ரகசிய வாக்குமூலத்தை வாபஸ் பெற கூறி மிரட்டல்: ஆடியோ வெளியிடுவதாக சொப்னா பேட்டி

திருவனந்தபுரம்: ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய விவகாரம் 2 ஆண்டுகளுக்கு பின்பு கேரளாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தங்கம் கடத்தலில் முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சொப்னா நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.இதையடுத்து முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக கோரி கேரளாவில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று சொப்னா கூறியது: ‘ஷாஜ் கிரண் மற்றும் இப்ராஹிம் ஆகியோர் … Read more

சிக்னலில் நிற்காமல் சென்ற பாஜக எம்எல்ஏ மகள் – போலீசாருடன் வாக்குவாதம்

கர்நாடகாவில் சிக்னலில் நிற்காமல் சென்ற பாஜக எம்எல்ஏ மகள்..! போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான அர்விந்த் நிம்பவாலி மகள் நேற்று மாலை பிஎம்டபிள்யூ சொகுசு காரில் சிக்னலில் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர்கள் அபராதம் கேட்டுள்ளனர். ஆனால், அப்பெண் தான் எம்.எல்.ஏ.வின் மகள் எனக் கூறியதோடு, எம்.எல்.ஏ வாகனங்கள் சிக்னலில் நிற்க வேண்டிய தேவை இல்லை என வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் அங்கு … Read more

நூபுர் சர்மா, நவீன் ஜிண்டாலுடன் சிவலிங்கத்தை விமர்சித்தவர்கள் மீதும் டெல்லி போலீஸார் வழக்கு

புதுடெல்லி: முஸ்லிம்களின் இறைத் தூதர் முகம்மது நபியை பாஜக நிர்வாகிகளான நூபுர் சர்மாவும், நவீன் ஜிண்டாலும் விமர்சித்திருந்தனர். இதனால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு எதிரான கண்டனங்கள் எழுந்தன. அதேசமயம், நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய இருவரும் கட்சி நடவடிக்கைக்கு ஆளாகினர். இந்நிலையில் இந்த இருவர் மீதும் டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வாரணாசி, கியான்வாபி மசூதி கள ஆய்வில் காணப்பட்ட சிவலிங்கம் மீதும் பலர் ஆட்சேபனைக்குரிய விமர்சனங்களை எழுப்பியிருந்தனர். பெண் … Read more

காருக்கு அடியில் சிக்கிய கழுகை காப்பாற்ற முயன்ற போது நடந்த சோகம்… தூக்கி வீசப்பட்டு இருவர் பலி.!

மகாராஷ்டிராவில் கழுகை காப்பாற்ற சென்று விபத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்டதில் இருவர் உயிரிழந்தனர். மும்பையில் உள்ள பாந்த்ரா- வொர்லி கடற்பாலத்தில் சென்று கொண்டிருந்த காருக்கு அடியில் கழுகு திடீரென சிக்கிக் கொண்டது. அப்போது, காரில் இருந்து இறங்கி கழுகை காப்பாற்ற முயற்சித்த இருவர் மீதும் அவ்வழியாக வேகமாக வந்த டாக்சி மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்திய டாக்சி ஓட்டுனரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். Source link

பாஜக-வின் நுபுர் சர்மா விவகாரத்தில் மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.: ஒன்றிய அரசு அறியுறுத்தல்

டெல்லி: மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. பாஜக-வின் நுபுர் சர்மாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடக்கும் நிலையில் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கழுகை காப்பாற்ற முயற்சித்தபோது வேகமாக வந்த கார் மோதி விபத்து! இருவர் பரிதாப பலி!

மும்பையில் காருக்கடியில் சிக்கிய கழுகை காப்பாற்ற முயற்சித்தபோது, வேகமாக வந்த மற்றொரு கார் மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பையைச் சேர்ந்த 43 வயதான அமர் மணீஷ் ஜரிவாலா மே 30 அன்று பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு பாதை வழியாக சென்று கொண்டிருந்தபோது கழுகு அவரது காரின் கீழ் வந்தது. ஜரிவாலா தனது டிரைவரான ஷியாம் சுந்தரிடம் காரை நிறுத்தச் சொன்னார். காயமடைந்த பறவையை மீட்க இருவரும் காரிலிருந்து இறங்கினர். This is shocking… #bandraworlisealink.#Mumbai.@RoadsOfMumbai @mumbaitraffic … Read more

ஜூலை 18-ல் தேர்தல்: குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி?

நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் எனவும், தேவைப்பட்டால் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 21-ம் தேதி நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25-ம் தேதி பதவி ஏற்க உள்ளார். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2017-ல் தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. Source link

இந்தியாவில் 2030க்குள் எய்ட்ஸை முழுவதுமாக ஒழிக்கும் பணி சவால் மிகுந்தது – ஐ.நா. துணை பிரதிநிதி ஆர்.ரவிந்திரா

இந்தியாவில் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் எய்ட்ஸ் நோயை 2030 ஆம் ஆண்டுக்குள் முழுவதுமாக ஒழிக்கும் பணிகள் தொடர்ந்து சவால் மிகுந்ததாகவே உள்ளதாக ஐ.நா.வுக்கான நிரந்தர துணை பிரதிநிதியான இந்திய துாதர் ஆர். ரவிந்திரா தெரிவித்துள்ளார். ஐ.நா.வில் நடைப்பெற்ற எய்ட்ஸ் சம்பந்தமான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர்அடுத்த 10 ஆண்டு காலத்திற்குள் எய்ட்ஸ் நோயை முற்றிலுமாக ஒழிக்க உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் … Read more

வீட்டில் யானை தந்தங்கள் பறிமுதல்; மோகன்லால் மீதான வழக்கை வாபஸ் பெற நீதிமன்றம் மறுப்பு: கேரள அரசின் மனு தள்ளுபடி

திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லாலின் வீட்டில் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கை ரத்து செய்ய அனுமதி கோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை பெரும்பாவூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு நடிகர் மோகன்லாலின் சென்னை, கொச்சி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கொச்சியில் உள்ள அவரது வீட்டில் இருந்து 2 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. வருமான வரித்துறை … Read more

துப்பாக்கியில் சுட்ட 16 வயது மகன் -உயிருடன் துடிதுடித்த தாய்; கொலையை மறைக்க ரூ.5,000 பேரம்

பப்ஜி விளையாடுவதை தடுத்ததற்காக தனது தாயை 16 வயதே ஆன மகன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த விவகாரத்தில், நாளுக்கு நாள் அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவர், மேற்கு வங்க மாநிலத்தில் பணியாற்றி வரும் நிலையில், அவரின் மனைவி, 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயதான மகன் மற்றும் 10 வயதான மகள் ஆகிய 3 பேர் மட்டும் லக்னோவில் தனியாக வசித்து வந்துள்ளனர். … Read more