வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி..!

திருவனந்தபுரம்: வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பேட்டியளித்தார். பரிசோதனை முடிவு வரும் வரை தொற்று பாதித்தவர், குடும்பத்தினரை தனிமைப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

சகுனி, சர்வாதிகாரி, காலிஸ்தானி.. நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள்: பட்டியல் தயார்

நாடாளுமன்ற இரு அவைகளிலும் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் அடங்கிய பட்டியலை மக்களவை செயலர் வெளியிட்டிருக்கிறார். அதன்படி ஜூம்லாஜீவி, பால் புத்தி, கோவிட் ஸ்ப்ரெட்டர், ஸ்நூப் கேட் உள்ளிட்ட பல வார்த்தைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 18 ஆம் தேதி (ஜூலை 18) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்ந்நிலையில் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் சகுனி, சர்வாதிகாரி, காலிஸ்தானி, ஜெய்சந்த், வினாஷ் புருஷ் ஆகிய பார்த்தைகள் அவை நாகரிகம் அற்றவை. உறுப்பினர்கள் … Read more

நீட் முதுநிலை தேர்வு முடிவை வெளியிட்டது தேசிய தேர்வு வாரியம்

டெல்லி: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வாரியம் முடிவை தேசிய தேர்வு வாரியம் வெளியிட்டது. results.natboard.edu.in என்ற இணையதளத்தில் நீட் முதுநிலை தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்

சாமி கும்பிட வந்த சிறுமிக்கு கோயிலுக்குள் பாலியல் தொல்லை… பூசாரிக்கு சிறை

சாமி கும்பிட வந்த ஒன்பது வயது சிறுமியை கோயிலுக்குள் அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த 32 வயது கோயில் பூசாரி போக்சோவில் கைது செய்யப்பட்டார். தமிழக கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறு அருகே வல்லக்கடவு பகுதியில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முலா பகுதியைச் சேர்ந்த விபின் என்ற 32 வயது நபர் பூசாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஒரு மாதமாக விபின் வல்லக்கடவு பகுதியில் தங்கி அந்தக் கோயில் … Read more

பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமருடன் விருந்து: 16-ல் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைமுறை குறித்து செயல் விளக்கம்

புதுடெல்லி: வரும் 16-ம் தேதி பிரதமருடன் நடைபெற உள்ள இரவு விருந்தில் பங்கேற்குமாறு பாஜக எம்.பி.க்களுக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் நடைமுறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை24-ம் தேதியுடன் முடி வடைகிறது. இதையடுத்து, வரும் 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜன … Read more

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என கூறிய வார்த்தைகளை நான் பேசுவேன்: டெரிக் ஓ பிரையன்

டெல்லி: நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என கூறிய வார்த்தைகளை நான் பயன்படுத்துவேன் என டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட வார்த்தைகளை பேச தடை விதித்ததற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது. தடை விதித்த வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பேசுவேன்; சபாநாயகர் என்னை சஸ்பெண்ட் செய்யட்டும் எனவும் டெரிக் ஓ பிரையன் கூறியுள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசம்: நாளை முதல் 75 நாட்களுக்கு போடப்படும் என மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாளை முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி, கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக … Read more

தண்டவாளத்துக்கும், ரயிலுக்கும் இடையே சிக்க இருந்த பெண் பயணி… உயிரை காத்த பெண் காவலர்… வெளியான வீடியோ

குஜராத் மாநிலம் அகமதாபாத் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தின் இடையே விழ இருந்த பயணியை பெண் காவலர் மீட்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. ஓடும் ரயிலில் ஏறிய பயணி நொடிப் பொழுதில் கால் இடறி தண்டவாளத்தும், ரயிலுக்கு இடையே விழ இருந்தார். இதைக் கண்ட பணியில் இருந்த பெண் காவலர் Mandakini Parmar, நொடிப் பொழுதில் பயணியின் உயிரை மீட்டார்.    Source link

பாஜகவை குறித்து எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தையும் அரசு தடை செய்துள்ளது: மஹுவா மொய்த்ரா எம்.பி. குற்றச்சாட்டு

கொல்கத்தா; நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளின் புதிய பட்டியல் சங்கி என்ற வார்த்தை மட்டும் தான் இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். பாஜக எவ்வாறு இந்தியாவை அழித்து வருகிறது என்பது குறித்து பேசும் போது, எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் அனைத்து வார்த்தைகளையும் அரசு தடை செய்துள்ளது எனவும் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தில் கனமழை: இதுவரை 83 பேர் உயிரிழப்பு

அகமதாபாத்: குஜராத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நவ்சாரி, வல்சாத், டாங், நர்மதா, சோட்டா உதேபூர், பஞ்ச் மகால் உள்ளிட்ட பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள் ளன. சுமார் 31 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் கனமழை தொடர்பான சம்பவங்களில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இதனால் குஜராத்தில் கனமழைக்கு உயரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு மற்றும் … Read more