ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது நிலைத்தடுமாறி விழுந்த பெண்.. கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர்த்தப்பிய சிசிடிவிக் காட்சி..!

கர்நாடகாவில் சாலையில் விபத்தின் போது இளம்பெண் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர்த்தப்பிய சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது. பெல்காம் புறநகர் கணேஷ்புரா சாலையில், நேற்று காலை ஒரு பெண் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது எதிரே நாய் ஓடி வந்ததால், வாகனத்தில் வேகத்தை குறைக்க முயன்றுள்ளார். அப்போது நிலைத்தடுமாறி வாகனத்துடன் அப்பெண் கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த லாரியின் ஓட்டுநர் சடன் பிரேக் அடித்ததால் அந்த பெண் உயிர்த்தப்பினார்.  Source link

என்னை காதலித்தவர்கள் ஓடிப்போனது ஏன்? சுஷ்மிதா சென் பதில்

மும்பை: தனது வாழ்க்கையில் முழு அங்கமாக இடம்பெற ஆண்கள் விரும்புவதில்லை என நடிகை சுஷ்மிதா சென் கூறினார். நிகழ்ச்சி ஒன்றில் நடிகை டிவிங்கிள் கன்னாவுடன் சுஷ்மிதா சென் உரையாடினார். அப்போது திருமணம் பற்றி சுஷ்மிதா கூறியது: எனக்கு 47 வயதாகிறது. மகள்கள் ரெனி, அலிஷா (வளர்ப்பு மகள்கள்) உடன் சந்தோஷமாக இருக்கிறேன். எனது வாழ்க்கையில் பல ஆண்களை சந்தித்திருக்கிறேன். அவர்களில் சிலரை காதலித்து இருக்கிறேன். அவர்களும் என்னை காதலித்துள்ளனர். ரெனியும் அலிஷாவும் என்னிடம் வந்த பிறகு, ஆண்கள் … Read more

ஜி.எஸ்.டி. நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தம் – பிரதமர் நரேந்திர மோடி

ஜி.எஸ்.டி. நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், பிரதமர் மோடி தனது சமூகவலைதள பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வியாபாரம் செய்வதை ஜி.எஸ்.டி. வரி முறை எளிதாக்கியதாக கூறிய பிரதமர், ஒரே நாடு ஒரே வரி என்ற நோக்கத்தையும் நிறைவேற்றி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  Source link

பாஸ்போர்ட்டை திருப்பி ஒப்படைக்க வேண்டும்; கோர்ட்டில் ஆர்யன் கான் மனு

மும்பை: முடக்கப்பட்ட தனது பாஸ்போர்ட்டை திருப்பி ஒப்படைக்குமாறு ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் (24) கடந்தாண்டு அக்டோபர் தொடக்கத்தில், சொகுசு கப்பலில் சென்றபோது போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது பாஸ்போர்ட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கிட்டத்திட்ட 20 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆர்யன்கான், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கடந்த மே மாதம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் தாக்கல் … Read more

உலகளாவிய பிரச்சனைகள் தொடர்பாக புதினுடன் பிரதமர் மோடி பேச்சு..

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார். விவசாயப் பொருட்கள், உரங்கள் உள்ளிட்டவற்றில் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் பேசியதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. உக்ரைன் விவகாரத்தில், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் தீர்வுகாணப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி நாட்டை தீக்கிரையாக்கி விட்டார்: நுபுர் சர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: ‘நுபுர் சர்மா சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து நாட்டை தீக்கிரையாக்கி விட்டார். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முகமது நபிகள் குறித்து பாஜ செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. நாட்டின் பல பகுதிகளிலும் வன்முறைகள் ஏற்பட்டன. இதனால், நுபுர் சர்மா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அவருக்கு எதிராக … Read more

இருதரப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த ரஷ்ய அதிபர் புடினுடன் மோடி போனில் பேச்சு

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் விவகாரத்துக்கு தூதரக ரீதியிலான நடவடிக்கை, பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை புடினிடம் மோடி வலியுறுத்தினார். மேலும், கடந்தாண்டு டிசம்பரில் புடின் இந்தியா வந்த போது எடுக்கப்பட்ட முடிவுகளின் தற்போதைய நிலை,அவற்றின் செயல்பாடு குறித்தும் மருந்து உற்பத்தி பொருட்கள், வேளாண் விளைபொருட்கள், உரங்கள் ஆகிய துறைகளில் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது … Read more

பாட்னா குடிமையியல் நீதிமன்றத்தில் திடீர் குண்டு வெடிப்பு.. காவலர் ஒருவர் படுகாயம்..!

பீகாரில் குடிமையியல் நீதிமன்றத்தில், குறைந்த தீவிரமுடைய குண்டு வெடிப்பு நிகழ்ந்ததில் காவலர் ஒருவர் காயமடைந்தார். விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன் பாட்னாவின் படேல் பல்கலைக்கழகத்தின் விடுதியிலிருந்து வெடி மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்கு அனுமதி பெற, நீதிமன்ற வளாகத்தில் வைத்திருந்தபோது வெடித்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது Source link

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ. அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு: போலீஸ் குவிப்பால் பதற்றம்

திருவனந்தபுரம்: கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகமான, ‘ஏகேஜி சென்டர்’ மீது வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தூதரகம் மூலமாக நடந்த தங்கம் கடத்தலில் முதல்வர் பினராய் விஜயன், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக, முக்கிய குற்றவாளியான சொப்னா கூறியதை தொடர்ந்து, கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. பினராய் விஜயன் பதவி விலகக் கோரி  காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன் வயநாட்டில் உள்ள … Read more

170 எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது – மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற தங்களுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். கோவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது 170 எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும், மேலும் இது அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார். கோவாவில் விடுதியில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்கள் நாளை மும்பை வர இருப்பதாகவும், தான் இப்போதே மும்பை புறப்பட்டு செல்வதாகவும் தெரிவித்தார்.  Source link