பெரும்பான்மையை இழந்த மகாராஷ்டிர அரசு – அதிருப்தி அமைச்சர்களின் இலாகா பறிப்பு!

மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் … Read more

“இந்திய மாங்கனீசு நிறுவனத்தைத் தனியார் மயமாக்குவதிலிருந்து நான்தான் காப்பாற்றினேன்” – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பொதுத்துறையைச் சேர்ந்த இந்திய மாங்கனீசு நிறுவனத்தைத் தனியார் மயமாக்குவதில் இருந்து தான் காப்பாற்றியதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அரசின் பங்கு விற்பனைப் பட்டியலில் நாக்பூரைச் சேர்ந்த இந்திய மாங்கனீசு நிறுவனமும் இடம் பெற்றிருந்ததாகவும், அதை விட்டுவிட வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தான் கேட்டுக் கொண்டதாகவும் தொழிற்சங்க நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதின் கட்கரி தெரிவித்தார். Source link

சிறுவன் தண்ணீர் குடித்ததில் தகராறு இருபிரிவினர் பயங்கர மோதல்-விஜயநகரம் மாவட்டத்தில் பரபரப்பு

திருமலை: ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் சிறுவன் தண்ணீர் குடித்த தகராறில் இரு பிரிவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் நெல்லிமர்லா மண்டலம் மால்யடா கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பிற்படுத்தப்பட்டோர் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஆழ்துளை குழாயில்  தண்ணீர் குடித்ததால் சிறுவனை தாக்கியதாகவும், அதனால் பதிலுக்கு அவர்களும் தாக்குதலில் ஈடுப்பட்டதாகவும் இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக  போலீசார் கூறுகின்றனர்.  மலையடா கிராமத்தில் இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கட்டை … Read more

தொடங்கியது ஆள்சேர்ப்பு – அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்கள் இணைவது எப்படி?

இந்திய ராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்கள் எப்படி சேர வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம். இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் இளைஞர்களை பணியமர்த்தும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்திற்கு பரவலாக எதிர்ப்பு எழுந்த போதிலும், தற்போது ஆள்சேர்ப்பு நடவடிக்கையை ராணுவம் தொடங்கியுள்ளது. தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளில் தங்களுக்கு எதில் விருப்பமோ, அதில் இளைஞர்கள் சேர்ந்து கொள்ள முடியும். 17.5 முதல் 21 வயது வரை உள்ளவர்கள் … Read more

மகாராஷ்டிர அரசு பெரும்பான்மை இழந்து விட்டது; உச்ச நீதிமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டே மனு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிவசேனாவின் 38 எம்எல்ஏக்கள் விலக்கிக் கொண்டுள்ளதால் அந்த அரசு பெரும்பான்மை இழந்து விட்டது என ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறித்து, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கக் கோரி சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சுயேச்சை எம்எல்ஏ.க்கள் சிலர் ஆதரவுடன் அசாம் … Read more

குஜராத் கலவரம்: டீஸ்டா செதால்வட், ஆர்.பி.ஸ்ரீகுமாருக்கு போலீஸ் கஸ்டடி!

குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2002ஆம் ஆண்டில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, குஜராத் முழுவதும் கலவரம் வெடித்தது. ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி., இஷான் ஜாப்ரியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த கலவரம் தொடர்பாக அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு அமைப்பினர், பிரதமர் மோடி உள்பட 64 பேரை … Read more

அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை 3 லட்சம் பக்தர்கள் முன்பதிவு.. 43 நாள் அமர்நாத் யாத்திரை ஜீன் 30 ஆம் தேதி தொடங்குகிறது..!

இமயமலை சாரலில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோயிலில் வீற்றிருக்கும் பனிலிங்கத்தை தரிசிக்க இதுவரை 3 லட்சம் யாத்திரிகர்கள் முன்பதிவு செய்துள்ளனர். முதன்முறையாக அமர்நாத் யாத்திரையை ஒரே நாளில் பூர்த்தி செய்ய வசதியாக ஸ்ரீநகரில் இருந்து பன்ச்தார்னி அல்லது நீள்கிராத்துக்கு நேரடி ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படுகிறது.  Source link

ஆன்லைன் கேம், கேசினோவுக்கு 28% ஜிஎஸ்டி?.. நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவு..!

டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் கேசினோ உள்ளிட்டவைகளுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலில் 47-ஆவது கூட்டம், சண்டீகரில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறாா்கள். இதில் குதிரை பந்தையம், ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ சூதாட்டங்கள் ஆகியவற்றிற்கு 28% ஜிஎஸ்டி விதிக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. தற்போது கசினோ, … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் யஷ்வந்த் சின்கா!

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்கா, தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் வேட்புமனு தாக்கல் செய்கையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, சரத்பவார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளது. அதன் முடிவுகள் 21-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி … Read more

அவசரநிலை காலத்தில் ஜனநாயகத்தை முடக்க நடந்த சதி முறியடிப்பு – ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி: அவசரநிலை காலத்தில் ஜனநாயகத்தை முடக்க நடந்த சதி முறியடிக்கப்பட்டது. அந்த அவசரநிலையின் இருண்ட காலத்தை நாம்மறந்துவிடக்க கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்குபிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அதன்படி,இந்த மாதத்துக்கான (90-வது) ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது. கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி … Read more