மழை வெள்ளம் : மேகாலயாவில் லட்சக் கணக்கான மக்கள் பாதிப்பு.. விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்..!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், மேகாலயா மாநிலங்களுக்கு ஒரே நாளில் சுமார் 96 டன் அளவிலான நிவாரண பொருட்கள் விமானப்படை விமானங்கள் மூலம் வழங்கப்பட்டன. அசாமில் பெய்த தொடர் கனமழையால் சுமார் 33 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக் கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 4 நாட்களாக விமானப்படை மூலம் குடிநீர், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் சுமார் 203 டன் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. C-130, … Read more

நாளுக்கு நாள் பரபரப்பாகும் சிவசேனா மோதல் புதிய அணி தொடங்கினார் ஷிண்டே: 16 அதிருப்தி எம்எல்ஏ.க்களுக்கு கட்சி நீக்க நோட்டீஸ்

மும்பை:  உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று கேட்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி  அணியை சேர்ந்த 16  எம்.எல்.ஏக்களுக்கு துணை சபாநாயகர் நோட்டீஸ்  அனுப்பியுள்ளார். இந்நிலையில், சிவசனோ பாலசாகேப் என்ற பெயரில்  அதிருப்தி அணியினர் புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ஏக்நாத்  ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ.க்கள் அசாமில் … Read more

ஊழல் புகாரில் கைதான ஐஏஎஸ் அதிகாரியின் மகன் அவமானத்தில் தற்கொலை

சண்டிகர்: பஞ்சாபில் ஊழல் புகாரில் கைதான ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டில் சோதனை நடந்தபோது அவரது மகன் தற்கொலை செய்து கொண்டார். பஞ்சாப் மாநில ஓய்வூதிய துறை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் பாப்லி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இதற்கு முன்பு சஞ்சய் பாப்லி கழிவு நீரகற்று வாரிய தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது, பைப்லைன் அமைப்பது தொடர்பான டெண்டரை ஒதுக்குவதற்காக 1 சதவீதம் லஞ்சம் கேட்டதாக ஊழல் தடுப்பு பிரிவின் ஹெல்ப்லைன் எண்ணில் ஒப்பந்ததாரரான சஞ்சய் குமார் … Read more

“விண்வெளித் துறையிலும், விளையாட்டிலும் முன்னேற்றம்” – பிரதமர் மோடி பெருமிதம்

விண்வெளித் துறையில் நூற்றுக்கு மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் உருவாகி உள்ளதாகவும், விளையாட்டுத் துறையில் தொழிலாளர்களின் பிள்ளைகள் பதக்கங்களை வென்று முன்னேறியுள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.  மனத்தின் குரல் என்னும் பெயரில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள் நாட்டில் நெருக்கடி நிலை பிறப்பித்தபோது குடிமக்களின் வாழ்வுரிமை, தனிமனிதச் சுதந்திரம் உட்பட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.  புகழ்பெற்ற பாடகர் கிசோர் குமார் அரசைப் போற்றிப் பாட … Read more

இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக 700 தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி: உளவுத்துறை எச்சரிக்கை

ஸ்ரீநகர்: இந்தியாவில் ஊடுருவி தாக்குதல் நடத்துவற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 700 தீவிரவாதிகளுக்கு 11 முகாம்களில் ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு வழியாக பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுருவுகின்றனர். இவர்கள் ஜம்முவில்  தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு, அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீப நாட்களாக தீவிரவாதிகளின் இந்த நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் நேற்று கூறிய தாவது: … Read more

இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க – அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா

இந்தியாவில் சாலையோர உணவுகளுக்கு பிரபலமான இடமென்றால் அது வட மாநிலங்கள்தான். அங்குதான் வகை வகையான சாட் நொறுக்குகள் கிடைப்பதுண்டு. வட மாநிலங்களிலேயே குஜராத்தி உணவுகளுக்கென உணவு பிரியர்களிடையே தனி இடம் உண்டு. அதுவும் வெரைட்டி வெரைட்டியான சாண்ட்விச்களை பிடிக்காது என கூறுவோர் அரிதுதான். ஆனால் பல வகை உணவுகளை விரும்பி உண்ணும் ஃபுட்டீஸ்களே ஐயோ எனச் சொல்லி அலறி ஓடும் வகையில் ஒரு திணுசான சாண்ட்விச் வீடியோ பற்றிதான் பார்க்க போகிறோம். சீஸ்ஸை கொண்டு தயாரிக்கும் சாண்ட்விச் … Read more

விண்வெளித் துறையில் இந்தியா இனி பின்தங்க வாய்ப்பே இல்லை: பிரதமர் மோடி புகழாரம்

இந்திய இளைஞர் விண்ணைத் தொட தயாராக இருக்கிறார்கள். அதனால் இத்துறையில் இனியும் இந்தியா பின்தங்க வாய்ப்பே இல்லை என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் மாதந்தோறும் வானொலியில் கடைசி ஞாயிற்றுக் கிழமை ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதற்கான கருத்துகள், தகவல்களை மக்களிடம் பெற்று தனது பேச்சை பிரதமர் வடிவமைக்கிறார். அந்தவகையில் ஜூன் 26-ம் வானொலியில் … Read more

முதல்வர் யோகி சென்ற ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!

உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டரில், பறவை மோதியதால், அவசரமாக தரையிறக்கப்பட்டது. பாஜக மூத்தத் தலைவரும், உத்தர பிரதேச மாநில முதலமைச்சருமான யோகி ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியான வாரணாசியில் இருந்து, தலைநகர் லக்னோவுக்கு, சிறப்பு ஹெலிகாப்டரில் இன்று காலை புறப்பட்டார். புறப்பட்ட சில நேரங்களிலேயே, ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் சுதாரித்துக் கொண்ட விமானி, உடனடியாக, ஹெலிகாப்டரை தரையிறக்கினார். இந்த ஹெலிகாப்டர், வாரணாசி … Read more

தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!

கர்நாடகாவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பெல்காவி மாவட்டத்தில் நடைபெறும் கட்டுமான பணிக்காக சென்ற வாகனத்தில் தொழிலாளர்கள் பயணம் செய்த நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் கால்வாயில் கவிழ்ந்தது. Source link

34 ஆயிரம் கோடி மோசடி செய்த டிஎச்எப்எல்.லிடம் தேர்தல் நிதி வாங்கி குவித்தது பாஜ: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: யூனியன் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் 34,615 கோடி நிதி திரட்டி மோசடியில் ஈடுபட்டதாக டிஎச்எப்எல் நிதி நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி கபில் வாத்வான், இயக்குநர் தீரஜ் வாத்வான்  மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. இதுதான், நாட்டிலேயே சிபிஐ விசாரிக்கும் அதிகபட்ச வங்கி கடன் மோசடி வழக்காகும்.இந்நிலையில், காங்கிரஸ்  செய்தி தொடர்பாளர் சுப்ரியா  ஸ்ரீநாட்டே நேற்று அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் மோடியின் மேற்பார்வையில் இருக்கும் துறையில் மிக பெரிய  மோசடி நடந்துள்ளது. டிஎச்எல்எல் … Read more