குஜராத்தில் கனமழை: இதுவரை 83 பேர் உயிரிழப்பு

அகமதாபாத்: குஜராத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நவ்சாரி, வல்சாத், டாங், நர்மதா, சோட்டா உதேபூர், பஞ்ச் மகால் உள்ளிட்ட பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள் ளன. சுமார் 31 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் கனமழை தொடர்பான சம்பவங்களில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இதனால் குஜராத்தில் கனமழைக்கு உயரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு மற்றும் … Read more

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தம்பதியிடமிருந்து 45 கைத்துப்பாக்கிகள் பறிமுதல்.. போலீசார் தீவிர விசாரணை!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 45 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வியட்நாமில் இருந்து வந்த இந்தியத் தம்பதி துப்பாக்கிகளை கடத்தி வந்ததாகவும், கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் பயன்படுத்தும் வகையில் செயல்பாட்டில் இருந்ததாகவும் முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த துப்பாக்கிகளின் மதிப்பு 22 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜக்ஜித் சிங், ஜஸ்விந்தர் கவுர் தம்பதியிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு இருவரும் கைது செய்யப்பட் Source link

இளங்கலை மாணவர் சேர்க்கை; பல்கலை கழகங்களுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வாய்ப்பு

புதுடெல்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, இளங்கலை படிப்பு  சேர்க்கைக்கான கடைசி தேதியை நிர்ணயம் செய்யும்படி அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து பல்கலைக் கழக துணை வேந்தர்களுக்கும் யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  சில பல்கலைக் கழகங்கள் 2022-23ம் ஆண்டுக்கான இளங்கலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவு செய்யத் தொடங்கி உள்ளன. சிபிஎஸ்இ பிளஸ் 2 … Read more

கொரோனா பூஸ்டர் டோஸ் – மக்களுக்காக மத்திய அரசின் அடுத்த அதிரடி முடிவு

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜூலை 15-ஆம் நாள் தொடங்கி 75 நாள்களுக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை இலவசமாக வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் 75ஆவது சுதந்தர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள அனைத்து அரசு தடுப்பூசி மையங்களிலும் இலவச பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் … Read more

இந்திய, சீன அதிகாரிகள் 16-ம் கட்ட பேச்சுவார்த்தை

புதுடெல்லி: கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஜூன் 15-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இருதரப்பு வீரர்களுக் கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன வீரர்களும் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. இந்த … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் (2022-23ஆம் நிதியாண்டு) ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், மார்ச் 14 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. எனவே, எதிர்க்கட்சிகள் … Read more

பிரிட்டன் பிரதமர் பதவிக்கான முதற்கட்ட தேர்தலில் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் வெற்றி!

பிரிட்டன் பிரதமர் பதவிக்கான முதற்கட்ட தேர்தலில் 88 வாக்குகள் பெற்று இந்திய வம்சாவளி ரிஷி சுனக் வெற்றி பெற்றார். வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் உள்பட 8 வேட்பாளர்கள் பிரதமர் பதவிக்காக போட்டி போட்ட நிலையில், 30 வாக்குகளுக்கும் குறைவாக பெற்ற இரு உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இரு கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்கள் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய உள்ளனர். 6 பேர் பிரதமர் போட்டியில் நிடிக்கும் … Read more

இந்திய நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டது மக்களவை செயலகம்

டெல்லி: இந்திய நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், அழிவு சக்தி, காலிஸ்தானி, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது.

”வலிக்குதுங்க.. இப்படி பன்னாதீங்க” – ஹார்ன் அடிப்போருக்கு ஆட்டோக்காரரின் நச் பதில்!

வாகனங்களில் பதிக்கப்பட்டிருக்கும் வசனங்கள் எப்போதும் மக்களை கவர்வதை தவறாது. குறிப்பாக ஆட்டோக்களில் முன்பெல்லாம் “சீறும் பாம்பை நம்புங்கள்.. சிரிக்கும் பெண்ணை நம்பாதீர்” , ”பிரசவத்திற்கு இலவசம்” என எழுதப்பட்டிருக்கும். அதேபோல, குடித்துவிட்டு வண்டி ஓட்டக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் ”லைட்டை போட்டு வண்டி ஓட்டு, லைட்டா போட்டு வண்டி ஓட்டாதே” எனவும், ’வண்டி ஓட்டுவதற்கே பறப்பதற்கு அல்ல’ போன்ற வசனங்களும் இடம்பெற்றிருக்கும். இதுப்போன்று பல வசனங்கள், வாசகங்கள் சிரிப்பலை ஏற்படுத்தவும், சிந்திக்கவும் வைக்கும். அந்த வகையில் டெல்லியைச் … Read more

ராமர் பாலம் தேசிய சின்னமா? உச்ச நீதிமன்றம் 26-ல் விசாரணை

புதுடெல்லி: இலங்கைக்கும், தமிழகத்தின் தென்கிழக்கு கடற்பகுதியான பாம்பன் தீவுக்கும் இடையே ராமர் பாலம் இருப்பதாகக் கூறப்படுகிறது. சுண்ணாம்புக் கற்களால் உருவான இந்த பாலம் ஆதாம் பாலம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. முந்தைய காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது சேதுசமுத்திரக் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, இலங்கையின் மன்னார் பகுதியையும், பாக் ஜலசந்தி யையும் இணைக்க கடற்பகுதியில் 83 கி.மீபகுதிக்கு ஆழமாக கால்வாயை உருவாக்கும் பணிகள் நடைபெற்றன. இந்தத் திட்டத்துக்கு பல்வேறு … Read more