வரதட்சணை கொடுமையால் மனைவியின் விரலை வெட்டிய ராணுவ வீரர்! உ.பி.யில் கொடூரம்

வரதட்சணை கேட்டு ராணுவ வீரர் ஒருவர் தனது மனைவியின் விரலை வெட்டிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்தவர் சுதேஷ் பால் சிங். இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இதனிடையே, தனது ஒரே மகளான பூஜா தோமரை (31) கடந்த 2014-ம் ஆண்டு மீரட்டை சேர்ந்த ராணுவ மேஜர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இதையடுத்து, அவர்கள் இருவரும் அங்குள்ள ராணுவக் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில், திருமணமான … Read more

ஏழைகள் நலனுக்கான அரசு… பிரதமர் மோடி பெருமிதம்!

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு கடந்த எட்டு ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பதற்காகத் தமது அரசு செயலாற்றி வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் சிக்லி என்னுமிடத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது நாட்டுப் புறக் கலை நிகழ்ச்சிகளுடன் பிரதமருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.   நவ்சாரி மாவட்டத்தில் 3050 கோடி ரூபாய் மதிப்பில் பணி நிறைவுற்ற திட்டங்களைத் தொடக்கி வைத்த பிரதமர் … Read more

வருவாய் ஈட்ட வழியில்லாததால் கர்நாடகாவில் உள்ள பிரபல வங்கியின் உரிமம் ரத்து; ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை.!

புதுடெல்லி: வருவாய் ஈட்டுவதற்கான வழியில்லாதது உள்ளிட்ட காரணங்களால் கர்நாடகாவில் உள்ள பிரபல வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி அதிரடியாக ரத்து செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி செயல்படும் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் சில வங்கிகளின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இதனால் இந்த வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் பணம் எடுக்க முடியாத நிலையும், பணம் டெபாசிட் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது. அந்த … Read more

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சிறப்பு கலந்தாய்வு கோரிய மனு – உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள 1456 இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முதுநிலை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள 1,456 இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரி மருத்துவர்கள் சிலர் உச்ச நீதிமன்றதில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்ஆர் ஷா தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இரு தினங்களுக்கு முன்பு நடந்த விசாரணையின்போது, முதுநிலை … Read more

மாநிலங்களவைத் தேர்தல்: மகராஷ்டிராவில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸுக்கு வாக்களிக்க ஒவைசி கட்சி முடிவு

மும்பை: மகராஷ்டிராவில் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதற்காக காங்கிரஸுக்கு வாக்களிக்க ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் 15 மாநிலங்களைச் சேர்ந்த 57 எம்பி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று மத்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இதில் 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 16 எம்பி பதவிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. Source link

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் வியூகம்!

நாட்டின் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற ஜூலை மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, வேட்பாளர்கள் பெயர்களை ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் பரிசீலித்து வருகின்றன. குடியரசு தலைவர் தேர்தலில் மக்களவை எம்.பி.க்கள் 543 பேர், மாநிலங்களவை எம்.பி.க்கள் 233 பேர், மாநிலங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் 4,033 பேர் என மொத்தம் 4,809 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கு மதிப்பு அடிப்படையில் குறைந்தது 51 சதவீதம் … Read more

இனி பயம் இல்லை!: விலங்குகளுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்தது ஒன்றிய அரசு..!!

அரியானா: விலங்குகளுக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியை ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு மனிதர்களை மட்டுமல்லாது விலங்குகளையும் பாதித்து வருகிறது. ஹரியானாவில் முதல் முறையாக கேனைன் வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சுமார் 15 நாய்கள் உயிரிழந்தன. தொற்றால் பாதிக்கப்பட்ட நாய்கள் வாந்தி, ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு பலவீனமாகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. வயிற்றுப்போக்கால் அவதிப்படும் நாய்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படியும், அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். … Read more

மஹாராஷ்டிராவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்!: டேங்கர் லாரிகள் மூலம் நிரப்பப்படும் கிணறுகள்.. அசுத்தமான தண்ணீருக்கே முண்டியடிக்கும் பரிதாபம்..!!

அமராவதி: மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் 2 கிணறுகளும் வறண்டதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமராவதி மாவட்டத்தில் உள்ள கதிகாள் கிராமத்தில் 1,500 மக்கள் வசித்து வருகின்றனர். அங்கிருக்கும் 2 கிணறுகள் தான் அவர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தன. அந்த கிணறுகளும் தற்போது வறண்டு காணப்படுகிறது. இதனால் தினமும் 2, 3 டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு அந்த கிணறுகள் நிரப்பப்படுகின்றன. அந்த நேரத்தில் முண்டியடித்துக்கொண்டு … Read more

மண் வளத்தை மேம்படுத்த மாநில அரசு முழு நேர்மையுடன் செயலாற்றும்: சத்குரு முன்னிலையில் ம.பி. முதல்வர் உறுதி

போபால்: ”மண்ணில் 3 – 6% கரிம வளத்தை அதிகரிக்க எங்களுடைய அரசு முழு நேர்மையுடன் செயல்படும்” என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சத்குரு முன்னிலையில் வாக்குறுதி அளித்தார். இது குறித்து ஈஷா வெளியிட்ட தகவல்: மண் காப்போம் இயக்கம் சார்பில் போபாலில் நேற்று (ஜூன் 9) நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ”சத்குரு ஓர் ஆன்மிக மகான். அவர் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான சுற்றுச்சூழல் அக்கறையையும், ஆன்மிக செயல்பாடுகளையும் … Read more

மாநிலங்களவை தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாகப் போகும் 57 இடங்களுக்கு ஜூன் மாதம் 10ஆம் தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது. அதன் மீதான பரிசீலனைகள் முடிந்து இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை 4 மணி வரை … Read more