‘எய்ம்ஸ்’ அப்டேட்: ரியல் எஸ்டேட் நபர்கள் தொடர்ந்து ‘பிஸி’, மருத்துவமனைக்காக ஏங்கும் மக்கள் ஏமாற்றம்

மதுரை; ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அறிவிப்பு வெளியான நாள் முதல் மதுரை தோப்பூரில் ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறக்கும் நிலையில், இம்மருத்துவமனையை எதிர்பார்த்து காத்திருக்கும் தென் மாவட்ட மக்கள் கட்டுமானப் பணி தொடங்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்திற்கு கடந்த 2015-ம் ஆண்டு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. இந்த மருத்துமனை மதுரை தோப்பூரில் அமைவதாக 2018-ம் ஆண்டு அறிவித்தபோது தென் மாவட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தார்கள். இந்த மருத்துவமனை திட்டத்திற்கு 2019-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி பிரதமர் … Read more

அண்ணாமலையார் கோயிலில் ரூ.2.81 கோடி உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணுவது வழக்கம். அதன்படி, தை  மற்றும் மாசி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி, இரவு 7.30 மணி வரை நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். உண்டியலில் ரூ.2 கோடியே 81 லட்சத்து 18 ஆயிரத்து 750 காணிக்கையாக கிடைத்தது. … Read more

ஜோஹோ நிறுவன சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு மீது அவருடைய மனைவி மோசடி குற்றச்சாட்டு

ஜோஹோ நிறுவன சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு மீது அவருடைய மனைவி மோசடி குற்றச்சாட்டு Source link

திருப்பூர் : சட்ட விரோதமாக தங்கியிருந்த 4 நைஜீரியர்கள் கைது.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் வெளி மாவட்டம் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.  அதுமட்டுமல்லாமல் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் ஒருசிலர் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பதால் திருப்பூர் போலீசார் அடிக்கடி சோதனை நடத்துவதுடன் ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பவர்களை கைது செய்தும் வருகின்றனர்.  இந்த நிலையில், திருப்பூர் போலீசார் ராயபுரம் பகுதியில் நைஜீரியர்கள் தங்கி இருந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். … Read more

“ப்ளூ காய்ச்சல் காலநிலை மாற்றத்தால் பரவக்கூடிய சாதாரண காய்ச்சல்”-திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் டி.நேரு

ப்ளூ காய்ச்சல் என்பது காலநிலை மாற்றத்தால் பரவக்கூடிய சாதாரண காய்ச்சல் தான் எனவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம், இதிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம் எனவும், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் நேரு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பொதுமக்கள் லேசான காய்ச்சல் தென்படும் போதே, மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டுமென கூறினார். இணை நோய் இருப்பவர்களுக்கு ப்ளூ காய்ச்சல், மூளைக்காய்ச்சலாக மாறக்கூடிய வாய்ப்புள்ளதால், அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க … Read more

சாலையோர புளிய மரங்களை அகற்றியதால் புளி உற்பத்தி பாதிப்பு: மாற்று வழி கோரும் கிருஷ்ணகிரி விவசாயிகள்

ஓசூர்: சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் சாலையோரம் இருந்த புளிய மரங்கள் அகற்றப்பட்டதால் புளி உற்பத்தி பாதிப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி பகுதி விவசாயிகள் வேதனை கூறியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, அஞ்செட்டி, கெலமங்கலம், யூ.புரம், ஊடேதுர்கம், உள்ளுகுறுக்கி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயத்திற்கு பயன்படாத தரிசு நிலங்களில் நீண்ட காலம் பலன் தரும் புளிய மரங்களை விவசாயிகள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இப்பகுதியில் விளையும் புளி நல்ல சதைபற்றும், நல்ல சுவையானதாக … Read more

நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது: மதுரை எம்பி கடிதத்திற்கு ஜனாதிபதி பதில்

மதுரை: நீட் விலக்கு மசோதாஉள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை எம்பியின் கடிதத்திற்கு, ஜனாதிபதி முர்மு பதில் அளித்து உள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக்கோரி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தரப்பிலிருந்து கடந்த 2ம் தேதி பதில் கடிதம் வந்துள்ளது. அதில், ‘‘ஜன.19ம் தேதி தாங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றது. … Read more

ரேபிடோ ஓட்டிய சட்டக் கல்லூரி மாணவர் மீது ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குதல்; போலீஸ் கமிஷரிடம் புகார்

ரேபிடோ ஓட்டிய சட்டக் கல்லூரி மாணவர் மீது ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குதல்; போலீஸ் கமிஷரிடம் புகார் Source link

8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

விருதுநகர் மாவட்டத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி காளிராஜ் (48). இவர் கடந்த 2021ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து … Read more

BMW சொகுசு காரில் வலம்.. திருட்டு காரில் கஞ்சா கடத்தல்,165 வழக்கு – ஜாமீன் எடுக்க மனைவி..! ‘பந்தா’ பரமேஸ்வரன் அதிரடி கைது..!

கட்சிக் கொடி பறக்கும் சொகுசு கார்… திருட்டு கார்களில் கஞ்சா கடத்தல்… வழக்குகளில் மாட்டிக்கொண்டால் ஜாமீன் எடுக்க வக்கீல் மனைவி.. என கஞ்சா கடத்தலின் மன்னனாக செயல்பட்டதாக மதுரை பரமேஸ்வரனை போலீஸார் கைது செய்துள்ளனர். 165 கார் திருட்டு வழக்குகளில் சிக்கியவர் கஞ்சா கடத்தல்காரரான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு… மதுரை மாவட்டம் மதிச்சியம் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தி காரில் 80 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திக்கை … Read more