நிதி மோசடி வழக்குகளில் கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது – உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி: நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சம்மன் அனுப்புதல் மற்றும் கைது செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் சம்மன், கைது, பறிமுதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது: நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு உள்ள கைது, பறிமுதல், ஜாமீன் அளிக்கும் அதிகாரங்கள் எல்லாம் குற்றவியல் நடைமுறை சட்ட விதிமுறை வரம்புக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன. … Read more