சூரை மீன் ஏற்றுமதியில் முறைகேடு – லட்சத்தீவு எம்.பி. முகமதுவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

லட்சத்தீவுகள்: யூனியன் பிரதேசமான லட்சத் தீவிலிருந்து இலங்கைக்கு சூரை மீன்கள் ஏற்றுமதி செய்ததில் முறைகேடு நிகழ்ந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து மத்திய புலனாய்வு குழுவினர் (சிபிஐ) மற்றும் லட்சத்தீவு கண்காணிப்பு அதிகாரிகள் 25 பேர் அடங்கிய குழு விசாரணையை தீவிரப்படுத்தியது. லட்சத்தீவு கூட்டுறவு சந்தை சம்மேளன (எல்சிஎம்எப்) பணியாளர்கள் சிலர் அரசியல்வாதிகள் மற்றும் அரசு பணியாளர்களின் உதவியோடு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இதனால் கூட்டுறவு அமைப்புக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக சிபிஐ தனது விசாரணையில் குறிப்பிட்டுள்ளது. உரிய ஏற்றுமதி … Read more

ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி..!

ஜி7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மனியில் உள்ள இந்தியர்கள் ஒன்றுகூடி நம் பிரதமரை வரவேற்றனர்.  அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட ஜி7 நாடுகள் பங்கேற்கும் மூன்று நாள் உச்சி மாநாடு ஜெர்மனியின் பவாரியா பகுதியில் இன்று தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட 5 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நள்ளிரவில் … Read more

குஜராத் கலவர வழக்கில் பொய் குற்றச்சாட்டு 19 ஆண்டுகளாக வலியை மவுனமாக தாங்கிய மோடி: அமித்ஷா உருக்கம்

புதுடெல்லி: ‘குஜராத் கலவர வழக்கில் கூறப்பட்ட பொய் குற்றச்சாட்டின் வலியை  பிரதமர் மோடி 19 ஆண்டுகளாக மவுனமாக  தாங்கி கொண்டிருந்தார்,’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவர வழக்கில், அப்போது இம்மாநில முதல்வராக  இருந்த பிரதமர் மோடி உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று கூறியதாவது:குஜராத் கலவர … Read more

என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ

ஃபாஸ்ட் டேக்கை (Fast Tag) ஸ்கேன் செய்து வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு சிறுவன் பணத்தை திருடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம் செலுத்தும் முறைக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டதே ‘ஃபாஸ்ட் டேக்’ நடைமுறை. இதன்படி, கார்களில் ‘ஃபாஸ்ட் டேக்’ பெயரில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். கார்கள் எப்போது சுங்கச்சாவடிகளை கடக்கிறதோ, அப்போது அந்த ஸ்டிக்கர்கல் ஸ்கேன் … Read more

வயநாட்டில் ராகுல் காந்தி அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் 19 பேர் கைது

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தியின் அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். வயநாட்டில் அவரது அலுவலகம் உள்ளது. இந்நிலையில் இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஒரு கும்பல் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியது. அங்கிருந்த ஊழியர்களையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் ஆளும் … Read more

குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் தகவல்கள் தந்த சமூக ஆர்வலர் கைது.!

குஜராத் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் சமூக ஆர்வலர் டீஸ்டா செட்டால்வாட்டை மும்பை சாந்தா குரூஸ் காவல் நிலையத்தில் இருந்து குஜராத்துக்கு அழைத்துச் சென்றனர்.  மும்பையில் உள்ள டீஸ்டாவின் வீட்டை முற்றுகையிட்ட  காவல்துறையினர் தம் வீட்டில் அத்துமீறிப் புகுந்து தாக்கியதாக டீஸ்டா புகார் தெரிவித்துள்ளார். டீஸ்டா தொடர்புடைய தொண்டு நிறுவனம் முறைகேடாக வெளிநாட்டில் இருந்து பணத்தை பரிவர்த்தனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட டீஸ்டா 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தைப் பற்றி தகவல் தந்ததாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. … Read more

திரவுபதி முர்மு குறித்து விமர்சனம் ராம்கோபால் வர்மா மீது பாஜ நிர்வாகிகள் புகார்

சித்தூர்: ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு குறித்து தரக்குறைவாக டிவிட்டரில் விமர்சனம் செய்த திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது, சித்தூர் முதலாவது காவல் நிலையத்தில் பாஜ கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி, பாஜ சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரவுபதி முர்முவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால், நேற்று முன்தினம் இரவு தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது … Read more

மகாராஷ்டிராவில் சிவசேனா அரசுக்கு நெருக்கடி – அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேருக்கு நோட்டீஸ்

மும்பை: சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 16 பேருக்கு நேற்று தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பிய மகாராஷ்டிரா துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வல், நாளை மாலைக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறித்து, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கக் கோரி சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சுயேச்சை எம்எல்ஏ.க்கள் … Read more

கொரோனா கட்டுப்பாடுகள்: அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

நாடு முழுவதும் கொரோனா 3ஆவது அலையின் தாக்கம் கணிசமாக குறைந்து வழக்கமான இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் டெல்லியைச் சுற்றியுள்ள தேசிய தலைநகர் பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா, ஹரியானா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், குஜராத், தமிழ்நாடு ஆகிய பத்து மாநிலங்களில் தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி … Read more

திரையுலகில் 30 ஆண்டுகள் நிறைவு.. புதிய படம் அப்டேட் கொடுத்த ஷாருக்கான்..!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திரையுலகில் அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமது இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் பேன் இந்தியா காலத்தின் புதிய படமான பத்தானின் அசையும் போஸ்டரை வெளியிட்டார். 1992 ஆம் ஆண்டில் தீவானா படத்தில் திவ்யபாரதிக்கு ஜோடியாக நடித்த ஷாருக்கான் தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே படத்தில் காஜோலுடன் நடித்தார். அந்தப் படம் மும்பை மராத்தா மந்திர் திரையரங்கில் 22 ஆண்டுகளுக்கு ஓடியது. ஷாருக்கானுக்கு திரையுலகினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் Source link