கொல்கத்தாவில் மற்றொரு சம்பவம் மாடல் அழகி தற்கொலை

கொல்கத்தா: கொல்கத்தாவில் மாடல் அழகியும், சின்னத்திரை நடிகையுமான மஞ்சுஷா நியோகி தற்கொலை செய்து கொண்டார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெங்காலி சின்னத்திரை நடிகையும், மாடல் அழகியுமான மஞ்சுஷா நியோகி என்பவர் வசித்து வந்தார். இவர் இன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் நடிகையின் சடலத்தை கைப்பற்றி வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்கத்தாவில் கடந்த 15 நாட்களில் மூன்று நடிகைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அடுத்தடுத்து நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதால், … Read more

நில மோசடி வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் வீடுகளில் திடீர் சோதனை

மும்பை: நில மோசடி வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா போக்குவரத்து அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். மகாராஷ்டிரா மாநில கூட்டணி அரசில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அனில் பராப் போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ளார். 2017-ம் ஆண்டு அனில் பராப் ரத்தினகிரி மாவட்டத்தை அடுத்த டபோலி பகுதியில் நிலம் ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 1 கோடியே 10 லட்சம் ஆகும். எனினும், இந்த நிலத்தை 2019-ம் ஆண்டில்தான் அவர் பதிவு … Read more

நன்றி தமிழ்நாடு: பிரதமர் மோடி ட்வீட்!

தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் நெடுஞ்சாலை, ரயில்வே துறையில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி , ஹைதரபாத்தில் இருந்து மாலை 4.56 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் வரவேற்றனர். அங்கிருந்து … Read more

மகாராஷ்டிராவில் சாலையோரப் பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து.. ஓட்டுநர் உட்பட 15 பேர் காயம்.!

மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் சாலையோரப் பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் ஓட்டுநர் உட்பட 15 பேர் காயமடைந்தனர். புசாவல் என்னுமிடத்தில் இருந்து பால்கர் நோக்கி வந்த அரசுப் பேருந்து ஒரு வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் 25 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவல் அறிந்த காவல்துறையினரும், பிற வாகனங்களில் வந்தவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். Source link

காஷ்மீரில் நடிகையை சுட்டுகொன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் பட்கம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிரபல டி.வி. நடிகை அம்ரீன்பட் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினர் இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் நடிகையை சுட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 2 பயங்கரவாதிகளையும் கண்டுபிடிக்க நேற்று காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது 2 பயங்கரவாதிகளும் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா என்ற பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய … Read more

தொழில் வாய்ப்புகள் கிடைக்காததால் விரக்தி பெங்காலி நடிகை தூக்கிட்டு தற்கொலை: 15 நாட்களுக்குள் 2 நடிகைகள் இறந்ததால் சோகம்

கொல்கத்தா: தொழில் வாய்ப்புகள் கிடைக்காத விரக்தியில் பெங்காலி நடிகை பிதிஷா டி மஜும்தார் என்பவர் கொல்கத்தாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நகரின் நாகர்பஜார் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் பெங்காலி தொலைக்காட்சி நடிகையும், மாடல் அழகியுமான பிதிஷா டி மஜும்தார் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் இரவு முதல் தனது வீட்டின் கதவை திறக்க வில்லை. அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவு திறக்காதது குறித்து, போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் … Read more

“நாடாளுமன்ற நடவடிக்கையில் சிபிஐ தலையிடுகிறது” – சபாநாயகருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்

சிபிஐயின் நடவடிக்கை தனது நாடாளுமன்ற செயல்பாடுகளில் நேரடியாக தலையிடுவதாக உள்ளது உள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறும் வகையில் உள்ள இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கார்த்திக் சிதம்பரம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது வீட்டில் அலுவல் சார்ந்த முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற உரிமை … Read more

பாலியல் தொழிலாளரை துன்புறுத்த கூடாது – போலீஸுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பாலியல் தொழிலாளர்களை போலீஸார் துன்புறுத்தக்கூடாது. அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் பாலியல் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ரேஷனில் உணவுப் பொருள்கள், நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரி தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு விசாரித்து வருகிறது. இவ்வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தொண்டு … Read more

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி?

மும்பை சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தின்போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை என்.சி.பி. அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்முன் தமேச்சா, கோமித், மோஹக் உள்ளிட்டோர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ஆர்யன் … Read more

இந்திய டிரோன் திருவிழாவை பிரதமர் தொடக்கி வைத்தார்.!

டெல்லியில் இந்திய அளவிலான டிரோன் திருவிழாவைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து டிரோன்களின் உதவியுடன் ஆய்வு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளார்.  டெல்லி பிரகதி மைதானத்தில் இன்றும் நாளையும் இந்திய அளவிலான டிரோன் திருவிழா நடைபெறுகிறது. டிரோன் திருவிழாவைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, ரிமோட் மூலம் டிரோன்களை இயக்கும் பயிற்சி பெற்ற 150 பேருக்குச் சான்றிதழ்களையும் வழங்கினார்.   நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, டிரோன் தொழில்நுட்பம் பற்றிய ஆர்வம் இந்தியாவில் … Read more