முதலில் மம்தா பானர்ஜி! இன்று சுவேந்து அதிகாரி! இருமுறை திறந்து வைக்கப்பட்ட மேம்பாலம்!

மேற்கு வங்கத்தில் ரயில்வே மேம்பாலம் ஒன்றை கடந்த வாரம் முதல்வர் மம்தா பானர்ஜி திறந்துவைத்த நிலையில், இன்று மீண்டும் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி திறந்துவைத்துள்ள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் கமர்குண்டு ரயில்வே மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. கடந்த வாரம் இந்த மேம்பாலத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணா அவர்களும் மம்தா பானர்ஜியுடன் இணைந்து மேம்பாலத்தை திறந்து வைத்தால் பொருத்தமாக … Read more

செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவால் இந்தியாவுக்கே புகழ்.. குவியும் பாராட்டு !

நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் யங் ஜீனியஸ் பிரக்ஞானந்தா சாம்பியன் ஆனார். நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் தொடர் முழுவதும் அபாரமாக ஆடிவந்த பிரக்ஞானந்தா இந்தியாவின் பிரணீத்தை எதிர்கொண்டார். கருப்பு நிறக் காய்களில் அசத்திய பிரக்ஞானந்தா 49ஆவது நகர்த்தலில் வெற்றிபெற்றார்.  இதன் மூலம் ஒட்டுமொத்த 9 சுற்றுகளில் 6 வெற்றி, 3 டிரா என்று தோல்வி காணாத பிரக்ஞானந்தா 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இவருக்கு ரூ.2.59 … Read more

நூபுர் சர்மா சர்ச்சை: மீண்டும் ‘புல்டோசர்’ நடவடிக்கை – வன்முறையைக் கட்டுப்படுத்த யோகி அரசு அதிரடி

சஹரன்பூர்: நூபுர் சர்மா சர்ச்சையின் எதிரொலியாக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களும், வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறிவரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தை அடக்க, மாநில அரசு தனது சமீபத்திய ‘புல்டோசர்’ நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, உத்தரபிரதேசத்தின் கான்பூர் மற்றும் சஹரன்பூர் என இரண்டு நகரங்களில் கட்டிடங்கள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுவருகின்றன. சஹரன்பூரில் நேற்றுமுதல் கலவரம் அரங்கேறிவருகிறது. வன்முறையை தொடங்க காரணமாக கருதப்படும், முஸம்மில் மற்றும் அப்துல் வக்கீர் என்ற இருவரின் வீடுகளையும் முனிசிபல் … Read more

விலங்குகளுக்கும் வந்துவிட்டது கொரோனா தடுப்பூசி!

மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் கொரோனா தொற்று பரவுவது பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, மனிதர்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் வீட்டு விலங்குகளான நாய், பூனை உள்ளிட்டவற்றுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனாலும், மனிதர்களுக்கு கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு அளவுக்கு விலங்குகளுக்கு இந்த தொற்றால் பெரும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை எனவும், மிகவும் அரிதாகவே சில விலங்குகள் மட்டும் பாதிப்புக்கு ஆளாவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், விலங்குகளுக்கு செலுத்தக்கூடிய … Read more

நித்தி சிலையாயிட்டாராம்..! நித்திரை அடையவில்லையாம்..! நித்தம் ஒரு டிராமாவாம்..

நித்திக்கு என்ன தான் ஆச்சி என்று ஆசிரமவாசிகள் காத்திருக்கும் நிலையில் சமாதி நிலையில் இருக்கும் நித்தியின் சிலைகளை வைத்து பிடதி ஆசிரமத்தில் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவான நித்தி தனக்கென்று கைலாசா என்ற தேசத்தை கட்டமைத்து விட்டதாக கப்சா விட்டு வெளி நாட்டில் பதுங்கி வாழ்வதாக கூறப்பட்டது. அவர் இறந்து போனதாக கடந்த ஒரு மாதமாக தகவல் பரவி வரும் நிலையில் நித்தி சமாதி நிலையில் இருப்பதாக அவரது ஆசிரமத்தில் இருந்து அறிக்கை … Read more

