முடிவுக்கு வந்தது அமைச்சரவை இழுபறி! பதவி கிடைக்காமல் பல சிவசேனா எம்எல்ஏக்கள் அதிருப்தி?

மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்து ஒரு மாதம் கடந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் புதிய அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்றுள்ளனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்ட நிலையில் அக்கட்சியின் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் இணைந்து கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி ஆட்சியமைத்தார். அன்றைய தினம் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சரான தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். அமைச்சரவை அமைக்கும் விவகாரத்தில் இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நீடித்த … Read more

பிஹாரில் பாஜகவின் கடைசி முயற்சியும் தோல்வி: ‘அசராத’ நிதிஷின் அடுத்தகட்ட ‘மெகா’ நகர்வு

புதுடெல்லி: பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமரை தன் கூட்டணியில் தக்கவைக்க பாஜக எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் தொடர்ச்சியாக லாலுவின் ராஷ்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆதரவுடன் பிஹாரில் மெகா கூட்டணி ஆட்சி அமைகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ‘நிதி ஆயோக்’ கூட்டத்தை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் புறக்கணித்தார். ஐக்கிய ஜனதா … Read more

ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்..! – பீகார் அரசியலில் அதிரடி..!

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பீகார் ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். எதிர் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த நிலையில் நிதிஷ் குமார் இந்த முடிவை எடுத்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகளுடனான … Read more

ஏழை எளிய மக்களுக்கு இலவச கல்வி, இலவச மருத்துவம் வழங்குவது அரசின் கடமை: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: ஏழை எளிய மக்களுக்கு இலவச கல்வி, இலவச மருத்துவம் வழங்குவது இலவசம் அல்ல என்றும் அது அரசின் கடமை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  கூறியுள்ளார். தொழிலதிபர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் பல லட்சம் கோடி கடன்களை இலவசம் என்று அவர் சாடியுள்ளார். நாட்டின் 75-வது சுதந்திர விழாவை முன்னிட்டு 115 அடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதிகளில் இலவச திட்டங்கள் … Read more

தன்கர் துணை ஜனாதிபதி ஆனதால் மேற்குவங்க புதிய ஆளுநர் மாஜி சிபிஐ அதிகாரி?… மம்தாவுக்கு நெருக்கடி கொடுக்க பாஜக திட்டம்

புதுடெல்லி: ஜக்தீப் தன்கர் துணை ஜனாதிபதியாக தேர்வானதால் மேற்குவங்க புதிய ஆளுநராக முன்னாள் சிபிஐ அதிகாரி ராகேஷ் அஸ்தானாவை நியமிக்க ஒன்றிய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கர், துணை ஜனாதிபதியாக தேர்வு  செய்யப்பட்ட நிலையில் அவர் வரும் 11ம் தேதி துணை ஜனாபதிபதி பதவியை  ஏற்கவுள்ளார். இவர் மேற்குவங்க ஆளுநராக இருந்த போது திரிணாமுல் காங்கிரஸ்  தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு நிர்வாக ரீதியாக பல்வேறு  குடச்சல்களை … Read more

பீகார் அரசியலில் திருப்பம்: பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முறிந்தது

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி முடிவுக்கு வருகிறது எனவும், புதிய கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் நிதிஷ்குமார் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்திருக்கிறார். பீகாரில் பாஜகவுடன் கூட்டணியை முறித்தார் நிதிஷ்குமார். லாலு பிரசாத்தின் கட்சியுடன் சேர்ந்து நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளார் முதல்வர் நிதிஷ் குமார். மேலும் ஆதரவளிக்கும் கட்சிகளின் கடிதத்தை அளித்து மீண்டும் ஆட்சியமைக்க கோரிக்கை விடுப்பார் எனவும் தகவல்கள் … Read more

பிஹாரில் ஜேடியு – பாஜக கூட்டணி முறிவு: நிதிஷ் குமாரின் ‘மெகா’ கூட்டணி திட்டம்

பாட்னா: பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) – பாஜக கூட்டணி முறிந்தது. காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கைகோத்து ‘மெகா கூட்டணி’ திட்டத்துடன் ஆட்சியில் தொடர முதல்வர் நிதிஷ் குமார் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுள்ளார். பிஹார் மாநில முதல்வரும், ஜேடியு தலைவருமான நிதிஷ் குமார் இன்று தனது கட்சி எம்எல்ஏக்களுடன் பாட்னாவில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில், ஜேடியு – பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாக முறைப்படி அறிவித்தார். இந்தக் கூட்டத்தில் நிதிஷ் குமார் … Read more

மோடிக்கு டாட்டா காட்டும் நிதிஷ் குமார்: பாஜகவுக்கு கல்தா?

பீகார் அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றம் தேசிய அளவில் கவனம் பெற்று வருகிறது. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியுடன் நிதிஷ் குமார் கரம் கோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் அவர் ஆளுநருடன் சந்திக்க உள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அக்னிபத் திட்டம், சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில், பாஜகவுடன், முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு முரண்பாடு ஏற்பட்டது. ஆனால் இது மட்டுமல்ல, தனது கட்சி பீகாரில் பாஜகவால் சூறையாடப்படுவதாக நிதிஷ் குமார் நினைப்பதாக … Read more

தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி நோயாளியின் ரத்தம்: ரத்த வங்கி மீது போலீஸ் வழக்கு

ஐதராபாத்: தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி நோயாளியின் ரத்தம் கொடுத்த ரத்த வங்கி மீது தெலங்கானா போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் ராம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மூன்று வயது ஆண் குழந்தைக்கு (தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்) கடந்த இரண்டரை ஆண்டுகளாக அடிக்மேட்டில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் ரத்த வங்கியின் மூலம் அவ்வப்போது ரத்தம் ெசலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறையும் குழந்தைக்கு ரத்தம் கொடுக்கப்படும். … Read more

பீகாரில் பாஜக கூட்டணி முறிவு: நிதிஷ் குமார் அறிவிப்பு!

பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிந்துள்ளதாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் பகு சௌஹானை சந்தித்து முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச உள்ளார். அப்போது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 75 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு 74 இடங்களும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 43 இடங்களும் … Read more