நாயுடன் வாக்கிங் செல்வதற்காக விளையாட்டு வீரர்களுக்கு இடையூறு: ஐஏஎஸ் தம்பதி பணியிட மாற்றம்

புதுடெல்லி: தங்களின் வளர்ப்பு நாயுடன் வாக்கிங் செல்லும் பொருட்டு விளையாட்டு மைதானத்திலிருந்து பயிற்சி செய்யும் வீரர்களை முன் கூட்டிய வெளியேற்றி மைதானத்தை பூட்டி இடையூறு செய்து வந்த ஐஏஎஸ் தம்பதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் உள்ளது தியாகராஜா விளையாட்டு மைதானம். இந்த விளையாட்டு மைதானத்தில் ஏராளமான வீரர்கள் குறிப்பாக தடகள வீரர்கள் பயிற்சி செய்வது வழக்கம். இங்கு வீரர்கள் இரவு 8.30 மணி வரையும் பயிற்சி மேற்கொள்ள அனுமதி உண்டு. இந்நிலையில் டெல்லி அரசின் வருவாய்துறை … Read more

நடிகர் திலீப்பால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிரபல நடிகை கேரள முதலமைச்சரை சந்தித்து உதவி கோரினார்.!

நடிகர் திலீப்பால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிரபல தமிழ் மற்றும் மலையாளப் பட நடிகை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து முறையிட்டார். தற்போது 35 வயதான அந்த நடிகை 2017 ஆம் ஆண்டு நடிகர் திலீப்பால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக போலீசார் வழக்குப் பதிவு செய்து கொச்சி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பினராயி விஜயனை 15 நிமிடங்கள் சந்தித்து தமது நிலைமையை விளக்கிய நடிகைக்கு அரசு உதவும் என்று பினராயி … Read more

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கூறப்பட்டது. அதாவது மே 23-ந்தேதியே மழை தொடங்கும் என கருதப்பட்டது. ஆனால் தென்மேற்கு பருவமழை இதுவரை தொடங்கவில்லை. பருவமழையின் வருகையை அறிவிக்கும் அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை என்பதால் வருகிற 30-ந்தேதிக்கு முன்பு மழை தொடங்க வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையும் படியுங்கள்… பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி … Read more

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 12 மாவட்டங்களில் 5.61 லட்சம் பேர் பாதிப்பு

அசாம்: அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 12 மாவட்டங்களில் 5.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாகோன் , காசார், மோரிகோன் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 5.61 லட்சம் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வெள்ளத்தால் கடந்த 24 மணி நேரத்தில் நாகோனில் 2 பேர் பலியாகியுள்ளனர் என்றும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையும் தகவல் தெரிவித்துள்ளது. 

குரங்கு அம்மை நோய் – புதிய வழிகாட்டல்களை வெளியிடுகிறது மத்திய அரசு

பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருவதையடுத்து அது தொடர்பாக எச்சரிக்க, மத்திய அரசு சில வழிகாட்டல்களை வெளியிட உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம் ,பிரான்ஸ். ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து போர்ச்சுகல் ஸ்பெயின் உள்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நோய் பரவி உள்ளது. இது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையைப் பின்பற்றி வழிகாட்டல்கள் வெளியிடப்பட உள்ளது. தனிமைப்படுத்துதல், பரிசோதித்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதிப்பு குறித்த ஆய்வு போன்றவை இதில் இடம்பெறும். சர்வதேச  நாடுகளின் பயணிகள் … Read more

பிரதமர் மோடி மீது தமிழகத்தில் அன்பும், பாசமும் பெருகி வருகிறது; அமித்ஷா ட்விட்

டெல்லி: பிரதமர் மோடி மீது தமிழகத்தில் அன்பும், பாசமும் பெருகி வருகிறது என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தமிழர்கள் பிரதமர் மோடியை விரும்புகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பசுமை ஹைட்ரஜன் திட்டம் விரைவில் அமல்

பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை முழு வீச்சில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது. எந்தந்தத் துறைகளில் முதற்கட்டமாக பசுமை ஹைட்ரஜன் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான பட்டியலை மத்திய அரசு விரைவில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. பருவநிலை மாற்றம் அச்சுறுத்த லாக உருவெடுத்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்ட புதை படிம எரிபொருளுக்கு மாற்றாக புதுப் பிக்கத்தக்க எரி ஆற்றலுக்கான கட்டமைப்பை விரிவாக்க உலக நாடுகள் முயற்சிக்கின்றன. இந்தியா பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா உருவாக்கத்தில் … Read more

ஞானவாபி மசூதிக்குள் இந்து அடையாளங்களை அழிக்க முயற்சி நடப்பதாக புகார்.. மசூதி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு.!

வாரணாசியின் ஞானவாபி மசூதிக்குள் இந்து அடையாளங்களை அழிக்க முயற்சி நடப்பதாக இந்துக்கள் சார்பில் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து மசூதி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மசூதிக்குள் சிவலிங்கம் போன்ற இந்து கோவிலுக்கான சின்னங்கள் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில் இது தொடர்பான வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் மசூதிக்குள் உள்ள சிவலிங்கத்தைப் பிளந்து சேதப்படுத்தியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. கோவிலில் உள்ள இந்து அடையாளங்களை மறைக்க கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பெயின்ட் பூசிமறைக்கப்படுவதாகவும் … Read more

ஜவகர்லால் நேரு நினைவு தினம்- நினைவிடத்தில் சோனியா காந்தி அஞ்சலி

புதுடெல்லி: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 58-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். இதையும் படியுங்கள்…ரேசன் கடைகளில் விரைவில் பாக்கெட்டுகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு வழங்கப்படும்- அமைச்சர் சக்கரபாணி