#தமிழகம் | மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் – தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை!

தமிழகத்தில் வெப்ப அலையை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.  அதன்படி, பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள், வயதானவர், கர்ப்பிணிகள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், உடல் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டால் மருத்துவர் அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. … Read more

ஊழியர்களுக்கு ஷாக்..!! மீண்டும் பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டம்..!!

கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கி விட்டன. இதன் காரணமாக உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்தனர். சந்தை நிலையை கருத்தில் கொண்டு மேலும் சில நிறுவனங்கள் இரண்டாவது கட்டமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்வது பற்றி பரிசீலனை செய்து வருகின்றன. இந்த வரிசையில் மார்க் ஜூக்கர்பர்க் மெட்டா பிரிவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் முறை … Read more

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: ஓபிசி, எஸ்சி, எஸ்டி-க்கு கட்-ஆஃப் 800-க்கு 257

சென்னை: இந்தியா முழுவதும் நடைபெற்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஓபிசி,எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்-ஆஃப் 800-க்கு 257 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, நீட் தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட்டுள்ள தேசிய தேர்வு வாரியத்துக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், மத்தியஅரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் … Read more

பெரியகுளத்தில் 5 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் தட்டுப்பாடு

தேனி: பெரியகுளத்தில் 5 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாத நிலையில் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடைக்கு முன்பே சோத்துப்பாறை அணையிலிருந்து நீரை திறந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செம்மண் கலந்த நீரை விநியோகம் செய்ய முடியாததால் நகராட்சி நிர்வாகம் 5வது நாளாக குடிநீர் விநியோகத்தை நிறுத்தியுள்ளது.

கம்பம் அருகே மர்ம நபர்களால் கடத்தப்பட்ட தொழிலதிபர் பெரியகுளம் அருகே பத்திரமாக மீட்பு

கம்பம் அருகே மர்ம நபர்களால் தொழிலதிபர் கடத்தப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ராயப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அதிசயம். இவர் கோழி பண்ணை மற்றும் திராட்சை தோட்டங்கள் வைத்துள்ளார். இவரது பண்ணை மற்றும் தோட்டங்களில் இருந்து கோழிகள் மற்றும் திராட்சை பழங்களை தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிற்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவர், தனது தோட்டத்திற்குச் செல்லும் சண்முகநாதன் கோவில் சாலையில் நேற்று அதிகாலை … Read more

அதிகரிக்கும் இன்புளுயன்சா காய்ச்சல்: என்ன செய்ய வேண்டும்? : சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

அதிகரிக்கும் இன்புளுயன்சா காய்ச்சல்: என்ன செய்ய வேண்டும்? : சுகாதாரத்துறை அறிவுறுத்தல் Source link

மனைவி கண்டிப்பு.. தீக்குளித்த போதை தொழிலாளி..!!

விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஆனைக்குட்டம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ரவி(55). இவருடைய மனைவி பாக்கியலட்சுமி. இந்நிலையில் ரவிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தினமும் மது அருந்திவிட்டு வந்து பாக்கியலட்சுமியுடன் தகராறு செய்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று காலையிலேயே ரவி மது குடித்துவிட்டு வந்து பாக்கியலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ரவியை பாக்கியலட்சுமி கண்டித்துள்ளார்.  இந்நிலையில் ரவி தற்கொலை செய்து கொள்வதற்காக சமையல் அறையில் … Read more

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

தமிழ்நாட்டில் நேற்று ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெயில் நூறு டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியது. கடந்த ஒரு வார காலமாக  தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் வெப்பம் படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில் நேற்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 100 புள்ளி 7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சேலத்தில் 100 புள்ளி 5 டிகிரி பாரன்ஹீட்டும் நாமக்கல்லில் 100 புள்ளி 4டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகி உள்ளது. Source link

பயண கட்டணம் அதிகரிக்கும் மின்சார பேருந்து திட்டத்தை கைவிட வேண்டும்: அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்

சென்னை: மின்சார பேருந்து திட்டத்தால் பயணக் கட்டணம் அதிகரிக்கும், எனவே தமிழக அரசு அதை கைவிட வேண்டுமென அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வலியுறுத்தியுள்ளார். போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் மார்ச் 10, 11, 12 ஆகிய நாட்களில் சென்னையில் இருசக்கர வாகன பிரச்சார இயக்கம் … Read more

பிரசாந்த் கிஷோருக்கு நன்றி சொன்ன சீமான் – இந்தியா முழுக்க ப்ரீ புரொமோஷன்!

இந்தியா முழுவதும் தன்னை அறிமுகப்படுத்திய பிரசாந்த் கிஷோருக்கு நன்றி தெரிவித்துள்ளார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் . வட இந்திய தொழிலாளர்கள் தொடர்பான போலி வீடியோ வெளியாக சர்ச்சையைக் கிளப்பியது. நிறுவனத்தின் தலைவருமான பிரசாந்த் கிஷோர், “தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறைக்கு அழைப்பு விடுப்பவர்கள் மீது நடவடிக்கை இல்லை. சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? ” என ட்வீட்டரில் பதிவிட்டிருந்தார். ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசியது தொடர்பான வீடியோவை பிரசாந்த் … Read more