கோவிட்டுடன் பரவும் குளிர் ஜூரம்.. மருத்துவமனையில் பெரும்பாலானோர் அனுமதி.!

டெல்லியில் குளிர் ஜூரம் போன்ற சீசன் நோய்கள் வேகமாகப் பரவி வரும் சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பெரும்பாலோருக்கு கோவிட் பாதிப்பும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 80 சதவீத வீடுகளில் கோவிட் அல்லது ஃபுளூ காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டெல்லி மற்றும் அதன் அண்டை நகரங்களான காசியாபாத் குருகிராம், நொய்டா, பரீதாபாத் உள்ளிட்ட இடங்களில் சுமார் 11 ஆயிரம் வீடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த இரண்டு மூன்று வாரங்களாக டெல்லியில் கோவிட் … Read more

13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள தடை: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: 13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள ஒன்றிய அரசு நேற்று இரவு முதல் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார், உள்ளிட்ட 13 மாநிலங்கள் பிற மாநிலங்களுடன் மின்சாரத்தை விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு 13 மாநிலங்கள் நிலுவைத் தொகை செலுத்தவில்லை எனக்கூறி ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து செல்போன்களுக்கும் இனி ஒரே சார்ஜர் – ஆராய நிபுணர் குழு அமைப்பு

அனைத்து விதமான மின்னணு சாதனங்களுக்கும் ஒரே சார்ஜரை பயன்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆண்ட்ராய்டு போன், ஐபோன், டேப்லேட், லேப்டாப் போன்ற ஒவ்வொரு மின்னணு சாதனத்துக்கும் ஒவ்வொரு சார்ஜரை பயன்படுத்த வேண்டிய சூழல் தற்போது உள்ளது. இதனால் நுகர்வோர்களுக்கு கூடுதல் செலவாவதுடன், மின்னணு கழிவுகளும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், அனைத்து வகை மின்னணு சாதனங்களுக்கும் ஒரே வகை சார்ஜரை (டைப் சி) கொண்டுவர மத்திய … Read more

நேதாஜி அஸ்திக்கு மரபணு சோதனை; ஒன்றிய அரசிடம் மகள் முறையீடு

கொல்கத்தா: நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் மரணம் குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த 1945 ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்தார் என்று நம்பப்பட்டாலும், அவரது மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. இந்நிலையில், அவரது ஒரே மகளான அனிதா போஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘நேதாஜியின் மரணம் குறித்த மர்மங்களுக்கு தீர்வு காண்பதுதான், அந்த  மாபெரும் புரட்சியாளனுக்கு  நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். … Read more

வேட்டையில் சூரப்புலி மோடிக்கு பாதுகாப்பு தரும் கர்நாடகா நாய்

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய சிறப்பு பாதுகாப்பு படையில் கர்நாடகாவை சேர்ந்த 2 முதோல் இன நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம், திம்மாபுராவில் நாய்கள் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய சிறப்பு பாதுகாப்பு படையை சேர்ந்த 2 மருத்துவர்கள், வீரர்கள் இந்த மையத்துக்கு சமீபத்தில் வந்து பார்வையிட்டனர். பின்னர், கடந்த ஏப்ரல் 25ம் தேதி இங்கிருந்து 2 முதோல் இன நாய்க்குட்டிகளை எடுத்து சென்றனர். மோடியின் பாதுகாப்பு … Read more

கடனை திருப்பி கேட்ட பள்ளி ஆசிரியை தீ வைத்து எரிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகே உள்ள ராய்சார் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா (32). இவர் அதே ஊரை சேர்ந்த நபருக்கு ரூ.2.5 லட்சம் கடன் கொடுத்துள்ளார். இதை திரும்ப கேட்டதாக தெரிகின்றது. இது தொடர்பாக இருதரப்புக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி தனது 6 வயது மகனுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது அனிதாவை அந்த கும்பல் வழிமறித்துள்ளது. அச்சமடைந்த அனிதா அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் சென்று, போலீசுக்கு  அவசர எண்ணில் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், … Read more

கட்சியில் ஒவ்வொருவருக்கும் அமைச்சர் பதவி வழங்க முடியாது.. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் காட்டமாக பதில்..!

கட்சியில் ஒவ்வொருவருக்கும், எப்போதும் அமைச்சர் பதவி வழங்க முடியாது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் காட்டமாக தெரிவித்துள்ளார். ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ பிமா பார்தி, தனக்கு அமைச்சர் பதவி வழங்காதது குறித்து அதிருப்தி தெரிவித்து இருந்ததுடன், அமைச்சர் பதவியில் இருந்து லேசி சிங்கை நீக்காவிட்டால் தாம் கட்சியில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்து இருந்தார். இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நிதிஷ்குமார், பிமா பார்தி இவ்வாறு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று … Read more

ஜம்மு காஷ்மீரில் டிரோனில் வந்த வெடிபொருட்கள்; தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு: பாகிஸ்தானில்  இருந்து தீவிரவாதிகள் டிரோன் மூலம் அனுப்பிய வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான். இது குறித்து ஜம்மு காஷ்மீர் போலீசார் கூறுகையில்,‘‘ஜம்முவின் ஆர்னியா பகுதியில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி டிரோன் மூலம் வெடிபொருட்கள் போடப்பட்ட வழக்கில் போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து ஒரு தீவிரவாதியிடம் நடத்திய விசாரணையின் போது, ஒரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி  முகமது அலி உசைன் என்ற காசிமுக்கு … Read more

தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு, காஷ்மீரில் தற்காலிகமாக தங்கி இருப்பவர்களுக்கும் வாக்குரிமை; எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் தற்காலிகமாக குடியிருப்பவர்களும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்துள்ளது. இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தொகுதி எல்லை வரையறை முடிந்ததை தொடர்ந்து, அங்கு சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இதை சந்திப்பதற்கு … Read more

கொரோனா பலிகளை மறைத்த குஜராத் அரசு; அமெரிக்க நிபுணர்கள் அதிர்ச்சி அறிக்கை

புதுடெல்லி: அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகம், ஸ்டேன்போர்டு மருத்துவ பல்கலைக் கழகம், பெர்க்கிலி பல்கலைக் கழகம் மற்றும் இந்தியாவை சேர்ந்த தேசிய அறக்கட்டளை ஆகியவற்றை சேர்ந்த  ஆராய்ச்சியாளர்கள், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதல் 2021ம் ஆண்டு ஏப்ரல் வரை  குஜராத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த கொரோனா பலிகள் குறித்து ஆய்வு நடத்தினர். இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 162 நகராட்சிகளில் 90 நகராட்சிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள்,‘பிளோஸ் குளோபல்’என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், … Read more