மருத்துவ முதுநிலை படிப்புக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனு: நாளை நீதிமன்ற தீர்ப்பு!

காலியாக உள்ள மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். நாளை தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1,456 மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான இடங்கள் காலியாக உள்ள நிலையில், அதனை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரி மருத்துவர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்கள். இந்த மனு நேற்று உச்சநீதிமன்ற விடுமுறைக் கால சிறப்பு அமர்வு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான … Read more

சேனல்களால் நாட்டுக்கு தர்மசங்கடம்.. ‘எடிட்டர்ஸ் கில்டு’ குற்றச்சாட்டு..!

மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் முஸ்லிம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. பல்வேறு முஸ்லிம் நாடுகளும் கண்டனத்தை பதிவு செய்தன. இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இரு சமூகத்தினர் வெடிகுண்டுகளை வீசி தாக்கிக் கொண்டனர். நாடு முழுதும் சலசலப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் … Read more

எதிர்க்கட்சி அல்ல.. ஆளும்கட்சியே இலக்கு.. அதிரடி காட்டிய அண்ணாமலை..!

சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் கிராமத்தில் பாஜக சார்பில் மலைவாழ் மக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மலைவாழ் மக்கள் ஒருங்கிணைந்து அறக்கட்டளை ஒன்றை தொடங்கி மத்திய அரசின் நிதியை பெற்று பயனடைய வேண்டும்” என்று அறிவுறுத்தினார். பின்னர், மலைவாழ் மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன் பின்னர், … Read more

இந்தியாவில் முதல்முறையாக… தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் இளம்பெண்!

ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் இன்புற்றிருப்பதே இயற்கை வகுத்துள்ள நியதி. இந்த நியதிக்கு மாறாக ஆணும், ஆணும் திருமணம் செய்து கொள்வது, பெண்ணும், பெண்ணும் மணம் புரிந்து கொள்ளும் போக்கு உலக அளவில் அவ்வபோது நிகழ்ந்து வருகிறது. இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று ஒரு ஆண் தன்னைதானே திருமணம் செய்து கொள்ளும் கொடுமையும் தற்போது நிகழ்ந்து வருகின்றன. ஆண்கள் மட்டும்தான் இப்படி செய்வாங்க? ஏன் நாங்க இப்படி செய்யக்கூடாதா என்று தங்களைதாங்களே … Read more

மது அருந்த பணம் இல்லாததால் சொந்த அத்தையை கழுத்தை அறுத்து கொலை செய்தவன் கைது

புதுச்சேரியில், மது அருந்த பணம் இல்லாததால் சொந்த அத்தையை கழுத்தை அறுத்து கொலை செய்து, நகை பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஞாயிற்றுகிழமை, லாஸ்பேட்டையில் வீட்டில் தனியாக வசித்து வந்த 80 வயது மூதாட்டி அஞ்சலை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார். அவரை கடைசியாக சந்தித்து விட்டு, தலைமறைவான அவரது அண்ணன் மகன் சுரேஷை போலீசார் தேடி கண்டுபிடித்து விசாரித்த போது, மது அருந்த தந்தையிடம் பணம் திருட முடியாததால், நலம் விசாரிப்பது போல் அத்தை … Read more

கொரோனா பாதுகாப்பு விதிகளில் அலட்சியமா? விமான பயணிகளை கீழே இறக்கி விடலாம்.! விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு

புதுடெல்லி: கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறும் பயணிகளை கீழே இறக்கி விடுங்கள் என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் உறுதி செய்ய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் பொது இடங்களில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது. இதன்படி, விமான பயணிகள் கைகளை சுத்தமுடன் வைத்திருத்தல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட பயணத்தின்போது மேற்கொள்ள வேண்டிய கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகளை முறையாக … Read more

`தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் பினராயி’- நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் தேசவிரோத நடவடிக்கைகளில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஈடுபட்டதாக தங்கக் கடத்தல் வழக்கில் முதல் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு, கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் வந்த சரக்குப் பெட்டிகளில் 30 கிலோ கடத்தல் தங்கம் இருப்பது தெரியவந்தது. இந்தக் கடத்தலில் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருக்கலாம் எனக் கருதப்பட்டதால், இவ்வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது. … Read more

தமிழகத்தில் தொடரும் நீர் நிலை சோகம்.. கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பலி..!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, நிலக்கோட்டையை சேர்ந்த கட்டட தொழிலாளி லட்சுமணன், மூலச்சத்திரம் பகுதியை சேர்ந்த பாபு, மதுரையை சேர்ந்த பன்னீர்செல்வம் (25) ஆகியோர் தனது குடும்பத்துடன் கைலாசப்பட்டியில் உள்ள உறவினர் தர்மராஜ் வீட்டுக்கு இன்று வந்தனர். இந்நிலையில், இன்று மாலை கைலாசப்பட்டி அருகே உள்ள பாப்பியன்பட்டி கண்மாயில் குளிப்பதற்காக பன்னீர்செல்வம், லட்சுமணன் மகன் மணிமாறன்(12), பாபு மகன் சபரிவாசன்(11) ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது, கண்மாயில் … Read more

பிரின்ஸ் ஆகிறார் சிவகார்த்திகேயன்..!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘டான்’ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், அவரது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.   இந்த படத்திற்கு  ‘பிரின்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார்.முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்து வருகிறார்.தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இந்தப் … Read more

உயிரித் தொழில்நுட்ப புத்தொழில் கண்காட்சி.. 8 ஆண்டுகளில் 8 மடங்கு வளர்ச்சி.!

இந்தியாவின் உயிரித் தொழில்நுட்பப் பொருளாதாரம் கடந்த எட்டாண்டுகளில் எட்டு மடங்கு வளர்ச்சியடைந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பிரகதி மைதானத்தில் உயிரித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களின் கண்காட்சி மத்திய அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் நலவாழ்வு, மரபியல், உயிரிமருந்துகள், வேளாண்மை, மாசில்லா எரியாற்றல் உள்ளிட்ட பல பிரிவுகளில் முந்நூறு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உயிரித்தொழில்நுட்பச் … Read more