மளிகை கடைக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்த மளிகை கடைக்காரர் மகன் கைது..!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே மளிகை கடைக்கு வரும் பெண்களை ஆபாச கோணத்தில் வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததாக  மளிகை கடை உரிமையாளரின் மகனை போலீசார் கைது செய்தனர். தழுதாளி கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் அலாவுதீன். இவரது மகன் முகமது ஜுபைர் . கடைக்கு பொருள்கள் வாங்க வரும் பெண்களை, அவர்களுக்கு தெரியாமல் ஆபாச கோணத்தில் செல்போனில் வீடியோ எடுப்பதை வழக்க மாக்கிய ஜூபைர், அதை  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக திண்டிவனம் அனைத்து … Read more

“தொலைந்துவிடுவீர்கள்…” – தயிர் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தைக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: “குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம், தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்” என்று தயிர் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தையைப் பயன்படுத்தக் கூறும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImposition. குழந்தையைக் … Read more

தயிர் என்றால் புரியாது! தமிழ்நாட்டில் ‘தஹி’ என்றால் புரியும்! அடம் பிடிக்கும் FSSAI

சென்னை: தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி பால் பொருட்களில் தயிர் பாக்கெட்டில் “தஹி” என்ற ஹிந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான (FSSAI) தெரிவித்துள்ளது. ஒவ்வொரு முறையும்.. ஏதோ ஒரு மூலையில் கொஞ்சமாக ஹிந்தி திணிப்பு நிகழ்ந்தாலும் அதை எதிர்த்து முதல் ஆளாக குரல் கொடுப்பது ஒரு தமிழகமாக இருக்கும். அப்படித்தான் தற்போது மீண்டும் ஹிந்தி திணிப்பு விவகாரம் உச்சம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் … Read more

மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக்கோரிய வழக்கில் காவல் ஆணையர் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக்கோரிய வழக்கில் காவல் ஆணையர் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. காவல் நிலைய கட்டடம் 115 ஆண்டுகள் பழமையானது என்பதால் மனிதர்கள் வாழ தகுதியற்றது என மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார். புதிய இடம் மாற்றம் செய்யும் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காவல் நிலைய கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டாலோ, உயிரிழப்பு நிகழ்ந்தாலோ காவல்துறை பொறுப்பு ஏற்க வேண்டும். மதுரைக காவல் … Read more

அரசியலில் மதத்தை பயன்படுத்துவதை நிறுத்தினால் வெறுப்பு பேச்சுகள் ஒழியும் – சுப்ரீம் கோர்ட்

அரசியலில் மதத்தை பயன்படுத்துவதை நிறுத்தினால் வெறுப்பு பேச்சுகள் ஒழியும் – சுப்ரீம் கோர்ட் Source link

உதவி செய்தால் 5000 ரூபாய்! விரைவு பேருந்துகளில் 50% கட்டண தள்ளுபடி – அமைச்சர் சிவசங்கர் அதிரடி அறிவிப்பு!

தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பயண சலுகைகளை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவைகள் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில், முக்கியமாக அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் வழக்கமாக பயணிக்கும் பயணிகளுக்கு பயணச் சலுகை அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு காலண்டர் மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணிக்கும் பணிகளுக்கு 50% கட்டண சலுகை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.  மேலும் விரைவு … Read more

அதிர்ச்சி! தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு!!

மத்திய அரசு தற்போது தயிர் பாக்கெட்டில் இந்தியை திணிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதற்கான வேலையை செய்து வருகிறது. பல்வேறு வழிகளை பின்பற்றிய மத்திய அரசு தற்போது புதுமாதிரியாக தயிர் பாக்கெட்டை கையில் எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில் தமிழில் ‘தயிர்’ கன்னடத்தில் ‘மோசரு’ போன்ற வார்த்தைகளை தவிர்த்து அதற்கு பதிலாக “தஹி” என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அடைப்பு குறிக்குள் … Read more

கோவையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த கடை சுவற்றில் மோதி விபத்து..!

கோவையில் இருந்து திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடை சுவற்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு எதிர்ப்புறமாக பேன்சி மற்றும் பேக்கரி உள்ளது. திருச்சி சாலையை ஒட்டியுள்ள இந்த கடையில் கோவையில் இருந்து திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று அதிவேகமாக வந்து கடையின் முன்புற சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த திருப்பூர் மாவட்டம் … Read more

வெளி மாநிலத் தொழிலாளர்கள் விபத்தில் மரணம் அடைய நேரிட்டால் நிதியுதவி: தமிழக அரசு

சென்னை: விபத்துகளில் மரணம் அடையும் வெளி மாநிலத் தொழிலாளர்களின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 29) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் பதில் அளித்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய … Read more