அடுத்தது என்ன?- ஆட்சியை இழந்த சிவசேனா முன் இருக்கும் சவால்கள்: ஒரு பார்வை

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சிக்கவிழ்ப்பு சுமுகமாக நடந்தேறியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இனி சிவசேனாவின் எதிர்காலம் என்ன? சிவசேனா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம். சிவசேனாவின் எதிர்காலம் என்ன? சிவசேனாவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய ஏக்நாத் ஷிண்டே முதல்வராகிவிட்டார். அவர் வெற்றிகரமாக முதல்வர் பதவியைப் பெற்றார் என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டுமா இல்லை பாஜக ஷிண்டே குழுவுக்கு அதிகாரத்தை கொடுத்துவிட்டு அதை தன் கைப்பாவையாக … Read more

பி.பி.எப். வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – மத்திய அரசு

பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. Puplic Provdient Fund எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 7 புள்ளி ஒரு சதவிகிதமாகவும், தேசிய சேமிப்பு பத்திரத்துக்கான வட்டி ஆறு புள்ளி எட்டு சதவிகிதமாகும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை, பிஎப் திட்டத்திற்கு வழங்கும் பங்களிப்பு: அமலுக்கு வருகிறது புதிய தொழிலாளர் விதிகள்

டெல்லி : தொழிலாளர் நலன் தொடர்பான புதிய கொள்கைபடி, பணியில் இருந்து விடுபடும் ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட இதர பணப் பலன்களை 2 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. புதிய தொழிலாளர் நல கொள்கைகளில் எண்ணற்ற மாற்றங்கள் இன்று முதல் இடம் பெற உள்ளன. குறிப்பாக ஊழியர்களின் ஊதியம், அவர்கள் பிஎப் திட்டத்திற்கு வழங்கும் பங்களிப்பு, பணி நேரம் போன்றவற்றில் மாற்றம் நடைபெற உள்ளது. ஊழியர்களின் பணி சூழல், தொழிலாளர் நலன்,ஆரோக்கியம் மற்றும் … Read more

உதய்பூர் படுகொலை: கொலையாளிகளுக்கு ஜூலை 13 வரை நீதிமன்ற காவல்

ராஜஸ்தானின் உதய்பூரில் தையல் கடை உரிமையாளர் கன்னையா லாலை படுகொலை வழக்கில் கைதான முகம்மது ரியாஸ் அட்டாரி ஆகிய இருவரையும் வரும் 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமிய இறை தூதர் முகமது நபி குறித்த நுபுர் சர்மாவின் விமர்சனம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவர் பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு ஆதரவாக, ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்கடை நடத்தும் கன்னையா லால் டெனி (40) என்பவர் சமூக வலைத்தளத்தில் கருத்து … Read more

வயிற்றில் இருந்து 233 பொருட்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!!

துருக்கியை சேர்ந்த ஒருவரின் வயிற்றில் இருந்த 233 பொருட்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். துருக்கியை சேர்ந்த ஒருவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது சகோதரர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு எண்டோஸ்கோபி, எக்ஸ்ரே எடுக்கசொல்லியுள்ளனர். அவரும் எண்டோஸ்கோபி, எக்ஸ்ரே எடுத்து அவற்றை மருத்துவரிடம் காட்டியுள்ளார். இதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அவரது வயிற்றில், பேட்டரிகள், காந்தம், நகங்கள், கண்ணாடி துண்டுகள், … Read more

ஜாமீனில் வெளியே வந்த சில மணி நேரங்களில் ரவுடி வெட்டிக் கொலை!!

கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சில மணி நேரங்களில் பிரபல ரடிவு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி குண்டார் (எ) சக்திவேல் (35) மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பாக 2021 நவம்பர் மாதம் கைதாகி மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மதியம் 3.30 மணிக்கு ஜாமீனில் வெளியே வந்த அவர், … Read more

ஆந்திராவில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து – ஆட்டோவில் சென்ற 6 பெண்கள் உயிரிழப்பு

அனந்தபூர்: ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டத்தைச் சேர்ந்த 11 விவசாய கூலி தொழிலாளர்கள் நேற்று காலை ஒரு ஷேர் ஆட்டோவில் வேலைக்குச் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, ஆட்டோவின் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. ஆனால், 5 பேர் ஆட்டோவில் உடல் கருகியும், மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்தனர். ஆட்டோ ஓட்டுநர் உட்பட மீதியுள்ள 7 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். இது தொடர்பாக தாடிமர்ரி போலீஸார் மற்றும் மின்சார அதிகாரிகள் சம்பவ … Read more

ஜம்மு காஷ்மீரின் இறுதி வாக்காளர் பட்டியலை அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டம்!

ஜம்மு காஷ்மீரின் இறுதி வாக்காளர் பட்டியலை அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர் வெளியாகும் முதல் வாக்காளர் பட்டியல் இது. தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டதையடுத்து புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31 அச்சிடும் வகையில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்யுமாறு ஜம்மு காஷ்மீர் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Source link

அமலாக்கத்துறை அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு ஆஜராகும்போது சிவசேனாவின் திரள வேண்டாம்: சஞ்சய் ராவத்

மும்பை : சிவசேனா கட்சி மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் இன்று பத்ரா சாவல் நிலமோசடி வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார். அமலாக்கத்துறை அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு ஆஜராகும்போது சிவசேனாவின் திரள வேண்டாம் என்றும் ராவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி 7 வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ஜிரிபம் மற்றும் இம்பால் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. நோனே மாவட்டம் துபுல் ரயில் நிலையம் அருகே கட்டுமானப் பணி நடைபெறுவதால் அப்பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக, 107 டெரிடோரியல் ஆர்மி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கன மழை பெய்ததால் நேற்று முன்தினம் இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. ராணுவ முகாம் மீது மண் சரிந்ததில் வீரர்கள் 7 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 19 பேர் மீட்கப்பட்டுள்ளனர். … Read more