சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக ராகுலை விமர்சித்த கங்கனா ரனாவத்

மும்பை: சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை கங்கனா ரனாவத், ‘மார்பிங்’ புகைப்படம் மூலம் விமர்சனம் செய்துள்ளார். கடந்த 30-ம் தேதி மக்களவையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் பாஜக எம்பி அனுராக் தாக்குருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார். அனுராக் தாக்குர் கூறும்போது, “சாதி தெரியாதவர்கள், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பேசுகிறார்கள்’’ … Read more

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக முதலில் தகவல் கொடுத்த பெண் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, மெப்படி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 30-ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இது தொடர்பாக முதலில் தகவல் கொடுத்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சூரல்மலை கிராமத்தில் நீது ஜோஜோ என்ற பெண் வசித்து வந்தார். 30-ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு அவரது வீட்டுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதையடுத்து தூக்கத்திலிருந்து விழித்த அவர், தான் பணிபுரியும் வயநாடு மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு (விம்ஸ்) தகவல் கொடுத்துள்ளார். … Read more

பொக்ரான் அணு குண்டு சோதனையால் 25 ஆண்டு தடைக்குப்பின் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட தயாராகிறது அமெரிக்கா

புதுடெல்லி: பொக்ரான் அணு குண்டு சோதனையை அடுத்து இந்தியா மீது தடை விதிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு பிறகு, விண்வெளி திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட நாசா தயாராகியுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தை அடுத்த ஆண்டு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அமெரிக்காவில் உள்ள தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஆக்ஸிஓம் நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 4 விண்வெளி … Read more

ஆபத்தான அறைகள், கொள்ளை கட்டணங்கள்: டெல்லி குடிமைப் பணி பயிற்சி மாணவர்களின் அவல நிலை

புதுடெல்லி: டெல்லியில் குடிமைப் பணி உள்ளிட்ட தேர்வுகளின் பயிற்சிக்கு தயாராகும் மாணவர்களை குறிவைத்து ஆபத்தான நிலையில் உள்ள தங்கும் அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. இதில் தங்கி பயிற்சிக்கு தயாராகும் அவல நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. டெல்லியில் இயங்கிவரும் தனியார் ஐஏஎஸ் தேர்வுப் பயிற்சி மையத்தில், ஜூலை 27 அன்று மழை வெள்ளம் புகுந்ததில் மூன்று இளம் பட்டதாரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்து நாட்டின் தலைநகரில் தங்கி … Read more

பெண் அதிகாரியை மிரட்டிய மேற்குவங்க அமைச்சர் பதவி நீக்கம்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் தாஜ்பூர் பகுதியில் வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 22 கடைகள் அண்மையில் அகற்றப்பட்டன. இதற்கு கிழக்கு மிட்னாபூர் தொகுதி எம்எல்ஏவும் மாநில சிறைத் துறை அமைச்சருமான அகில் கிரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 3-ம் தேதி தாஜ்பூர் பகுதிக்கு சென்ற அமைச்சர் கிரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்த வனத்துறை பெண் அதிகாரி மணீஷாவை அநாகரிகமாக மிரட்டினார். “நீங்கள் ஓர் … Read more

டெல்லி மாநகராட்சிக்கு 10 நிபுணர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சிக்கு நிபுணர்கள் 10 பேரை நியமிக்கும் அதிகாரம் டெல்லி துணைநிலை ஆளுநருக்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. டெல்லி மாநகராட்சியின் மேயராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் இருக்கிறார். அவருக்கு அடுத்த நிலை அதிகாரம் கொண்ட நிபுணர்கள் (ஆல்டர்மென்) 10 பேரை துணைநிலை ஆளுநர் நியமனம் செய்தார். இதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். … Read more

மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கான 18% ஜிஎஸ்டியை குறைக்க திரிணமூல் எம்பி வலியுறுத்தல்

புதுடெல்லி: மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான 18% ஜிஎஸ்டியை குறைக்குமாறு மத்திய அரசை, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய டெரெக் ஓ பிரையன், “மருத்துவம் மற்றும் சுகாதார காப்பீடு மீதான 18% ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும். இது மக்களுக்கு, முக்கியமாக நடுத்தர வர்க்கத்தினருக்கு சுமையாக இருக்கும் பிரச்சினை. சர்வதேச அளவில் மருத்துவக் காப்பீடு 7% க்கும் அதிகமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் இது 4% க்கும் குறைவாக … Read more

வெப்ப அலைகளால் ஆந்திராவில் அதிக உயிரிழப்பு, தமிழகத்தில் குறைவு: மக்களவையில் தகவல் 

புதுடெல்லி: கோடை வெப்ப அலைகளால் ஆந்திரா மாநிலத்தில் அதிகமான உயிரிழப்புகளும், தமிழகத்தில் குறைவாகவும் உள்ளது என திமுக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார். மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் வெப்ப அலைகள் காரணமாக நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை கேட்டிருந்தார். Source link

வயநாடு நிலச்சரிவிற்கு பசுவதை தான் காரணம் – பாஜக மூத்த தலைவர்!

ராஜஸ்தான் மாநில முன்னாள் எம்எல்ஏவும், பாஜக மூத்த தலைவருமான கியான்தேவ் அஹுஜா வயநாடு நிலச்சரிவிற்கு பசுவதை தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.  

பத்திரிகையாளர்களுக்கு சரியான ஊதியத்தை அரசு உறுதி செய்ய வேண்டும்: சிபிஎம் எம்பி வலியுறுத்தல்

புதுடெல்லி: பத்திரிகையாளர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சிபிஎம் எம்பி சிவதாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய சிவதாசன், “ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் என்ற அமைப்பால் வெளியிடப்பட்ட பத்திரிகை சுதந்திரக் குறியீட்டின் 2024 பதிப்பில் 180 நாடுகளில் இந்தியா 159வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட ஒரு சிறிய முன்னேற்றம் இருந்தாலும், சமீப காலங்களில் இந்தியாவின் செயல்திறன் தொடர்ந்து மோசமாக உள்ளது. பத்திரிகையாளர்கள் சட்டவிரோத செயல் தடுப்பு சட்டம் … Read more