கொப்பரை நிலுவை ரூ.150 கோடி: மத்திய அரசுக்கு எதிராக தமிழக விவசாயிகள் போராட முடிவு

சென்னை: மத்திய அரசின் நாபெட் (என்ஏஎப்இடி) நிறுவனத்தில் தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதலான கொப்பரை தேங்காய்களுக்கு ரூ.150 கோடி நிலுவை உள்ளது. இந்த தொகையை ஒரு வாரத்தில் தராவிட்டால், சென்னை நாபெட் அலுவலகம் முன் போராட்டம் நடத்துவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் எச்சரித்துள்ளது. இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி விடுத்துள்ள அறிக்கையில், “20 ரூபாய்க்கு விற்று வந்த தேங்காயின் விலை தற்போது 10 ரூபாய்க்கு விற்று வருவதால் … Read more

டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்: வங்கதேச நிலவரம் குறித்து விளக்கமளிக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர்

புதுடெல்லி: வங்கதேச விவகாரம் குறித்து விவாதிக்க டெல்லியில் மத்திய அரசின் சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். அந்நாட்டு ராணுவ விமானத்தில் தனது சகோதரி ஹேக் ரேஹானாவுடன் பிரதமர் மாளிகையான கனபாபனில் இருந்து புறப்பட்டார். அவர்கள் புறப்பட்ட விமானம் புதுடெல்லி அருகே ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் … Read more

புறப்பட்டார் ஷேக் ஹசீனா… அடுத்தது எங்கே? – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

Sheikh Hasina: வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா வந்த ராணுவ விமானம் தற்போது ஹிண்டன் விமான தளத்தில் இருந்து தனது அடுத்த இலக்கு நோக்கி புறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் பயணத்தை ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய பலரை மீட்டவர் மாயம்

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கிய பலரை தனது உயிரை பணயம்வைத்து மீட்டவர் மாயமாகி உள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலை 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். இவர்களை மீட்கும் பணியில் தன்னார்வலர்கள், மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டனர். அந்த வகையில், சூரல்மலை கிராமத்தைச் சேர்ந்த லாட் பிரஜீஷ் என்பவரும் நிலச்சரிவில் சிக்கிய பலரின் … Read more

வங்கதேசத்தில் திடீர் ராணுவ ஆட்சி: பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்

புதுடெல்லி: வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் பெரும் கலவரமாக வெடித்த நிலையில், தலைநகர் டாக்காவில் நாடாளுமன்றம், பிரதமர் இல்லத்துக்குள் வன்முறை கும்பல் புகுந்து சூறையாடியது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த 1971-ல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாகஉதயமானது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர்தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு சார்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. … Read more

இந்தியாவில் எங்கு இருக்கிறார் ஷேக் ஹசீனா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Sheikh Hasina: 76 வயதான பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக நாட்டை விட்டு தப்பித்து இந்தியாவிற்கு வந்துள்ளார்.   

கன்வர் யாத்திரையின்போது பிஹாரில் மின்சாரம் பாய்ந்து 9 பக்தர்கள் உயிரிழப்பு

பாட்னா: வட மாநிலங்களில் சிவ பக்தர்கள் மேற்கொள்ளும் வருடாந்திர காவடி யாத்திரை (கன்வர் யாத்ரா) கடந்த மாதம் தொடங்கியது. ஆகஸ்ட் 22-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெற உள்ளது. கங்கை நதியை ஒட்டியுள்ள புனிததலங்களுக்கு சிவ பக்தர்கள் பயணம் செய்து, அங்கு கலசங்களில் நீரை சேகரித்து வந்து தங்கள்ஊர்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இந்நிலையில் பிஹாரின் வைசாலி மாவட்டம் சுல்தான்பூர் என்ற கிராமத்தில் கன்வர்யாத்திரை மேற்கொண்டிருந்த பக்தர்களின் வாகனம் மீது உயரழுத்த மின்கம்பி … Read more

வங்கதேசத்தில் திடீர் ராணுவ ஆட்சி: பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம்

புதுடெல்லி: வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் பெரும் கலவரமாக வெடித்த நிலையில், தலைநகர் டாக்காவில் நாடாளுமன்றம், பிரதமர் இல்லத்துக்குள் வன்முறை கும்பல் புகுந்து சூறையாடியது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த 1971-ல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாகஉதயமானது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர்தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு சார்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. … Read more

மத்திய பிரதேசத்தில் கனமழையால் பரிதாபம்: சுவர் இடிந்து 9 சிறுவர்கள் உயிரிழப்பு

போபால்: மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 9 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிக பழமையான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. ரேவா மாவட்டத்தில் நேற்று முன்தினம் சுவர் இடிந்து விழுந்ததில், பள்ளிக்கு சென்று திரும்பிய … Read more

பம்பா – அச்சன்கோவில் – வைப்பாறு இணைப்பு திட்டத்துக்கு 30 ஆண்டுகளாக முட்டுக்கட்டை போடும் கேரளா

சென்னை: தமிழகம், கேரளா ஆகிய இரு மாநிலங்களும் பயன்பெறும் பம்பா – அச்சன்கோவில் – வைப்பாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற சாத்தியக்கூறு இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. தமிழக அரசும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், கேரள அரசு இதற்கு கடந்த 30 ஆண்டுகளாக முட்டுக்கட்டை போட்டு வருகிறது . கேரளாவின் பம்பா, அச்சன்கோவில் ஆறுகளில் இருந்து ஆண்டுதோறும் 110 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அதில் 22 டிஎம்சி தண் ணீரை தமிழகத்தின் வைப்பாறுக்கு … Read more