தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே பாஜக மாநில நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் சிவந்தி கே.நாராயணன். பாஜக மாநில பட்டியல் அணி பொதுச்செயலாளராக செயல்பட்டு வரும் இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.  அதுமட்டுமல்லாமல், அரசுத் துறை சார்பில் நடைபெறும் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகளை கட்டிக் கொடுக்கும் ஒப்பந்ததாரரிடம் பணிகளை எடுத்துச் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை மதுரையில் இருந்து அமலாக்க துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி உட்பட மூன்று அதிகாரிகள் சிவந்தி நாராயணன் வீட்டிற்கு … Read more

அலர்ட்! அடுத்த 5 நாட்களுக்கு தொடர்ந்து மழை!!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கும் என்று மக்கள் அச்சத்துடன் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆங்காங்கே ஆலங்கட்டி மழையே பெய்து மண்ணை குளிர்வித்து வருகிறது. அதே நேரத்தில் பருவம் தவறி பெய்யும் மழையால் பயிர்கள் பாதிப்பு சந்திக்கின்றன. இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு … Read more

புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்..!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் இரண்டு விசை படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து மாலதி சிவகுமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற ஆறு மீனவர்களும் ஜெகதாப்பட்டிணம் துறைமுகத்தில் இருந்து முருகானந்தம் என்பவர் விசைப்படகில் சென்ற ஆறு மீனவர்களும் நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து மீனவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

கல்விச் சுற்றுலா, பிற நிகழ்வுகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகள் அவசியம்: சென்னை ஐகோர்ட்

சென்னை: கல்விச் சுற்றுலா மற்றும் பிற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம், திம்மசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியின் NSS சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, கூவத்தூர் முதல் தென்பட்டிணம் இடையிலான கடலோர பகுதியில் சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூன்றாம் ஆண்டு மாணவர் … Read more

சிவகங்கை மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் தொடர்ந்து அதிகரிப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி ஆண்களை விட 2 ஆயிரத்து 913 பெண் வாக்காளர்கள் கூடுதலாக இருந்தனர். 2016, செப்டம்பரில் வெளியிடப்பட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்படி ஆண்களை விட 9 ஆயிரத்து 399 பெண் வாக்காளர்கள் கூடுதலாக இருந்தனர். 2017, அக்டோபரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் படி … Read more

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு 23ம் புலிகேசி படம் போன்று தான் உள்ளது – பாஜக தலைவர் அண்ணாமலை.!

தமிழகத்தின் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி செல்வதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் நிரூபர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு அவர் தெரிவித்ததாவது, “23ம் புலிகேசி படம் போன்று தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளது. தினந்தோறும் காலை முதல்வர் டிஜிபியிடம் நம்மைப் பற்றி சமூக வலைதளங்களில் யார் தவறாக பேசியுள்ளனர் என்று தான் கேட்கிறார்.  அவர்களை கைது செய்ய தான் இந்த அரசு தீவிரமாக உள்ளது. சமூக … Read more

விழுப்புரம் ஆசிரம நிர்வாகிகள் ஜாமீன் கோரிய வழக்கு: கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய போலீஸுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விழுப்புரம் அன்பு ஜோதி இல்லம் ஆசிரம நிர்வாகிகள் ஏழு பேர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர் காணாமல் போனதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு … Read more

கோவை ரயில் நிலையம் முன்பு 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்!

கோவை: கோவை ரயில் நிலையம் முன்பு 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார். அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.