ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அதிரடி முடிவு பேக்கிங் கோதுமை மாவு, அப்பளம், தயிர், தேன், மோர், லஸ்சிக்கு 5% வரி

* கத்தி, பிளேடு, ஷார்ப்பனர், காசோலையும் தப்பவில்லை* ஓட்டல், மருத்துவமனை அறைகளுக்கான சலுகை ரத்துசண்டிகார்: பேக்கிங் செய்யப்படாத பிராண்ட் அல்லாத உணவு பொருட்களுக்கு இருந்த வரி விலக்கை திரும்பப் பெற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காசோலை, அஞ்சலக சேவைகள், மருத்துவமனை அறை வாடகைக்கும் வரி விதிக்கப்படும். ஆயிரம் ரூபாய்க்கு கீழுள்ள ஓட்டல் அறை வாடகைக்கு வரி விதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் சண்டிகாரில் நேற்று முன்தினம் தொடங்கியது. … Read more

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே!!

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் ஆளுநர் உத்தரவுக்கு எதிராக சிவசேனா கொறடா சுனில் பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், உத்தவ் தாக்கரே அரசு இன்று பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் இறுதி உத்தரவுக்கு … Read more

கொரோனா பரவல் – மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, நேற்று 14,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,34,33,345 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 11,574 பேர் குணமடைந்தனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,28,08,666 ஆக … Read more

தம்பியின் கோபத்தை தணிக்க 434 மீட்டர் கடிதம் எழுதிய அக்கா – கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு நகரில் வசிப்பவர் கிருஷ்ணபிரசாத். இவரது அக்கா கிருஷ்ண பிரியா கேரள அரசில் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கிருஷ்ண பிரியா திருமணமாகி முண்டகாயம் கிராமத்தில் வசிக்கிறார். சர்வதேச சகோதரர்கள் தினத்தன்று ஆண்டுதோறும், தவறாமல் தன் தம்பி கிருஷ்ணபிரசாத்தை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்வார் கிருஷ்ண பிரியா. ஆனால், இந்த ஆண்டு வேலைப்பளு காரணமாக மே 24-ல் சகோதரர் தினத்தில் அவரால் போன் செய்ய முடியவில்லை. இதையடுத்து கிருஷ்ண பிரசாத், அக்காவுக்கு … Read more

40 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன்… 7 மணி நேரமாக போராடி உயிருடன் மீட்பு

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் 40 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 5 வயது சிறுவன் 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான். நாராயண்புரா பதர்பூர் கிராமத்தைச் சேர்ந்த 5 வயதான திபேந்திர யாதவ், நேற்று மதியம் 2 மணியளவில் விளையாடி கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் … Read more

அமர்நாத் யாத்திரை முதல் குழு பயணம்: 4,890 பக்தர்கள் புறப்பட்டனர்

ஜம்மு: கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அமர்நாத் யாத்திரை நேற்று தொடங்கியது. பாகல்காம் மற்றும் பால்டால் வழியாக யாத்திரை நடைபெறும். பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்காக 43 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி ரக்‌ஷா பந்தனன்று யாத்திரை முடிவுக்கு வரும். முதல் கட்டமாக 4890 பக்தர்கள் யாத்திரையை தொடங்கி உள்ளனர். பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து அமர்நாத் யாத்திரை குழுவை ஆளுநர் மனோஜ் சின்கா … Read more

சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அசாமுக்கு ரூ.51 லட்சம் நிதியுதவி

குவாஹாட்டி: அசாம் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மாகாராஷ்டிராவை சேர்ந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் ரூ.51 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளனர். மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். இந்நிலையில் சிவசேனா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அக்கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என அவர்கள் கோரினர். … Read more

மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று தலைமை வழக்கறிஞராக தொடர கே.கே.வேணுகோபால் முடிவு

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக உள்ள கே.கே.வேணுகோபால் அரசின் கோரிக்கையை ஏற்று பதவியில் தொடர ஒப்புக்கொண்டுள்ளார். 91 வயதான மூத்த வழக்கறிஞரான கே.கே.வேணுகோபால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2020-ம் ஆண்டுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட அவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பதவியில் தொடர் உள்ளார்.  Source link

நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

திருவனந்தபுரம்: சாட்சிகளை மிரட்டியது உள்பட ஜாமீன் நிபந்தனைகளை மீறியதால், நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி குற்றப்பிரிவு போலீஸ் தாக்கல் செய்த மனுவை, எர்ணாகுளம் விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.பிரபல மலையாள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் சதி திட்டம் தீட்டியதாக கூறி, திலீப் கைது செய்யப்பட்டார். கடந்த 85 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ‘சாட்சிகளை மிரட்டவோ, கலைக்கவோ கூடாது. ஆதாரங்களை அழிக்கக்கூடாது’ … Read more

உதய்ப்பூர் தையல்காரர் கொலை – அலட்சியம் காட்டினாரா ராஜஸ்தான் போலீஸார்?

புதுடெல்லி: உதய்ப்பூரில் தையல்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிடிபட்ட குற்றவாளிகளுக்கு பாகிஸ்தான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முகம்மது நபியை விமர்சித்த நுபுர் சர்மா, பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவு தெரிவித்து ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் தையல் கடை வைத்திருந்த கன்னையா லால் டெலி (40) என்பவர், கடந்த 10-ம் தேதி சமூக வலைதளங்களில் கருத்து … Read more