ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி, தமிழகம் டெல்லி ஆட்டம் டிரா.!

கவுஹாத்தியில் நடைபெற்ற தமிழகம் டெல்லி அணிகளுக்கிடையிலான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி டிராவில் முடிந்தது. தமிழகம் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே கடந்த 17-ஆம் தேதி தொடங்கிய நான்கு நாட்கள் கொண்ட ரஞ்சி கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணியின் கேப்டன் விஜய் சங்கர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க வீரர் யாஷ் துல் 113 ரன்களும், லலித் யாதவ் 177 ரன்களும் … Read more

திமுகவினர் மீது குற்றம்சாட்டி முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் புகார் <!– திமுகவினர் மீது குற்றம்சாட்டி முன்னாள் அமைச்சர் எஸ்பி வேல… –>

கோவையில் திமுகவினர் மீது குற்றம்சாட்டி முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 9 அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரனை சந்தித்து புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மற்றும் சென்னை பகுதி ரௌடிகளை களமிறக்கி திமுகவினர் பண விநியோகம் செய்தனர் என்றும் கள்ள ஓட்டு செலுத்தினர் என்று குற்றம்சாட்டினார். நீதிமன்ற அறிவுறுத்தல்களை அதிகாரிகள் கடைபிடிக்க வில்லை என்று கூறிய அவர், இதை தடுக்க … Read more

தமிழறிஞர்களின் படைப்புகளை மாட்டுவண்டிகளில் ஏற்றி வந்து கல்யாண சீர் அளித்த வாட்ஸ்அப் குழுவினர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று (பிப்.20) நடைபெற்ற திருமண விழாவில் தமிழறிஞர்களின் படைப்புகளை மாட்டுவண்டிகளில் கொண்டு வந்து சீர் அளித்தது அனைவரையும் வியக்க வைத்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவர்கள், மருத்துவத் துறை பணியாளர்கள், காவல் துறையினர், ஆசிரியர்கள், தமிழறிஞர்கள், வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தோரைக் கொண்டு “தமிழினி” வாட்ஸ்அப் குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவினருக்கு இடையே தினந்தோறும் கவிதை, கட்டுரை, கதை போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த வாட்ஸ்அப் குழுவின் கவுரவ … Read more

மெரினாவில் சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்திகள்: பார்த்து ரசிக்கும் மக்கள்

குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்திகள் சென்னை மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள். டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு தமிழகத்தில் சார்பாக அணிவகுப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த ஊர்திகள் பின்னர் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்றன. அதன் தொடர்ச்சியாக, இந்த ஊர்திகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன. ஒட்டுமொத்தமாக மூன்று ஊர்திகள் உள்ளன, தற்போது இந்த ஊர்திகள் இன்றிலிருந்தே வரும் 23-ஆம் தேதி வரை … Read more

வாக்குப்பதிவு சதவீதத்தில் பேரூராட்சிகளை விட பின்தங்கிய மாநகராட்சிகள், நகராட்சிகள்

தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில், பேரூராட்சிகளைவிட மாநகராட்சிகள், நகராட்சிகள் மிகவும் குறைவான சதவீதத்தில் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு நகர்ப்புற வாக்காளர்களின் அக்கறையின்மையே காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிப்ரவரி 19ம் தேதி கோவிட் நெறிமுறைகளுடன் வாக்குப்பதிவு தொடங்கிய இரண்டு மணி நேரத்தில், சென்னையில் வெறும் 4%, தாம்பரத்தில் 3% மற்றும் ஆவடியில் 0.4% வாக்குகள் பதிவாகி இருந்தது. 21 மாநகராட்சிகளில் காலை 9 மணி … Read more

மீன் பிடிக்க சென்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்.. கடலூர் அருகே நிகழ்ந்த சோகம்..!

ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் சேற்றில்சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் அருகே மருதாடு சேர்ந்தவர் அய்யப்பன். கூலி தொழிலாளியான இவர் அந்த பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக இறங்கியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வராததால் சந்தேகமடை உடன் வந்தவர்கள் உடனடியாக அவரை தேடியுள்ளனர். அப்போது அய்யப்பன் சேற்றில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.  அவரை மீட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே … Read more

தமிழகத்தில் இன்று ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா தொற்று; சென்னையில் 223 பேருக்கு பாதிப்பு- 3,172 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 949 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,44,929. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,48,811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,91,011. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 81,68,040 பேர் வந்துள்ளனர். சென்னையில் 223 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

குடிபோதையில் தகராறு செய்த இளைஞரை தட்டிக்கேட்க முயன்ற தந்தை – மகளுக்கு அரிவாள் வெட்டு

ராஜபாளையத்தில் குடிபோதையில் தகராறு செய்த இளைஞரை தட்டி கேட்ட முதியவரை சராமாரியாக தாக்கியுள்ளார் அந்த இளைஞர். இதை தடுக்க சென்ற இளம் பெண் ஒருவரும் அரிவாளால் தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டிபி மில்ஸ் சாலையில் உள்ள துரைசாமிபுரம் செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் பிள்ளையார். 55 வயதான இவர் உடல் நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்திருக்கிறார். இன்று மதியம் இதே பகுதியை … Read more

குழந்தைகளிடம் புத்தக வாசிப்பை உருவாக்குவது எப்படி?

மக்களின் பெரும் எதிர்பார்ப்பான புத்தக கண்காட்சி சென்னையில் பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை கோலாகலமாக நடைபெறுகிறது. சென்னையின் 45ஆவது புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துவங்கிவைத்தார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம் முன்னிலையில் அழ. வள்ளியப்பா நூற்றாண்டுக்கு கொண்டாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. குழந்தை இலக்கியங்களுக்கே பிரபலமான கவிஞர் அழ வள்ளியப்பா, 2000க்கும் மேற்பட்ட பாடல்கள் குழந்தைகளுக்காகவே எழுதியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஐ.ஏ.எஸ். இளம்பகவத் வருகை தந்தார். … Read more

பள்ளி கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கிய மர்ம நபர்கள்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!

செங்கல்பட்டு அருகே இரவோடு இரவாக மர்மநபர்கள் பள்ளி கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கிய உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மெய்யூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடத்தை மர்ம நபர்கள் சிலர் இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். மேலும், கட்டிடத்தில் இருந்த இரும்பு உள்ளிட்ட பொருட்களையும் எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை … Read more