“நாட்டின் சூரிய ஒளி மின்னுற்பத்தித் திறன் 8 ஆண்டுகளில் 20 மடங்கு உயர்வு” – பிரதமர் மோடி
இந்தியாவில் சூரிய ஒளி மின்னுற்பத்தித் திறன் கடந்த எட்டாண்டுகளில் 20 மடங்கு அதிகரித்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பெங்களூரில் கட்டப்பட்டுள்ள போஷ் ஸ்மார்ட் வளாகத்தைப் பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புக்காக இன்னும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். சூழலை மாசுபடுத்தாமல் இந்தியா வளர்ச்சியடைந்து வருவதாகவும், அரசின் அனைத்துச் செயல்பாடுகளிலும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதே நமது நோக்கம் என்றும் குறிப்பிட்டார். ஜெர்மனியின் போஷ் நிறுவனம் இந்தியாவில் தொழில்தொடங்கி … Read more