வீட்டை காலி செய்ய மறுத்த வாடகைதாரர் – வாசல் படியில் தங்கயிருக்கும் உரிமையாளர்

வாடகைதாரர் வீட்டை காலி செய்ய மறுத்ததால் அந்த வீட்டின் சொந்தக்காரர்களான வயதான தம்பதியர் வாசல் படியில் தங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர்கள் சுனில் குமார் – ராக்கி குப்தா தம்பதியர். இவர்களுக்கு நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. சுனில் குமார் மும்பையில் பணிபுரிந்ததால் அந்த வீட்டை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ப்ரீத்தி என்பவருக்கு 11 மாதக்கால லீஸ்-க்கு விட்டிருந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் சுனில் … Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பாக எத்தனை வழக்குகள்? சமரசமாக செல்ல வாய்ப்புள்ளதா?.: உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பாக எத்தனை வழக்குகள்? சமரசமாக செல்ல வாய்ப்புள்ளதா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ்-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்கும்; அதுவரை தற்போதைய நிலை தொடரும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

குஜராத்தில் ரூ.1,000 கோடி மதிப்பில் 3 புதிய திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

அகமதாபாத்: குஜராத்தின் சபர் பால் பண்ணையில் ரூ.1,000 கோடி மதிப்பிலான 3 திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். குஜராத்தின் சபர்கந்தா மாவட்டம், கதோடா சவுக்கி என்ற இடத்தில் சபர் பால் பண்ணை உள்ளது. இங்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான 3 திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில் நாளொன்றுக்கு 120 டன் உற்பத்தி திறன் கொண்ட பால் பவுடர் ஆலை மற்றும் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் பதப்படுத்திய பாலை பாக்கெட்டில் … Read more

கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 15,200 கன அடியாக குறைப்பு

கர்நாடக: கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 15,200 கன அடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து 17,600 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது குறைந்துள்ளது.

பாஜக நிர்வாகி கொலையில் மங்களூருவில் 2 பேர் கைது

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டம் மங்களூரு அருகேயுள்ள பெல்லாரேவை சேர்ந்தவர் பிரவீன் நெட்டூரு (28). பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளராக இருந்த இவரை கடந்த 26-ம் தேதி இரவு 9.30 மணியளவில் மர்ம நபர்கள் அடித்து கொன்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் குதித்த‌தால் தக்ஷின கன்னட மாவட்டத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டது. இதனால் சனிக்கிழமை மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு … Read more

குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி. வாழ்த்து :வீரமங்கை ராணி வேலுநாச்சியார் படத்தை வழங்கினார்!!

டெல்லி :டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி. வாழ்த்து தெரிவித்தார். திரவுபதி முர்மு கடந்த திங்கட்கிழமை இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்று, நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினப் பெண்மணி ஆனார்.இதைத் தொடர்ந்து திரவுபதி முர்முவை நேரிலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் டெல்லி சென்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி. இன்று காலை திரவுபதி … Read more

மிக் 21 ரக போர் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து – இரண்டு விமானிகள் பரிதாப பலி

ராஜஸ்தானில் மிக் 21 ரக போர் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள உட்டார்லாய் கிராமத்தில் இந்திய விமானப் படை தளம் அமைந்துள்ளது. இங்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் விமானப் பயிற்சிகள் நடைபெறும். அந்த வகையில், நேற்று இரவு மிக் 21 ரக போர் விமானம் பயிற்சிக்காக கொண்டு செல்லப்பட்டது. அதில் இரண்டு விமானிகள் இருந்தனர். இந்நிலையில், இரவு 9.10 மணியளவில் பார்மர் … Read more

குடியரசுத் தலைவர் குறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சர்ச்சை கருத்து – நாடாளுமன்றத்தில் பாஜக – காங்கிரஸ் மோதல்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய சர்ச்சை கருத்தால் நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸ் எம்பிக்களுக்கு இடையே நேற்று கடுமையான மோதல் ஏற்பட்டது. மேற்குவங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி டெல்லியில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து அவர் சர்சைக்குரிய வகையில் பேசினார். இந்த வீடியோ நாடு முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் … Read more

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி. வாழ்த்து!!

டெல்லி :டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி. வாழ்த்து தெரிவித்தார். திரவுபதி முர்மு கடந்த திங்கட்கிழமை இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்று, நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினப் பெண்மணி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில் அமைச்சர் பதவியில் இருந்து பார்த்தா சட்டர்ஜி நீக்கம் – கட்சி பதவிகளையும் பறித்து மம்தா நடவடிக்கை

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் கல்வி அமைச்சராகவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்தவர் பார்த்தா சட்டர்ஜி. இவர் கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியர், ஊழியர் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, கொல்கத்தாவில் பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 22-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதாவின் வீட்டில் ரூ.21 கோடி ரொக்கம் நகைகள், ரூ.2 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பணம் … Read more