பிரதமர் மோடி மீது தமிழகத்தில் அன்பும், பாசமும் பெருகி வருகிறது; அமித்ஷா ட்விட்

டெல்லி: பிரதமர் மோடி மீது தமிழகத்தில் அன்பும், பாசமும் பெருகி வருகிறது என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தமிழர்கள் பிரதமர் மோடியை விரும்புகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பசுமை ஹைட்ரஜன் திட்டம் விரைவில் அமல்

பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை முழு வீச்சில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது. எந்தந்தத் துறைகளில் முதற்கட்டமாக பசுமை ஹைட்ரஜன் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான பட்டியலை மத்திய அரசு விரைவில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. பருவநிலை மாற்றம் அச்சுறுத்த லாக உருவெடுத்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்ட புதை படிம எரிபொருளுக்கு மாற்றாக புதுப் பிக்கத்தக்க எரி ஆற்றலுக்கான கட்டமைப்பை விரிவாக்க உலக நாடுகள் முயற்சிக்கின்றன. இந்தியா பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா உருவாக்கத்தில் … Read more

ஞானவாபி மசூதிக்குள் இந்து அடையாளங்களை அழிக்க முயற்சி நடப்பதாக புகார்.. மசூதி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு.!

வாரணாசியின் ஞானவாபி மசூதிக்குள் இந்து அடையாளங்களை அழிக்க முயற்சி நடப்பதாக இந்துக்கள் சார்பில் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து மசூதி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மசூதிக்குள் சிவலிங்கம் போன்ற இந்து கோவிலுக்கான சின்னங்கள் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில் இது தொடர்பான வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் மசூதிக்குள் உள்ள சிவலிங்கத்தைப் பிளந்து சேதப்படுத்தியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. கோவிலில் உள்ள இந்து அடையாளங்களை மறைக்க கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பெயின்ட் பூசிமறைக்கப்படுவதாகவும் … Read more

ஜவகர்லால் நேரு நினைவு தினம்- நினைவிடத்தில் சோனியா காந்தி அஞ்சலி

புதுடெல்லி: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 58-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். இதையும் படியுங்கள்…ரேசன் கடைகளில் விரைவில் பாக்கெட்டுகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு வழங்கப்படும்- அமைச்சர் சக்கரபாணி

இந்தியாவில் ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா.. 14 பேர் பலி…. 2,296 பேர் குணமடைந்தனர்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,710 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,47,530 ஆக உயர்ந்தது.* புதிதாக 14 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

’மோடிக்கு 17 கேள்விகளுடன் பேனர்கள்’.. 2வது முறையாக பிரதமரின் நிகழ்ச்சியை தவிர்த்த கேசிஆர்!

ஐதராபாத்தில் பிரதமரின் நிகழ்ச்சியை தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தவிர்த்த நிலையில், பிரதமருக்கு 17 கேள்விகளை எழுப்பி பேனர்கள் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சென்னை வருவதற்கு முன்னதாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் நடைபெற்ற இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்லுரியின் 20-ம் ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். பின்னர் பேகம்பட் விமான நிலையத்தில் பா.ஜ. கட்சியினரிடம் பேசிய அவர், அம்மாநில முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவருமான சந்திர சேகர ராவை கடுமையாக விமர்சித்தார். … Read more

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் நியமனம்

புதுடெல்லி: ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷா பாரக். இவருடைய தந்தை ஓம் சிங், இந்திய ராணுவத்தில் காஷ்மீரில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தந்தையைப் போலவே ராணுவத்தில் ஆர்வம் கொண்ட அபிலாஷா, இந்திய விமானப் படையில் கடந்த 2018-ம்ஆண்டு செப்டம்பர் மாதம் சேர்ந்தார். அதன்பின் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள விமானப் படை போர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்தார். அங்கு பயிற்சி முடித்த 36 போர் விமானிகளுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்ச்சி … Read more

ஹரித்துவார் வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் ஒன்றொடொன்று ஆக்ரோஷமாக சண்டையிடும் வீடியோ இணையத்தில் வைரல்.!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் ஒன்றொடொன்று ஆக்ரோஷமாக சண்டையிடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய மாவட்ட வன அதிகாரி தீபக் சிங், யானைகளின் இந்த சண்டையை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு யானையின் தந்தம் இந்த சண்டையில் உடைந்து போனது என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். யானைகளின் இந்த மோதல் வழக்கமானது என்று கூறிய அவர், தங்களுக்குள் யார் பெரியவர் என்பதற்காகத் தான் இந்த … Read more

தேவகவுடாவுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு: பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணி?

பெங்களூரு முன்னாள் பிரதமர் தேவகவுடாவை பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, அவரது மகன் நிகில் குமாரசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அங்கு சந்திரசேகர ராவுக்கு மதிய உணவு பரிமாற்றப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு முடிந்து சந்திரசேகர ராவ் விமானம் மூலம் ஐதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார். அவர் புறப்படும் முன்பு நிருபர்களுக்கு அளித்த … Read more

எம்பி, எம்எல்ஏ.க்கள் தேசிய மாநாடு பெண்கள் அதிகளவில் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் பேச்சு

திருவனந்தபுரம்: சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ‘‘ஆசாதி கா அமிர்த் உத்ஸவ்’வின் தொடர்ச்சியாக பெரும்பாலான மாநில சட்டசபைகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாட்டை திருவனந்தபுரம் சட்டசபையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ேநற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாது: பெண்கள் மிகவும் வலிமை வாய்ந்தவர்கள். அதனால்தான் அவர்களை சக்தியின் மறு உருவம் என்று நாம் கூறி வருகிறோம். … Read more