”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
பாஜகவின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு குறித்து அவதூறாக ட்விட்டரில் பதிவிட்டதாக, பிரபல திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் சர்ச்சையான திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர் ராம்கோபால் வர்மா. திரைப்படங்கள் மட்டுமின்றி பொதுவெளியிலும், சமூகவலைத்தளங்களிலும் இவர் கூறும் கருத்துக்களும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு குறித்து கருத்து கூறி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்து தற்போது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. தனது … Read more