பெங்களூருவில் முதல் முறையாக ஈத்கா மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட்டம்

பெங்களூரு: பெங்களூருவில் சர்ச்சைக்குரிய ஈத்கா மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதல் முறையாக தேசியக் கொடி ஏற்றப்பட்டது. பெங்களூரு சாம்ராஜ்பேட்டை யில் உள்ள ஈத்கா மைதானம் வக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அண்மையில் கர்நாடக அரசு அந்த மைதானம் பெங்களூரு மாநகராட்சிக்கு சொந்தமானது என அறிவித்தது. Source link

பில்கிஸ் பானு vs நிர்பயா: துரத்தும் மனசாட்சி!

‘கர்ப்பமாக இருக்கிறேன் என்னை விட்டு விடுங்கள்’ என்ற பில்கிஸ் பானுவின் அழுகுரல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டுள்ளன. அப்போது அவருக்கு வயது 19. ஆனாலும், அவரை விடாமல் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர கும்பல், அதற்கு முன்பு பில்கிஸ் பானுவின் 3 வயது பெண் குழந்தையை அவரிடம் இருந்து பிடுங்கி அருகில் இருந்த கல்லில் ஒங்கி அடித்து கொன்றது. அந்த பிஞ்சுக் குழந்தை எவ்வளவு வலியுடன் உயிரிழந்திருக்கும் என்று நினைக்கும் போதே கண்களில் வடியும் நீரை கட்டுப்படுத்த … Read more

பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுக்கு சுகாதாரத்துறை ஒதுக்கீடு

பீகார்: பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுக்கு சுகாதாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. விஜயகுமார் சவுத்ரி- நிதித்துறை, தேஜ் பிரதாப் யாதவ் சுற்றுச்சூழல், வனத்துறையை ஒதுக்கியுள்ளனர்.

காஷ்மீர் | ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து; 6 பேர் பலி

காஷ்மீர்: காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 6 பேர் பலியானார்கள். பலரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “இந்திய – சீன எல்லை பாதுகாப்புப் படையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்ற வாகனம் காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. விபத்துக்குள்ளான வாகனத்தில் பாதுகாப்புப் படையினர் 37 பேர் இருந்துள்ளனர். விபத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் 6 பேர் பலியாகினர். 31 பேர் … Read more

'யாரா இருந்தாலும் கை, கால்களை உடைங்க..!' – சர்ச்சையில் ஆளுங்கட்சி எம்எல்ஏ!

“எதிர்த்து பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கால்களை உடையுங்கள்” என, மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்எல்ஏ பிரகாஷ் சர்வே பேசி உள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மறைந்த பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனா கட்சி, தற்போது, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு, உத்தவ் தாக்கரே தரப்பு என, இரு தரப்பாக செயல்பட்டு வருகிறது. சிவசேனா கட்சிக்கு … Read more

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு: ஒருவர் காயம்

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர்: சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆப்பிள் தோட்டத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் இறந்தவர்களின் சகோதரர் படுகாயமடைந்தார்.

கர்நாடகா: நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த கிரிதர் என்பவர் நேற்று மாலை தனது குடும்பத்துடன் கர்நாடக மாநிலம் கலபுர்கியில் உள்ள கங்காபூர் கோயிலுக்குச் காரில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது, கர்நாடக மாநிலம் பிதார் தாலுகாவில் உள்ள பங்கூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த கிரிதர் (45), அவரது … Read more

திருப்பதி | விஐபி பிரேக் தரிசனம் ரத்தான பிறகும் 60 ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால், பக்தர்கள் குவிவார்கள் என்பதை எதிர்பார்த்து, முதியோர், குழந்தைகள், தாய்மார்கள், மாற்று திறனாளி பக்தர்கள் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை திருமலை யாத்திரையை தள்ளிப்போட வேண்டும் என்று தேவஸ்தானம் கோரிக்கை விடுத்தது. ஆனால், பக்தர்கள் கடந்த வியாழக்கிழமை முதலே வரத் தொடங்கினர். இதனால், திருமலையில் தற்போது சுவாமி தரிசனம் செய்ய 36 மணி நேரம் … Read more

பீகார் அமைச்சரவை விரிவாக்கம்: தேஜஸ்விக்கு 16; நிதிஷ் குமாருக்கு 11

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், கருத்து வேறுபாடுகள் காரணமாக, கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து, முதலமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதை அடுத்து, எதிர்க்கட்சியான, லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான … Read more

தரமற்ற உணவு வழங்கியதால் கேட்டரிங் சர்வீஸ் மேலாளரின் கன்னத்தில் அறைந்த சிவசேனா எம்எல்ஏ

மகாராஷ்டிராவில் மதிய உணவுத் திட்டத்தில் தரமற்ற உணவு வழங்கியதாக கேட்டரிங் சர்வீஸ் மேலாளரை சிவசேனா எம்எல்ஏ கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது. ஹிங்கோலி மாவட்டத்தில் மதிய உணவுத் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா எம்எல்ஏ சந்தோஷ் பங்கர் ஆய்வு நடத்தினார். அப்போது, தரமற்ற உணவு தயாரித்து வழங்கியதாகக் கூறி கேட்டரிங் சர்வீஸ் மேலாளரிடம் சந்தோஷ் பங்கர் வாக்குவாதம் செய்து திடீரென கன்னத்தில் … Read more