வாகனங்களின் டயர் தயாரிக்க புதிய விதிமுறை; மழையில பிரேக் அடிச்சாலும் வழுக்காம டக்குனு நிக்கணும்: ஒன்றிய அரசு கெடுபிடி உத்தரவு

புதுடெல்லி: வரும் அக்டோபர் மாதம் முதல் புதிய விதிமுறைகளின்படி தான் வாகனங்களின் டயர்களை தயாரிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு  அறிவித்துள்ளது. இது குறித்து ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: கனரக வாகன டயர்களை புதிய விதிமுறைகளின்படி தயாரிக்க வேண்டும். இந்தியாவில் விற்கப்படும் டயர்களின் உருளும் விதம், ஈரமான தரையில் உறுதியாக நிற்பது, சாலையில் பயணிக்கும் போது டயர்களில் இருந்து எழும் சத்தத்தை கட்டுப்படுத்தும் வரன்முறை ஆகியவை இந்த … Read more

ஹைதராபாத் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.ராஜன் பொறுப்பேற்பு

சென்னை: ஹைதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஏ.எஸ்.ராஜன் பொறுப்பேற்றுள்ளார். 1987-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்ற தேனியைச் சேர்ந்த ஏ.சேர்மராஜன் என்ற ஏ.எஸ்.ராஜன், ஐபிஎஸ் அதிகாரியாக பிஹார் மாநிலத்தில் நியமிக்கப்பட்டார். இவரது பெற்றோர் எஸ்.கே.அய்யாச்சாமி மற்றும் ஏ.ரெத்தினம்மாள். பிஹார் மாநிலத்தின் ராஞ்சியில் முதன்முதலாக பயிற்சி எஸ்பியாக தனது பணியைத் தொடங்கிய ஏ.எஸ்.ராஜன் அதன்பிறகு ரோஹ்டாஸ் மாவட்டஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு கடந்த 1999-ம் ஆண்டு மத்திய உளவுத் துறையில் … Read more

“கடந்த ஜூனில் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.1.44 லட்சம் கோடி வரி வருவாய்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாட்டில் ஜி.எஸ்.டி. வருவாய் தொடர்ந்து அதிகரிப்பதாகவும், கடந்த ஜூன் மாதத்தில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கடந்தாண்டு ஜூன் மாதத்தில் கிடைத்த ஜி.எஸ்.டி. வருவாயைக் காட்டிலும் இந்தாண்டு அதே மாதத்தில் 56 சதவீதம் அதிகம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரி ஏய்ப்பிற்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவை அதிக ஜி.எஸ்.டி. வசூலுக்கு பங்களிப்பதாக நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். Source link

மணிப்பூரில் மீட்பு பணிகள் தீவிரம்; நிலச்சரிவில் புதைந்த 60 பேர் கதி என்ன?.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

இம்பால்: மணிப்பூர் நிலச்சரிவில் பலியானாவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மண்ணில் புதைந்த பிராந்திய வீரர்கள் உட்பட 60 பேரின் கதி பற்றி கவலை ஏற்பட்டுள்ளதால், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மணிப்பூரில் ேநானி மாவட்டத்தில்  துபுல் யார்டு அருகே ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. இதற்காக பிராந்திய ராணுவ  வீரர்கள் அந்த பகுதியில் முகாம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த புதன் இரவு இங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. … Read more

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 4-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு

மும்பை: பாஜக ஆதரவுடன் முதல்வராக பதவியேற்றுள்ள சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் ஜூலை 4-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிராவில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகித்தார். சில நாட்களுக்கு முன்பு, சிவசேனா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அவருக்கு 38 சிவசேனா … Read more

ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது நிலைத்தடுமாறி விழுந்த பெண்.. கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர்த்தப்பிய சிசிடிவிக் காட்சி..!

கர்நாடகாவில் சாலையில் விபத்தின் போது இளம்பெண் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர்த்தப்பிய சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது. பெல்காம் புறநகர் கணேஷ்புரா சாலையில், நேற்று காலை ஒரு பெண் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது எதிரே நாய் ஓடி வந்ததால், வாகனத்தில் வேகத்தை குறைக்க முயன்றுள்ளார். அப்போது நிலைத்தடுமாறி வாகனத்துடன் அப்பெண் கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த லாரியின் ஓட்டுநர் சடன் பிரேக் அடித்ததால் அந்த பெண் உயிர்த்தப்பினார்.  Source link

என்னை காதலித்தவர்கள் ஓடிப்போனது ஏன்? சுஷ்மிதா சென் பதில்

மும்பை: தனது வாழ்க்கையில் முழு அங்கமாக இடம்பெற ஆண்கள் விரும்புவதில்லை என நடிகை சுஷ்மிதா சென் கூறினார். நிகழ்ச்சி ஒன்றில் நடிகை டிவிங்கிள் கன்னாவுடன் சுஷ்மிதா சென் உரையாடினார். அப்போது திருமணம் பற்றி சுஷ்மிதா கூறியது: எனக்கு 47 வயதாகிறது. மகள்கள் ரெனி, அலிஷா (வளர்ப்பு மகள்கள்) உடன் சந்தோஷமாக இருக்கிறேன். எனது வாழ்க்கையில் பல ஆண்களை சந்தித்திருக்கிறேன். அவர்களில் சிலரை காதலித்து இருக்கிறேன். அவர்களும் என்னை காதலித்துள்ளனர். ரெனியும் அலிஷாவும் என்னிடம் வந்த பிறகு, ஆண்கள் … Read more

ஜி.எஸ்.டி. நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தம் – பிரதமர் நரேந்திர மோடி

ஜி.எஸ்.டி. நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், பிரதமர் மோடி தனது சமூகவலைதள பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வியாபாரம் செய்வதை ஜி.எஸ்.டி. வரி முறை எளிதாக்கியதாக கூறிய பிரதமர், ஒரே நாடு ஒரே வரி என்ற நோக்கத்தையும் நிறைவேற்றி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  Source link

பாஸ்போர்ட்டை திருப்பி ஒப்படைக்க வேண்டும்; கோர்ட்டில் ஆர்யன் கான் மனு

மும்பை: முடக்கப்பட்ட தனது பாஸ்போர்ட்டை திருப்பி ஒப்படைக்குமாறு ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் (24) கடந்தாண்டு அக்டோபர் தொடக்கத்தில், சொகுசு கப்பலில் சென்றபோது போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது பாஸ்போர்ட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கிட்டத்திட்ட 20 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆர்யன்கான், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கடந்த மே மாதம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் தாக்கல் … Read more

உலகளாவிய பிரச்சனைகள் தொடர்பாக புதினுடன் பிரதமர் மோடி பேச்சு..

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார். விவசாயப் பொருட்கள், உரங்கள் உள்ளிட்டவற்றில் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் பேசியதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. உக்ரைன் விவகாரத்தில், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் தீர்வுகாணப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link