கேரளாவில் உள்ள ராகுல் காந்தி எம்.பி. அலுவலகத்தில் காந்தியின் படத்தை சேதப்படுத்திய 4 காங்கிரஸ் தொண்டர்கள் கைது
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி எம்.பி. அலுவலகத்தில் தேசத் தந்தை மாகாத்மா காந்தி படத்தை சேதப்படுத்தியதாக 4 காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றிபெற்றார். வயநாடு மாவட்ட தலைநகர் கல்பேட்டையில் ராகுலின் எம்.பி. அலுவலகம் செயல்படுகிறது. கடந்த ஜூன் 24-ம் தேதி ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் ராகுலின் எம்.பி. அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். … Read more