'ஜோக் அடிக்கிறார்கள்' – பாஜக புகாருக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பதிலடி
குடியரசுத் துணைத் தலைவராக ஆசைப்பட்டதாகவும். அது நிறைவேறாததாலேயே நிதிஷ் குமார் பாஜக கூட்டணியை பிஹாரில் முறித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் சுஷில் குமார் மோடி. ஆனால் பதவி ஆசை இல்லாத தன்னை பாஜக பகடி செய்வதாக பதிலடி கொடுத்துள்ளார் நிதிஷ் குமார். சுஷில் குமார் மோடியின் விமர்சனம் குறித்து நிதிஷ் குமாரிடம் இன்று காலை நிருபர்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “குடியரசுத் துணைத் தலைவராக வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. … Read more