை அடுத்து 2 பேர் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 22ம் தேதி கோவாவில் தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது, உடல்நலக்குறைவு ஏற்பட்ட சோனாலி மாரடைப்பால் காலமானதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஆனால், அவரது மரணத்தில் இருப்பதால் விசாரணை நடத்த வேண்டும் என்று குடும்பத்தினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், கத்தியை பயன்படுத்தாமல் பிற பொருட்களை கொண்டு தாக்கப்பட்ட காயங்கள் … Read more

நடிகை சோனாலி போகத் மரணம் கொலை வழக்காக பதிவு: கோவா போலீஸ்

கோவா: நடிகை சோனாலி போகத் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக கோவா போலீஸ் பதிவு செய்துள்ளது. நடிகை சோனாலி போகத் உடலில் ஆயுதத்தால் தாக்கியதுக்கான தடயங்கள் உள்ளதாக உடற்கூறாய்வில் தகவல் வெளியாகியுள்ளது. சோனாலி போகத்தின் மரணத்துக்கு அவரது தனி உதவியாளர், நண்பர்தான் காரணம் என்றும் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

சாவர்க்கர் ரத யாத்திரையால் பதற்றம் – கர்நாடகாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் சுதந்தின தினத்தன்று பாஜக சார்பில் வைக்கப்பட்ட பேனர்களில் முன்னாள் பிரதமர் நேருவின் படம் நீக்கப்பட்டு, சாவர்க்கரின் படம் இடம் பெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசப்பட்டது. ஷிமோகா, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட இடங்களில் சாவர்க்கரின் படம் கிழிக்கப்பட்டதால் வன்முறை ஏற்பட்ட‌து. இந்நிலையில் பாஜக சார்பில் 23‍-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 8 நாட்களுக்கு சாவர்க்கர் ரத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. மைசூருவில் சாவர்க்கர் ரத … Read more

பாக். – இந்தியா எல்லை வழியே போதைப்பொருள் கடத்த முயற்சி!: 8 கிலோ ஹெராயின் பறிமுதல்.. எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் அதிரடி..!!

சம்பா: பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக கடத்த முயன்ற போதைப்பொருள் மீட்கப்பட்டது. இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக போதைப்பொருள் கடத்த முயன்ற சதிச்செயலை எல்லை காவல்படையினர் முறியடித்திருக்கின்றனர். இன்று அதிகாலை காஷ்மீரின் சம்பா பகுதி எல்லை வழியாக கடத்த முயன்ற போதைப்பொருள் மீட்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சுமார் 8 கிலோ போதைப்பொருள் ஹெராயினாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் போதைப்பொருளை கடத்தி வந்த பாகிஸ்தான் கடத்தல்காரர் மீது பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டனர். குண்டடி … Read more

தேர்தல் ஆணையம் அதிரடி! பதவி விலகுகிறாரா ஜார்க்கண்ட் முதல்வர்? முழு விபரம் இதோ

தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையால் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்யும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. அகில இந்திய தேசிய காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்த கூட்டணியின் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார். இந்நிலையில் சுரங்கம் ஒன்றை முதல்வர் ஹேமந்த் சோரன் தனது குடும்ப நிறுவனத்திற்கு முறைகேடாக … Read more

2024 டார்கெட் – உத்தரப் பிரதேச பாஜகவுக்கு புதிய தலைவர். யார் இவர்?

லக்னோ: மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே உத்தரப் பிரதேச பாஜக தலைவராக பூபேந்திர சிங் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநில அமைச்சரும், சட்டப்பேரவை கவுன்சில் உறுப்பினராகவும் இருக்கிறார் பூபேந்திர சிங் சவுத்ரி. இவர் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர். மேற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ஜாட் சமூகத்தினரின் வாக்குகளை தக்கவைப்பது பாஜகவுக்கு பெரும் பலமாக அமையும். இதைக் கருத்தில் கொண்டே பூபேந்திர சிங் சவுத்ரி மாநில பாஜக … Read more

சவப்பெட்டியுடன் சிரித்தபடி போட்டோ எடுத்த குடும்பம்: வைரல் போட்டோவால் பரபரப்பு

சவப்பெட்டியுடன் சிரித்துக் கொண்டே ஒரு குடும்பம் குரூப் போட்டோ எடுத்து போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணாடி ப்ரீசரில்  வைக்கப்பட்ட சடலத்தின் முன் பக்கமும், பின் பக்கமும் குடும்ப உறவினர்கள் சூழ்ந்து கொண்டு சிரித்துக் கொண்டே குடும்ப போட்டோவுக்காக போஸ் கொடுத்துள்ளனர். இது இந்த போட்டோவை காணும் பலர் மனதிலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளானது. துக்க … Read more

இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த ரூ.30,000 கொடுத்தது பாகிஸ்தான் உளவுத்துறை: அதிர்ச்சி தகவல்..!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ரஜோரி பகுதியில் கடந்த 21ம் தேதி நடந்த என்கவுண்டரின் போது பிடிபட்ட தபரிக் உசேன் என்ற பயங்கரவாதி மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையின் தாக்குதல்கள் அம்பலமாகியுள்ளது. நவ்சேரா செக்டாரில் எல்லை கட்டுப்பாடு கோட்டில் இருந்து இந்திய பகுதிக்குள் கடந்த 21ம் தேதி ஒருவர் நுழைய முயற்சித்ததை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்தனர். ராணுவ வீரர்கள் அருகில் சென்ற போது அவர் ஓட துவங்கினார். பின்னர் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதன் பிறகு ராணுவ வீரர்கள் … Read more