34 ஆயிரம் கோடி மோசடி செய்த டிஎச்எப்எல்.லிடம் தேர்தல் நிதி வாங்கி குவித்தது பாஜ: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: யூனியன் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் 34,615 கோடி நிதி திரட்டி மோசடியில் ஈடுபட்டதாக டிஎச்எப்எல் நிதி நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி கபில் வாத்வான், இயக்குநர் தீரஜ் வாத்வான்  மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. இதுதான், நாட்டிலேயே சிபிஐ விசாரிக்கும் அதிகபட்ச வங்கி கடன் மோசடி வழக்காகும்.இந்நிலையில், காங்கிரஸ்  செய்தி தொடர்பாளர் சுப்ரியா  ஸ்ரீநாட்டே நேற்று அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் மோடியின் மேற்பார்வையில் இருக்கும் துறையில் மிக பெரிய  மோசடி நடந்துள்ளது. டிஎச்எல்எல் … Read more

'அதிகாரத்தை விட்டுக்கொடுத்து விட்டார் புதுச்சேரி முதல்வர்' – நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது அதிகாரத்தை ஆளுநருக்கு விட்டுக்கொடுத்து விட்டதாக முன்னாள் முதல்வர் நாராயண சாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: தனக்கான அதிகாரத்தைஆளுநருக்கு வழங்க முதல்வர் ரங்கசாமி முடிவெடுத்து விட்டார். அமைச்சர்களின் கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதுதான் விதிமுறை. ஆனால், அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்துகிறார் துணைநிலை ஆளுநர். அதற்கு அவருக்கு அதிகாரம் கிடையாது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு துணைநிலை ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை … Read more

புதிய வளாகம் திறக்கப்பட்ட பிறகு காசி விஸ்வநாதர் கோயில் நன்கொடை 15 மடங்கு உயர்வு

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் கனவு திட்டமான காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் விரிவாக்கத் திட்டத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின், கோயில் வளாகம் திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி மிக பிரம்மாண்டமான முறையில் கோயில் வளாகத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன்பின், கோயிலுக்கு வரும் பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. … Read more

கனமழையால் சாலையில் பெயர்ந்து விழும் பாறாங்கற்கள்.. பத்ரிநாத் செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்..!

உத்தரகாண்டில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பிர்ஹி மற்றும் பகல்னாலே பகுதிகளில் பாறாங்கற்கள் பெயர்ந்து விழுத்துள்ளதால் பாறாங்கற்களை அப்புறப்படுத்தி சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. Source link

பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடி வங்கி மோசடி: காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் 6 லட்சம் கோடி ரூபாய் வங்கி மோசடிகள் அரங்கேறி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, நரேந்திர மோடியின் ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரும் வங்கி மோசடிகள் என குறிப்பிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தொழிலதிபர் விஜய் மல்லையா 9,000 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வங்கிகளில் … Read more

உ.பி: முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம் – என்ன காரணம்?

உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதில் அவசர அவசரமாக தரையிறக்கம். உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சட்டம் – ஒழுங்கு நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக நேற்று வாரணாசி சென்றிருந்தார். வாரணாசியில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று காலை அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவுக்கு ஹெலிகாப்டர் மூலம் அவர் புறப்பட்டார். புறப்பட்ட சிறிது நேரத்திலே அவரது ஹெலிகாப்டர் மீது … Read more

பறவை மோதியதால் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

லக்னோ: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதை அடுத்து அந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறவை மோதியதால் புறப்பட்ட இடத்திலே மீண்டும் தரையிறக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவுசல்ராஜ் சர்மா தரப்பில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 2 நாட்கள் பயணமாக வாரணாசி வந்திருந்தார். இன்று காலை வாரணாசியில் இருந்து அவர் லக்னோ புறப்பட்டார். லக்னோ புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஹெலிகாப்டரில் … Read more

ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஜெர்மனியில் இன்றும், நாளையும் 48ஆவது ஜி-7 மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கால்ஷ் அழைப்பை விடுத்திருந்தார். அதன்பேரில் அந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார். நேற்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், பிரதமர் மோடி ஜெர்மனி சென்றடைந்துள்ளார், அந்நாட்டின் முனிச் நகருக்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இசைக்கச்சேரியுடன் … Read more

வெள்ளப் பாதிப்பைப் பார்வையிட்ட அசாம் முதலமைச்சர்.. துணிச்சலுடன் வெள்ளத்தில் இறங்கி முதலமைச்சரை வாழ்த்திய மனிதர்..!

அசாமில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ரப்பர் படகில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு ஒருவர் துணிச்சலுடன் வெள்ளத்தில் இறங்கிச் சென்று பொன்னாடை வழங்கி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சில்ச்சாரில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினருடன் ரப்பர் படகில் முதலமைச்சர் சென்று வெள்ளப் பாதிப்பைப் பார்வையிட்டார். Source link

கர்நாடகா மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

கர்நாடகா:கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். கல்யல் புல் கிராமத்தை சேர்ந்த 7 பேர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கார் விபத்தில் 7 பேர் உயிரிழந்தது குறித்து மரிஹா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.