அசாம்: அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு
அசாமில் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 70 ஆக உயர்த்தப்பட உள்ளது. வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் மருத்துவத்துறையில் பேராசிரியர்களின் தேவை அதிகமாக உள்ளது. இது தொடர்பாக விவாதித்த அம்மாநில அமைச்சரவை, அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் ஓய்வு வயதை 65லிருந்து 70ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களை தக்க வைக்கும் நோக்கத்தில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டதாக அசாம் அரசு விளக்கமளித்துள்ளது. “அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் எண்ணிக்கை மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கைக்கு விகிதாசாரமாக … Read more