கோவா போதை பொருள் வழக்கு; ஐயா… நீங்கள் மிகப்பெரிய தவறு செய்துள்ளீர்கள்: ஆர்யன் கான் கூறியதாக விசாரணை அதிகாரி பேட்டி

மும்பை: கோவா கப்பல் போதை பொருள் பார்ட்டியில் கைதான ஆர்யன்கான், விசாரணை அதிகாரியிடம் ஐயா, நீங்கள் எனக்கு எதிராக மிகப்பெரிய தவறு செய்துள்ளீர்கள் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்தாண்டு அக்டோபர் 2ம் தேதி இரவு கோவா நோக்கி சென்ற கப்பலில் போதை  ெபாருள் பார்ட்டி நடப்பதாக போதைபொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் சென்றது.  அதையடுத்து அந்தக் கப்பலில் அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது. அப்போது  பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், அர்பாஸ் … Read more

தங்கக் கடத்தல் வழக்கு: பினராயிக்கு எதிராக ஆடியோவை வெளியிட்ட ஸ்வப்னா சுரேஷ்!

கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில், புதிய திருப்பமாக ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்ட ஆடியோ பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாநில அரசுடன் நெருங்கிய தொடர்புடைய நபர் எனக் கூறப்படும் பத்திரிகையாளர் ராஜ் கிரண், ஸ்வப்னா சுரேஷுடன் பேசியதாக அந்த உரையாடல் உள்ளது. அதில், முதலமைச்சர் பினராயி விஜயன் தங்கக் கடத்தல் குற்றச்சாட்டை சகித்துக் கொள்ளமாட்டார் என்றும், எனவே இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளிக்கு வைக்க வேண்டும் என ராஜ்கிரண் பேசியுள்ளார். இந்த உரையாடல் பதிவு வெளியான நிலையில், முதலமைச்சருக்கு எதிராக கேரள … Read more

புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து பரிசோதனையில் வெற்றி என தகவல்.. 6 மாத சிகிச்சையில் 18 நோயாளிகள் குணம்..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தோஸ்டார்லிமாப் எனும் புதிய மருந்தை தொடர்ந்து எடுத்துக் கொண்ட பின் முற்றிலுமாக குணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் என்ற புற்றுநோய் மையம் நடத்திய பரிசோதனையில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. பரிசோதனை முறையில் தயாரிக்கப்பட்ட மருந்து, மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு 6 மாதங்கள் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த அரியானாவின் குருகிராமை சேர்ந்த புற்று நோய் நிபுணரான ரங்கா … Read more

மேற்கு வங்கத்தில் நடைபெறும் வன்முறைகளுக்கு பாஜகவினரே காரணம்: முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெறும் வன்முறைகளுக்கு பாஜகவினரே காரணம்: முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நபிகள் நாயகம் குறித்து பாஜ தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அதேபோல், இக்கட்சி தலைவர்களில் ஒருவரான ஜிண்டால் கூறிய கருத்தும் பெரும் சர்ச்சையானது. இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஓமான், அரபு அமீரகம், ஜோர்டன், ஆப்கானிஸ்தான், … Read more

வீட்டில் சடலமாக கிடந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா! கொலையா? தற்கொலையா?

பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா கரிமெல்லா ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார். பிரத்யுஷா கரிமெல்லா அமெரிக்காவில் பேஷன் டிசைனிங் படித்துவிட்டு ஹைதராபாத்தில் தனது ஆடை வடிவமைப்பாளர் பணியைத் தொடங்கினார். அவர் தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்களுக்கும், பாலிவுட்டில் சில நடிகர் – நடிகைகளிடமும் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (சனிக்கிழமை) பிரத்யுஷா சடலமாக மீட்கப்பட்டார். அவரது அறையில் கார்பன் மோனாக்சைடு பாட்டில் … Read more