டாஸ்மார்க் கடையில் மது அருந்துவதற்கு பணம் தர மறுத்த தாயை, மகனே கொடூரமாக அடித்து உதைத்த சம்பவம்!
கன்னியாகுமரி அருகே மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில், பெற்ற தாயை நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய மகனை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், இலந்தவிளை பகுதியை சேர்ந்தவர் மேரி மார்கிரட். இவரின் மகன் ஷர்லின் ஜோஸ் மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவர், அடிக்கடி வீட்டில் இருக்கும் பணம், தாயிடம் இருக்கும் பணத்தை மிரட்டி பறித்து மது குடித்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ள ஷர்லின் ஜோஸ், மதுபோதையில் ரகளையில் ஈடுபடுவதாகவும் சொல்லப்படுகிறது. … Read more