விருதுநகர் அருகே கோவை நோக்கி சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

விருதுநகர்: விருதுநகர் அருகே கோவை நோக்கி சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பயணிகள் காயமின்றி உயிர் தப்பிய நிலையில் பேருந்து தீக்கிரை ஏற்பட்டது.

தஞ்சையில் சோகம் : சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 2 பேர் பலி – 40 பேர் படுகாயம்.!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு அருகே ஆம்னி பேருந்து ஒன்று நாற்பதுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. இதையடுத்து இந்தப் பேருந்து கீழையூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.  இதனால், நிலை தடுமாறிய பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், நாற்பது பேர் படுகாயமடைந்தனர்.  இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் … Read more

வந்தே பாரத் ரெயில் சேவையை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி போபாலில் நேற்று கொடி அசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ”இந்த வந்தே பாரத் சேவையை தொடங்கிவைக்கும் நாள் ஏப்ரல் 1 என என்னிடம் தெரிவிக்கப்பட்டபோது, ஒரு விஷயத்தை நான் உறுதியாக நினைத்தேன். இதுகுறித்த செய்தி வெளியாகும்போது நிச்சயம் இது பிரதமர் நரேந்திர மோடியின் ஏப்ரல் ஃபூல் (April Fool) என எனது காங்கிரஸ் நண்பர்கள் கூறுவார்கள் என்பதுதான் அது. … Read more

காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய பேராசிரியர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளை சாதியைக் குறிப்பிட்டு தரக்குறைவாக பேசியதாக, பேராசிரியர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தென்காசியைச் சேர்ந்த சண்முகராஜா, இக்கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது துறையில் பயிலும் மாணவ, மாணவிகளை சாதியைக் குறிப்பிட்டு ஒருமையில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர், கடந்த பிப்ரவரி 17ம் தேதி பேராசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக வீடியோவும் வெளியானது. இது தொடர்பாக மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் … Read more

நாட்டின் சமூகநீதிக்கு வழிகாட்டிய போராட்டம் – கேரளாவில் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

சென்னை: நாட்டின் சமூகநீதிக்கு வழிகாட்டியது வைக்கம் போராட்டம் என்று கேரளாவில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் நேற்று `வைக்கம் சத்தியாகிரகப் போராட்ட நூற்றாண்டு விழா’ நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து கொச்சி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, கேரள தொழில் துறை அமைச்சர் பி.ராஜீவி, மாவட்ட ஆட்சியர் எஸ்.கே.உமேஷ், திமுக கேரள மாநிலச் செயலாளர் முருகேஷ், தலைவர் மோகன்தாஸ் … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்படி? மூன்று வாரங்களில் கிடுகிடு ஏறுமுகம்!

கொரோனா வைரஸ் என்றாலே ஒருவித கலக்கம் மனதிற்குள் இருக்கத்தான் செய்கிறது. மூன்று அலைகள், பல லட்சம் உயிர்கள், தீராத மன உளைச்சல், பெரும் பொருளாதார இழப்பு என சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாம் முடிந்தது. இனி கொரோனா வராது என நம்பிக்கை நிலவிய சூழலில் 2023ஆம் ஆண்டு சற்றே பதற்றத்தை கூட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக ஏறுமுகத்தை நோக்கி சென்றுள்ளது. … Read more

தீண்டாமை வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டோரின் ஆட்சேபத்தை ஜாமீனுக்கு முன் பரிசீலிக்க வேண்டும்: 2 ஆண்டுக்கு முன் வழங்கிய ஜாமீன் ரத்து

மதுரை: தீண்டாமை வன்கொடுமை வழக்கில் ஜாமீன் வழங்கும் முன் பாதிக்கப்பட்டோரின் ஆட்சேபத்தை பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே சாம்பிராணிபட்டியில் உள்ள நிலத்தின் மீதான உரிமை தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்துள்ளது. கடந்த 24.2.2020ல் அந்த நிலத்தை அளவீடு செய்து வேலி அமைக்கும் பணியில் ஒரு தரப்பினர் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது எஸ்சி – எஸ்டி … Read more