அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை 3 லட்சம் பக்தர்கள் முன்பதிவு.. 43 நாள் அமர்நாத் யாத்திரை ஜீன் 30 ஆம் தேதி தொடங்குகிறது..!

இமயமலை சாரலில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோயிலில் வீற்றிருக்கும் பனிலிங்கத்தை தரிசிக்க இதுவரை 3 லட்சம் யாத்திரிகர்கள் முன்பதிவு செய்துள்ளனர். முதன்முறையாக அமர்நாத் யாத்திரையை ஒரே நாளில் பூர்த்தி செய்ய வசதியாக ஸ்ரீநகரில் இருந்து பன்ச்தார்னி அல்லது நீள்கிராத்துக்கு நேரடி ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படுகிறது.  Source link

ஆன்லைன் கேம், கேசினோவுக்கு 28% ஜிஎஸ்டி?.. நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவு..!

டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் கேசினோ உள்ளிட்டவைகளுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலில் 47-ஆவது கூட்டம், சண்டீகரில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறாா்கள். இதில் குதிரை பந்தையம், ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ சூதாட்டங்கள் ஆகியவற்றிற்கு 28% ஜிஎஸ்டி விதிக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. தற்போது கசினோ, … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் யஷ்வந்த் சின்கா!

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்கா, தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் வேட்புமனு தாக்கல் செய்கையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, சரத்பவார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளது. அதன் முடிவுகள் 21-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி … Read more

அவசரநிலை காலத்தில் ஜனநாயகத்தை முடக்க நடந்த சதி முறியடிப்பு – ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி: அவசரநிலை காலத்தில் ஜனநாயகத்தை முடக்க நடந்த சதி முறியடிக்கப்பட்டது. அந்த அவசரநிலையின் இருண்ட காலத்தை நாம்மறந்துவிடக்க கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்குபிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அதன்படி,இந்த மாதத்துக்கான (90-வது) ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது. கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி … Read more

Presidential Election: ஜனாதிபதி தேர்தல் – யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்!

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. … Read more

நில மோசடி விவகாரத்தில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி: நில மோசடி விவகாரத்தில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பத்ரா குடியிருப்பு நிலமோசடி விவகாரம் குறித்து விளக்கமளிக்க சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், மேகாலயாவுக்கு 96 டன் நிவாரணப் பொருட்கள்

புதுடெல்லி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், மேகாலயா மாநிலங்களுக்கு ஒரே நாளில் சுமார் 96 டன் அளவிலான நிவாரண பொருட்கள் விமானப்படை விமானங்கள் மூலம் வழங்கப்பட்டன. அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் பெய்த தொடர் கனமழையால் சுமார் 33 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 4 நாட்களாக விமானப்படை மூலம் குடிநீர், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் ஒரே நாளில் 96 டன் … Read more

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆன்மா செத்துவிட்டது: சஞ்சய் ராவத்

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆன்மா செத்துவிட்டது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்துள்ளார். 40 ஆண்டுகளாக கட்சியில் இருந்தவர்கள் ஓடிப்போன நிலையில், அவர்களிடம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். கட்சியில் உண்டு, குடித்து குதுகலமாக இருந்தவர்கள், தங்களது தந்தையை மாற்றியுள்ளனர் என்றும், தாங்கள் அவர்கள் போல் இல்லை எனவும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். Source link

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்

டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர்கள் முன்னிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை செயலரிடம் மனு அளித்தார். வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் ராகுல் காந்தி, சரத்பவார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

போருக்கு தயாராகிறதா சீனா? லடாக் எல்லையில் படை பலத்தை பல மடங்கு பெருக்கி அச்சுறுத்தல்

இந்தியாவின் லடாக் எல்லையில் தனது படை பலத்தையும், ஆயுத பலத்தையும் சீனா பல மடங்கு பெருக்கியுள்ளதால் மீண்டும் போர் பதற்றம் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் சீன ராணுவத்தினர் திடீரென ஊடுருவினர். இதையடுத்து அங்கு இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு சீனப் படையினரின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சூழலில், அதே ஆண்டு ஜூன் மாதம் இரு … Read more