மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா!

நாளை காலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.   மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் ஆளுநர் உத்தரவுக்கு எதிராக சிவசேனா கொறடா சுனில் பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கில் இன்று இரவு 9 மணிக்கு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், உத்தவ் தாக்கரே அரசு நாளை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு வழக்கின் … Read more

100வது நாளை எட்டும் உ.பி. அரசு இலக்குகளை அடைய அமைச்சர்களுக்கு யோகி உத்தரவு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு 2வது முறையாக பதவியேற்று 100 நாள்களை எட்ட உள்ள நிலையில், இலக்குகளை திட்டமிட்டப்படி அடையுமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த பிப்ரவரி முதல் மார்ச் வரை 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், பாஜ வெற்றி பெற்ற நிலையில், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு 2வது முறையாக மார் 25ம் தேதி பதவியேற்றது. அதனைத்தொடா்ந்து அனைத்து துறைகளுக்கும் முதல் 100 நாள்கள், 6 … Read more

டிவி, ஏசியை முழுமையாக அணைக்காவிட்டால் ஆண்டுக்கு ரூ.1000 கூடுதல் மின்கட்டணம் கட்ட நேரிடுமா?

டி.வி, ஏ.சியை பயன்படுத்திய பிறகும் முழுமையாக அணைக்காமல் விட்டு விட்டால், ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் மின்கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. மின்னணு பொருட்கள் பலவற்றை ரிமோட் மூலம் இயக்கும் நிலையில், பயன்படுத்திய பிறகு அவற்றின் சுவிட்ச்களை பலரும் ஆஃப் செய்யாமல் வைத்திருக்கின்றனர். இதுதொடர்பாக தனியார் அமைப்பு ஆய்வு மேற்கொண்டதில், டிவி, சவுண்ட் சிஸ்டம், ஏசி உள்ளிட்டவைகளை பயன்படுத்திய பிறகு ஸ்விட்ச்கள் ஆனில் வைத்திருந்தால் அவை தொடர்ந்து மின்சாரத்தை இழுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. … Read more

தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினி மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினி மயமாக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் திறனை அதிகரிப்பதற்கும், அதன் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை கொண்டு வருவதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் வர்த்தக நடவடிக்கைகளையும் பல்வேறு சேவைகளையும் மேற்கொள்வதற்கு இது வகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 63,000 தொடக்க … Read more

கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து.. வங்கி சுவரை இடித்து தள்ளி விபத்து.. சிசிடிவி காட்சிகள்..

கேரளாவில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து வங்கியின் மதில் சுவரை இடித்து தள்ளியது. கக்கட் (Kakkad) பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த பேருந்து அவ்வழியாக நடந்து சென்ற பெண் மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் மீது மோதி விட்டு கிராம வங்கியின் சுவரை இடித்து தள்ளியது.  சாலையில் சென்ற பெண்மணியும், பேருந்து பயணிகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மழையில் அதிவேகமாக பேருந்தை ஓட்டியதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து … Read more

ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிரான சிவசேனா மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

டெல்லி: ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிரான சிவசேனா கொறடா சுனில் பிரபு தொடர்ந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நோட்டீஸ் மீது இன்னும் தீர்வு காணப்படவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்றால் தகுதிநீக்க நடவடிக்கைக்கு அனுமதி தேவை என சிவசேனா தரப்பு வாதிட்டு வருகிறது.

கருமுட்டை விற்பனை விவகாரம்.. பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி..!

ஈரோட்டில், கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது  சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில், 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சிறுமியின் தாய் இந்திராணி, அவரின் இரண்டாவது கணவர் என சொல்லப்படும் சையத் அலி, புரோக்கர் மாலதி என 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். அதன் பின்னர், சிறுமிக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த 16 … Read more

கவரிங்காக மாறிய தங்கம்.. அம்மன் கோவிலில் அதிசயம்..!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மே.மாத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்தில் உள்ள பெண்கள் ஒன்று சேர்ந்து 5 சவரன் தங்கச் செயின் மற்றும் தாலி வாங்கி இந்த கோவிலில் உள்ள அம்மன் சிலைக்கு அணிவித்தனர். அதன்பிறகு அந்த நகைகள் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கோவில் பூசாரியிடம் ஒப்படைக்கப்பட்டு, கோவிலில் உள்ள பாதுகாப்பு அறையின் பீரோவில்  பத்திரமாக வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது … Read more

ஆர்.ஜே.டி.யில் இணைந்த ஓவைசி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர்..

பீகாரில் ஓவைசி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர், ராஷ்டீரிய ஜனதா தள கட்சியில் இணைந்தனர். மொத்தம் 5 பேர் இருந்த நிலையில், நால்வர் இணைந்துள்ளதாக தேதஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பீகார் சட்டப்பேரவையில் தங்களது கட்சி மிகப்பெரிய கட்சியாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பீகாரில் பாஜக ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. Source link

நாளை தொடங்கி 43 நாட்கள் நடக்கிறது பக்தர்கள் வருகையால் அமர்நாத் யாத்திரை விழாக்கோலம் பூண்டது பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஜம்மு: நாளை தொடங்கி 43 நாட்கள் நடக்கும் அமர்நாத் யாத்திரை, பக்தர்கள் வருகையால் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் பயணம் செய்வார்கள். கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக அமர்நாத் புனித யாத்திரை நடைபெறவில்லை. ஜம்மு காஷ்மீரின் நகரில் இருந்து 141 கிமீ தூரத்தில் இமயமலை பகுதியில் உள்ள லிடர் பள்ளத்தாக்கில் இந்த அமர்நாத் குகை அமைந்துள்ளது. … Read more