டீசல் ஊற்றி சிறுமி எரித்து கொலை – வாலிபருக்கு ஆயுள் தண்டனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை டீசல் ஊற்றி எரித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் கீழமூட்டம் பகுதியை சேர்ந்தவர் எவரெஸ்ட் (23). இவர் அழிக்கால் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால் சிறுமி எவரெஸ்ட் உடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எவரெஸ்ட் கடந்த 2013ஆம் ஆண்டு சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து, … Read more

பிளஸ் 2 பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை கண்டறிய நடவடிக்கை: பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களைக் கண்டறிந்து, பயிற்சி அளித்து, அவர்களை மீண்டும் தேர்வெழுத வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த 13-ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியது. எனினும், தினமும் சராசரியாக 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்காத நிலை உள்ளது. இவர்களில் சுமார் 38 ஆயிரம் பேர் அரசுப் பள்ளி மாணவர்கள். முந்தைய ஆண்டில் பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் எண்ணிக்கை … Read more

செஞ்சியகரத்தில் திமுக தெருமுனை கூட்டம் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம்: கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ வழங்கினார்

ஊத்துக்கோட்டை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, செஞ்சியகரம் கிராமத்தில் நடைபெற்ற திமுக தெருமுனை பிரசார கூட்டத்தில், ஏழை எளிய மக்கள் 500 பேருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்.  ஊத்துக்கோட்டை அருகே திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் சார்பில், செஞ்சியகரம் கிராமத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, தெருமுனை பிரசார கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், எல்லாபுரம் … Read more

சென்னையில் அதிவேக விதிமீறல்களை தடுக்கும் புது முயற்சி: தொழில்நுட்பத்தை கையாளும் போக்குவரத்து காவல்துறை

சென்னையில் அதிவேக விதிமீறல்களை தடுக்கும் புது முயற்சி: தொழில்நுட்பத்தை கையாளும் போக்குவரத்து காவல்துறை Source link

கோவையில் பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுக் கொலை – 13 பேர் கைது.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரபல ரவுடி சத்திய பாண்டியன் என்பவர் துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இந்த கொலைக்கு கட்டப்பஞ்சாயத்தில் ஏற்பட்ட தகராறு தான் காரணம் என்றுத் தெரியவந்தது. இதற்கிடையே, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராஜா என்பவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடந்தார். அதன் பின்னர் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் அவர் ஒரு துப்பாக்கி இருக்கும் இடத்தைத் … Read more

பிரதமர் குறித்து அவதூறு இ-மெயில்: தஞ்சாவூர் இளைஞரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

தஞ்சாவூர்: பிரதமர் மோடி குறித்து, அவரது அலுவலகத்துக்கு அவதூறாக இ-மெயில் அனுப்பிய தஞ்சாவூர் இளைஞரிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகேயுள்ள பூண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா(35). எம்.காம். பட்டதாரி. சூழலியல் சுற்றுலா தொடர்பாக முனைவர் பட்டத்துக்கான (பிஎச்.டி.) ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், பிரதமர் மோடி குறித்து, அவரது அலுவலக இ-மெயில் முகவரிக்கு விக்டர் ஜேம்ஸ் ராஜா அவதூறான கருத்தை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. … Read more

8 மாதத்தில் குழந்தை பிறந்ததால் உடல் நலம் பாதிப்பு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் தகராறு

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அடுத்த அல்லிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் (27). தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சந்தியா (23). இவர்களுக்கு  திருமணமாகி 2 ஆண்டுகளாக குழந்தை இல்லை.  இந்நிலையில் கர்ப்பமான சந்தியாவுக்கு கடந்த 2 வாரத்திற்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து அல்லிக்குழி அருகிலுள்ள கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று பரிசோதனை செய்துள்ளனர். அப்போது குழந்தைக்கு பனிக்குடம் உடைந்து போனதாகவும் உடனடியாக திருவள்ளூர் மாவட்ட அரசு … Read more

காஞ்சிபுரம் | கல்லூரி மாணவர் திடீர் தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் உள்ள மாமா லிங்ககுமார் வீட்டில் வசித்து வந்தவர் ஜெயந்தன் (20). இவர் மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் ஜெயந்தன் வீட்டிலிருந்த மின்விசிறியில் திடீரென தூக்கு போட்டுக் கொண்டுள்ளார். இதைப் பார்த்த உறவினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஜெயந்தனை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். … Read more

ரூ.1 லட்சம் கொடுத்தால் 3 லட்சம் கள்ளநோட்டுகள் தருவதாகக் கூறி கள்ள நோட்டுகளை பரவ விட முயற்சித்த 3 பேர் கைது..!

கோயம்புத்தூரில் ஒரு லட்சம் ரூபாய்க்கு 3 லட்சம் கள்ள நோட்டு தருவதாகக் கூறி கள்ள நோட்டுகளை பரவ விட முயற்சித்த 3 பேர் போலீசாரிடம் சிக்கினர். உக்கடம் பைபாஸ் சாலையை சேர்ந்த முகமது அனிபா, தனது நண்பர் மாசிலாமணியுடன் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை அருகே பேசிக்கொண்டிருந்த போது இரண்டு கார்களில் இறங்கிய டிப்டாப் ஆசாமிகள் 3 பேர் அவர்களிடம் கள்ள நோட்டுகள் இருப்பது போன்ற வீடியோக்களை காண்பித்தும், அதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் பேசியதாகக் … Read more