“நீங்கள் தான் மோடி ஜி, நீங்கள் தான் தினமும் டிவியில் வருவீர்கள்” – பிரதமரை சிரிக்க வைத்த 5 வயது சிறுமி

புதுடெல்லி: பிரதமர் மோடியின் அலுவலகத்தில் அவருக்கும் ஐந்து வயது சிறுமிக்கும் இடையே நடந்த உரையாடல் கவனம் பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் தொகுதியின் பாஜக எம்பி அனில் ஃபிரோஜியாவின் குடும்பத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இப்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. காரணம், எம்பி அனில் ஃபிரோஜியாவின் 5 வயது மகள் அஹானா. பிரதமருக்கும் அஹானாவுக்கும் இடையே நடந்த வேடிக்கையான உரையாடலே சந்திப்பு பேசப்படுவதற்கு காரணம். சந்திப்பின்போது ஐந்து வயதான … Read more

குரங்கம்மைக்கு தடுப்பூசி தயாரிப்பது தொடர்பாக ஆலோசனை.!

குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி தயாரிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர் என இதுவரை இந்தியாவில் 4 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குரங்கம்மை தடுப்பூசி மற்றும் அதனை கண்டறிவதற்கான பரிசோதனை கருவிகளை பொதுத்துறை – தனியார் கூட்டமைப்பில் உருவாக்க திட்டமிட்டு, பல்வேறு மருந்து நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.  Source link

ஷில்பா ஷெட்டியின் தங்கை ஷமிதா ஷெட்டி காதல் முறிவு

மும்பை: ஷில்பா ஷெட்டியின் சகோதரியான ஷமிதா ஷெட்டி, தனது காதலன் ராகேஷ் பாபத்துடனான உறவு முறிந்து விட்டதாக அறிவித்துள்ளார். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் சகோதரியான ஷமிதா ஷெட்டி (43), நடிகர் ராகேஷ் பாபத் என்பவருடன் டேட்டிங்கில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். அதற்கேற்றால் போல், ராகேஷ் பாபத் – ஷமிதா ஷெட்டி ஜோடி, பல இடங்களில் ஒன்றாகக் காணப்பட்டனர். ஆனால் இருவருக்கும் இடையேயான உறவு திருமணம் வரை செல்லவில்லை. … Read more

ரூ.3,419 கோடி! ஷாக் அடித்த கரண்ட் பில்லால் ஹவுஸ் ஓனருக்கு தீவிர சிகிச்சை!

மத்தியப் பிரதேசத்தில் மாத மின்கட்டணமாக 3 ஆயிரத்து 419 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்ததால், வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். குவாலியரைச் சேர்ந்த பிரியங்கா என்பவரது வீட்டிற்கு மாத மின் கட்டணமாக 3,419 கோடி ரூபாய் செலுத்தவேண்டும் என எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. இதனை பார்த்த பிரியங்காவுக்கு ரத்த அழுத்தம் அதிகமான நிலையில் இதய நோயாளியான அவரது மாமனாருக்கோ அதிர்ச்சியில் மயக்கமே வந்துவிட்டது. தகவலறிந்த மத்தியப் பிரதேச மின்சாரத்துறை அதிகாரிகள், மின் கட்டணம் ஆயிரத்து … Read more

மாநிலங்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 20 எம்பி.க்கள் 50 மணி நேர போராட்டம்: நாடாளுமன்ற வளாகத்தில் இரவு தங்கினர்

புதுடெல்லி: மாநிலங்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 20 எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்திலேயே தங்கியிருந்து 50 மணி நேர போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரிய மக்களவை எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கூட்டத் தொடர் முழுவதும் நீக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் திமுகவின் 6 எம்பிக்கள் உட்பட 19 எதிர்க்கட்சி எம்பிக்கள் இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், … Read more

’கேட்கக்கூடாத கேள்விகளை இதோ 'ராஜா'விடம் கேட்கிறேன்’ – ராகுல் காந்தி எழுப்பிய 10 கேள்விகள்!

நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து மத்திய அரசுக்கு ராகுல் காந்தி 10 கேள்விகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்சனைகளை எழுப்ப அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் பிரதமர் மோடியை ‘ராஜா’ என்று குறிப்பிட்டு, “மழைக்கால கூட்டத்தொடரில், பிரதமருடன் மக்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்க விரும்பினோம். பொதுமக்களின் பல கேள்விகளுக்கு பிரதமரும் … Read more

ரூ.30 கோடி மதிப்பிலான கப்பலை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை.!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க வழக்கில், 30 கோடி ரூபாய் மதிப்பிலான கப்பலை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் நெருங்கிய உதவியாளரும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவருமான பங்கஜ்மிஸ்ரா தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிமம் இன்றி இயக்கப்பட்டு வந்த அந்த கப்பல், சட்டவிரோதமாக சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்கள், பாறைகளை கொண்டு செல்ல பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் ஏற்கனவே 18 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  Source … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு.: சோனியா காந்தியிடம் 3-வது நாளாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் 3-வது நாளாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது. மொத்தம் 3 நாட்களிலும் சுமார் 11 மணி நேரம் சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரித்துள்ளது.

’மோடி ஸ்டிக்கரும், கருப்பு மை பூச்சும்’.. செஸ் ஒலிம்பியாட் பேனரில் வெடித்த சர்ச்சை!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை ( ஜூலை 28) முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதை தொடர்ந்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இறுதி கட்டப் பணிகள் விறுவிறுவென நடந்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. … Read more

சித்தூர் அடுத்த கங்காதரநெல்லூரில் சிமெண்ட் சிலாப்புகள் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் அரசு பள்ளி கட்டிடம்-துணை முதல்வர் தொகுதியில் அவலம்

சித்தூர் : சித்தூர் அடுத்த கங்காதரநெல்லூரில் சிமெண்ட் ஸ்லாப்புகள் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தர பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  துணை முதல்வர் சொந்த தொகுதியில் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் கங்காதரநெல்லூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை. மேலும், வகுப்பறைகளில் சிமெண்ட் பூச்சு உதிர்ந்து … Read more