மேற்குவங்க ஆசிரியர் நியமனத்தில் நடந்தது என்ன?

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த 2014 – 2016 வரை நடந்த அரசு ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. தகுதித் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மெரிட் பட்டியலில் இடம் பெற்றனர். பலர் வெற்று விடைத்தாள்களை, பெயர், முகவரியுடன் சமர்ப்பித்து, உதவி ஆசிரியர்களாக நியமன ஆணைகளை பெற்றனர். இதுகுறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஏராளமான புகார் மனுக்கள் குவிந்தன. இந்நிலையில் 13,000 குரூப் டி ஊழியர்கள் நியமன குழுவின் பதவிக் காலம் 2019-ம் ஆண்டுடன் … Read more

மாணவர்களுக்கு உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவருந்திய அசாம் முதலமைச்சர்

அசாமில் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் அட்சயப் பாத்திரம் திட்டத்தின் சமையற்கூடத்தைத் தொடக்கி வைத்த முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வ சர்மா மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அசாமில் ஏற்கெனவே 54 இடங்களில் அட்சயப் பாத்திரம் சமையற் கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜோர்காட்டில் 55ஆவது சமையற்கூடத்தை முதலமைச்சர் தொடக்கி வைத்தார். Source link

உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த 127 பேரில் 66 நீதிபதிகள் நியமனம்: நாடாளுமன்றத்தில் அரசு தகவல்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த 127 பேரில் 66 நீதிபதிகளை மட்டும் ஒன்றிய அரசு நியமித்துள்ளது. மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த 2021 டிசம்பர் 1ம் தேதி முதல் கடந்த 26ம் தேதி வரை உச்ச நீதிமன்ற கொலிஜியம் 140 பேரை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது. இதில், 127 புதிய பரிந்துரைகளில் 61 நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 66 பெயர்கள் சமீபத்தில் … Read more

அரசு மருத்துவமனையில் அழுக்கான பிய்ந்த படுக்கையில் துணைவேந்தரைப் படுக்க வைத்த பஞ்சாப் அமைச்சர்..!

பஞ்சாப் மாநிலம் பரீத்கோட் அரசு மருத்துவமனையில் அழுக்கடைந்த படுக்கை விரிப்பின் மீது பல்கலைக்கழகத் துணைவேந்தரைப் படுக்க வைத்த நல்வாழ்வுத்துறை அமைச்சர் அதன் மோசமான நிலையை உணரச் செய்தார். குருகோவிந்த் சிங் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளிலும் அமைச்சர் சேட்டன் சிங் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளின் படுக்கைகள் அழுக்கடைந்தும் பிய்ந்தும் இருந்ததைக் கண்ட அவர், அதன் நிலையை உணரும்படி துணைவேந்தரை அதன்மீது படுக்க வைத்தார். Source link

ஓடுபாதையில் இருந்து விலகி சேற்றில் சிக்கி நின்ற விமானம்: பயணிகள் அலறல்

கவுகாத்தி: அசாமில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் இருந்து புல்வெளி சேற்றில் சிக்கியதால் பயணிகள் பதற்றமடைந்தனர். அசாமின் ஜோர்ஹாட்டில் இருந்து கொல்கத்தாவிற்கு நேற்று முன்தினம் இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 98 பயணிகள் அமர்ந்து இருந்தனர். விமானம் புறப்பட தயாரானபோது ஓடுபாதையில் இருந்து விலகியது. இதனால் அருகில் இருந்த புல்வெளியின் சேற்றில் விமானத்தின் சக்கரங்கள் சிக்கின. இதைப் பார்த்து பயணிகள் அலறினர். விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் … Read more

