எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை ரத்து: உச்சநீதிமன்றம்

டெல்லி: எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட ஐகோர்ட் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கை அடிப்படையில் டெண்டர் முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: மாயாவதி

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு தனது கட்சி ஆதரவளிக்கும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜக்தீப் தங்கர் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில், அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அதுபோல் வரும் 6ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் … Read more

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு: ஆ.ராசா புகார்

டெல்லி: 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக எம்.பி. ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார். ரூ.5 லட்சம் கோடிக்கு சென்றிருக்க வேண்டிய 5ஜி ஏலம் ரூ.1.50 லட்சம் கோடிக்குதான் சென்றுள்ளது. எஞ்சிய பணம் எங்கே சென்றது என்று ஒன்றிய அரசு தான் பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைதள முகப்பில் தேசியக் கொடி பதிவேற்றம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தனது சமூக வலைதள பக்கங்களின் முகப்பு புகைப்படத்தில் நேற்று தேசியக் கொடியை பதிவேற்றம் செய்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் 2-ம் தேதி சிறப்புமிக்க தினமாகும். 75-வது சுதந்திர தின நிறைவை நாடு கொண்டாடி வரும் நிலையில் எனது சமூக வலைதள பக்கங்களின் முகப்பு புகைப்படத்தில் தேசியக் கொடியை பதிவேற்றம் செய்துள்ளேன். அனைத்து தரப்பு மக்களும் தங்களது சமூக ஊடக முகப்பு … Read more

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய பிரபல அலுவா மகாதேவ ஆலயம்..!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கொச்சியில் அமைந்துள்ள பிரபல அலுவா மகாதேவ ஆலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கோவிலைச் சுற்றி வெள்ளநீர் சூழ்ந்தபடி செல்கிறது. அங்கு பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து ஆற்றில் அதிகளவு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. கேரளாவில் பல மாவட்டங்களில் கனமழை தொடர்பான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. Source … Read more

குரங்கு அம்மை நோயாளிகள் பயன்படுத்திய துணிகளை பயன்படுத்தாதீர் : புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது ஒன்றிய அரசு!!

புதுடெல்லி: உலகளவில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி விட்ட குரங்கம்மை நோய், இந்தியாவுக்கும் சமீபத்தில் வந்தது. கேரளாவில் முதல் நோயாளி கண்டறியப்பட்டார். அவர் வெளிநாட்டில் இருந்து வந்தார். இதைத் தொடர்ந்து இதே மாநிலத்தில் பலர் பாதித்துள்ளனர். இதுவரை நாட்டின் மொத்த குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் குரங்கு அம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து ஒன்றிய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. யாருக்கு குரங்கு அம்மை பாதிப்பு … Read more

தேசியக் கொடி உருவான வரலாறு – பிங்கலி வெங்கய்யாவுக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தல்

அமராவதி: ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம், பட்ல பெனுமர்ரா கிராமத்தில் கடந்த 1876-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி பிங்கலி வெங்கய்யா பிறந்தார். சிறுவயது முதலே சுதந்திர வேட்கை கொண்ட அவர், இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். கடந்த 1906-ம் ஆண்டு இந்தியாவுக்காக தனி தேசியக் கொடியை உருவாக்கினார். கடந்த 1921-ம்ஆண்டு, மார்ச் 31-ம் தேதி ஆந்திராவின் விஜயவாடாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் மகாத்மா காந்தி பங்கேற்றார். அவரை நேரில் சந்தித்து, … Read more

தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம்!!

டெல்லி : தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் இருந்து அக்.31க்குள் வெளியேறினால் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தை திருப்பித் தர வேண்டும்: யுஜிசி

முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் கல்லூரிகளில் இருந்து அக்டோபர் 31ஆம் தேதிக்குள் வெளியேறினால் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திரும்பித்தர வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான சியுஇடிதேர்வு ஆகஸ்ட் 20 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தத் தேர்வின் முடிவுகள் வெளியாக 15 நாட்கள் ஆகும். இதுபோல் நீட் தேர்வு முடிவுகளும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், வேறு கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் வேறு … Read more

ஆந்திர மாநிலத்தில் தனியார் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் திடீரென விஷவாயு கசிவு… 50 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி!!

ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் அணகாப்பள்ளியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் விஷவாயு கசிவு ஏற்பட்டதில் 50க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஆந்திராவின் அணகாப்பள்ளி மாவட்டம் அச்சுதாபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தனியார் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் 2000 பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர்கள் வழக்கம் போல பணியில் ஈடுபட்டு இருந்த போது, திடீரென விஷவாயு கசிந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பணியில் இருந்தவர்களில் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு … Read more