ஆசிரியர் சரமாரியாக தாக்கியதில் சுயநினைவை இழந்த 5 வயது சிறுவன் – பிகாரில் பயங்கரம்

பிகாரில் ஆசிரியர் தாக்கியதில் 5 வயது சிறுவன் சுயநினைவை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள தனோரா பகுதியில் ஜெயா கோச்சிங் சென்டர் என்ற பெயரில் டியூசன் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஷிப்ட் முறையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் டியூசன் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த டியூசன் மையத்தில் ஆசிரியராக இருக்கும் சோட்டு என்பவர் இன்று காலை பணியில் இருந்தார். அனைவரையும் படிக்குமாறு கூறிவிட்டு அவர் கண்காணித்துக் கொண்டிருந்தார். அப்போது 5 … Read more

நுபுர் சர்மா கைது செய்யப்பட வேண்டும்: ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்தல்

புதுடெல்லி: முஸ்லிம்களின் இறைத் தூதரை விமர்சித்த நுபுர் சர்மா, தேசத்தின் முன் மன்னிப்பு கோர வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. “இந்த மன்னிப்பு தேவையில்லை. மாறாக, அவர் கைது செய்யப்பட வேண்டும்” என ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த் (ஜேஐஎச்) வலியுறுத்தியுள்ளது. முஸ்லிம்களின் பழம்பெரும் அமைப்பாகக் கருதப்படுவது ஜேஐஎச். இதன் தலைமையகமான புதுடெல்லியில் அதன் தலைவரான சையது சதத்துல்லா ஹுசைனி, துணைத் தலைவர் பேராசிரியர் எஞ்சினியர் முகம்மது சலீம் ஆகிய நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். இதில், இருவரும் … Read more

அகிலேஷ் யாதவ் மீது நடவடிக்கை: மகளிர் ஆணையம் கடிதம்!

பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா அண்மையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. அதேபோல், பாஜகவின் நவீன் குமார் ஜிண்டால், முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து, பின்னர் அதனை நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் உலக அளவில் சர்ச்சையானது. இஸ்லாமிய நாடுகள், இஸ்லாமிய கூட்டமைப்பு உள்ளிட்டவைகள் இந்தியாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தன. இதையடுத்து, பாஜகவின் நுபுர் சர்மா மற்றும் … Read more

கர்நாடகாவில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக ஏடிஜிபி அம்ரித் பால் கைது..!

கர்நாடகாவில், காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக ஏடிஜிபி அம்ரித் பால் கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அம்ரித் பாலிடம், மாநில குற்றப்பிரிவு காவல்துறையினர் 4 முறை விசாரணை நடத்தியிருந்தனர். ஓ.எம்.ஆர். விடைத்தாளில் முறைகேடு செய்ததாக, உதவி ஆய்வாளராக தேர்வான 40 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.   Source link

அவதூறு பதிவுகளை போட்டு மன அமைதியை கெடுக்கின்றனர்! கன்னட நடிகை போலீசில் புகார்

மைசூரு: சமூக வலைதளங்களில் எனக்கு எதிராக அவதூறு பதிவுகளை போட்டு, என்னுடைய மன அமைதியை சிலர் கெடுக்கின்றனர் என்று கன்னட நடிகை பவித்ரா லோகேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார்.  மூத்த கன்னட நடிகரும், மறைந்த மைசூர் லோகேஷின் மகளுமான பவித்ரா லோகேஷ்,  கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திர நடிகையாக  சின்னத்திரையிலும், பெரிய திரைகளிலும் நடித்துள்ள இவரது கணவர் சுசேந்திர  பிரசாத் மற்றும் சகோதரர் ஆதி லோகேஷ் ஆகியோரும் நடிகர்களாக உள்ளனர். இந்நிலையில் நடிகை பவித்ரா … Read more

’It's Dhoom 4.. மறுபடியும் வருவோம்’ : ஒடிசா போலீசுக்கு சவால் விட்ட திருட்டு கும்பல்!

சினிமாக்களில் வருவது போன்று திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர் வசமாக சிக்கும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. இப்படி இருக்கையில் ஹ்ரிதிக் ரோஷன் அமிர்கான் நடிப்பில் வெளியான தூம் படத்தில் வருவது போன்று ஒடிசாவில் உள்ள பள்ளியில் கணினி மற்றும் ஜெராக்ஸ் மெஷின்களை திருட்டு கும்பல் ஒன்று திருடிச் சென்ற சம்பவம் நடந்திருக்கிறது. நபரங்புர் மாவட்டத்தின் கதிகுடா என்ற பகுதியில் உள்ள இந்திராவதி மேல்நிலை பள்ளியில் நேற்று (ஜூலை 3) உள்ள கணினி உள்ளிட்ட பொருட்களை திருடிக் … Read more

சித்து மூஸ் வாலா படுகொலை: தேடப்பட்ட முக்கிய நபர் கைது; துப்பாக்கிகள் பறிமுதல்

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டுவந்த முக்கிய நபரான அங்கித் சிர்ஸாவை டெல்லி போலீஸார் கைது செய்தனர். கூலிக்கு கொலை செய்யும் அங்கித் குறிவைத்து சுடுவதில் தேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அங்கித் சிர்ஸா மீது ஏற்கெனவே இரண்டு கொலை வழக்குகள் ராஜஸ்தானில் பதிவு செய்யப்பட்டுள்ளது. யார் இந்து சித்து? சித்து மூஸ் வாலா பஞ்சாபில் மிகவும் பிரபலமான பாடகர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு இவர் காங்கிரஸில் … Read more

ஆந்திர முதல்வர் பிரதமரை வரவேற்கும் போது, சந்திரசேகர் ராவ் புறக்கணிப்பது ஏன்? மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி..!

நாட்டு மக்களால் இரண்டு முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதை புறக்கணித்ததன் மூலம் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசியலமைப்பை அவமதித்து விட்டார் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமரை வரவேற்கும் நிலையில், பிரதமரை வரவேற்காமல் சந்திரசேகர் ராவ் புறக்கணிப்பது துரதிருஷ்டவசமானது என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். Source link

அந்தமான் அருகே அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம்: சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்து

அந்தமான்:அந்தமான் அருகே அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காலையில் அந்தமான் அருகே நடுக்கடலில் ஏற்பட்ட நிலையில் பிற்பகலில் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நடுகடலில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். காலை 11 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 பதிவாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரைத் தொடர்ந்து அந்தமானில் 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம்

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைத் தெடர்ந்து அந்தமான் அருகே அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவானது. நண்பகல் 12.12 மணியளவில் பதிவான நிலநடுக்கமானது 5 கி.மீட்டர் ஆழத்தில் மையாக கொண்டு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. இந்நிலையில் அந்தமான் அருகே தென்கிழக்கு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 4.6 என்ற … Read more