இனிமேல் 45 நாட்கள் கிடையாது; மக்களின் புகாருக்கு 30 நாட்களில் தீர்வு: ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: இணையதளம் மூலமாக மக்கள் அளிக்கும்  புகார்கள் மீது தீர்வு காண்பதற்கான அவகாசம் 45 நாட்களில் இருந்து 30 நாட்களாக ஒன்றிய அரசு குறைத்துள்ளது. அரசுத் துறைகள், அமைப்புகள் தொடர்பாக  பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக, ‘சிபிகிராம்ஸ்’ என்ற ஆன்லைன் இணையதளம் செயல்படுகிறது. இதில், பொதுமக்களின் தேவைகளை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து ஒன்றிய அரசின் நிர்வாக சீர்திருத்த துறை மற்றும் பொதுமக்கள் குறைகேட்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்கள் தெரிவிக்கும் … Read more

தங்கம், வெள்ளிக் கட்டிகள் விற்பனைச் சந்தையைத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி..!

உலகளாவிய நிதியளிப்புக்கு வழிகாட்டும் அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் நாடுகளின் வரிசையில் இப்போது இந்தியாவும் இணைந்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் காந்திநகரில் பன்னாட்டு நிதிச் சேவை மையங்கள் ஆணையத்தின் தலைமையகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன், பன்னாட்டுத் தங்கம் வெள்ளிச் சந்தையையும் தொடக்கி வைத்தார். என்எஸ்இ – ஐஎப்எஸ்சி – சிங்கப்பூர் பங்குச்சந்தை ஆகியவற்றை இணைக்கும் தளத்தையும் அவர் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும், சாதனை … Read more

100 அடி ஆழ சுரங்கப்பாதையில் கிரேன் சங்கிலி அறுந்து 5 தொழிலாளர்கள் பலி

திருமலை: தெலங்கானாவில் நள்ளிரவில் 100 அடி சுரங்கப்பாதையில் கிரேன் அறுந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தெலங்கானா மாநில அரசு நாகர்கர்னூல், மகபூப்நகர், விகாராபாத், நாராயணப்பேட்டை, ரங்காரெட்டி மற்றும் நல்கொண்டா மாவட்டங்களில் உள்ள மலை பகுதிகளில் தற்போது 10 லட்சம் ஏக்கராக உள்ள பாசன வசதியை 12.3 லட்சம் ஏக்கராக அதிகரிக்க உள்ளது. இதற்காக, ஸ்ரீசைலம் அணையில் இருந்து 5 நீரேற்று நிலையங்கள் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல, ரூ35 ஆயிரம் கோடியில் பாலமுரு- ரங்காரெட்டி நீரேற்று பாசன … Read more

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி கன்வீல்கர் ஓய்வு

புதுடெல்லி:கடந்த 2016ம் ஆண்டு மே 13ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர், மகாராஷ்டிராவை சேர்ந்தவர். இமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிவர். உச்ச நீதிமன்றத்தின் 3வது மூத்த நீதிபதியாக இருந்த இவர், நேற்று ஓய்வு பெற்றார். தமிழகம் சம்பந்தப்பட்ட காவிரி, மேகதாது அணை, முல்லைப் பெரியாறு, சாத்தான் குளம், காவிரி நீர் மேலாண்மை ஆணையம், கூடங்குளம் விவகாரம், 69 சதவீத இட ஒதுக்கீடு ஆகிய வழக்குகளை … Read more

அரசுத் துறை பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் திட்டம் எதுவும் இல்லை: மத்திய அரசு

புதுடெல்லி: “அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை” என்று விழுப்புரம் எம்.பி. ரவிக்குமாரின் கேள்விக்கு அளித்த பதிலில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் தெரிவித்துள்ளார். இது குறித்து விழுப்புரம் மக்களவை தொகுதி எம்.பியான டி.ரவிகுமார் மக்களவையில் எழுப்பிய கேள்வியில், ”மாதவிடாய் சலுகைகள் மசோதா, 2018-இல் வழங்கப்பட்ட மாதவிடாய் விடுப்பு போன்ற விதிகளை அரசாங்கம் செயல்படுத்துகிறதா? தனியார் அலுவலகங்களில் இந்தக் … Read more