திருச்சி மாநாடு; ஓபிஎஸ் கடைசி அஸ்திரம் பெரிய சக்சஸ்… அடிச்சு சொல்லும் ர.ர.,க்கள்!

அதிமுகவில் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டு கட்சி பணிகளில் மும்முரம் காட்ட தொடங்கியுள்ளார். அதேசமயம் தேர்தல் ஆணையத்தில் இருந்து ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்று நீதிமன்ற கதவுகளை தட்டி தீர்ப்பிற்காக காத்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தனக்கான செல்வாக்கை நிரூபித்து அதிமுகவில் மீண்டும் நுழைந்து விட வேண்டும் என்று காய்களை நகர்த்தி வருகிறார். திருச்சி அதிமுக மாநாடு இந்த சூழலில் திருச்சியில் வரும் 24ஆம் தேதி பிரம்மாண்ட மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனை எம்.ஜி.ஆர் பிறந்த நாள், ஜெயலலிதா … Read more

அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர கால நிர்ணயம் – பாஜக அல்லாத முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் எனத் தீர்மானத்தை மற்ற மாநில சட்டப்பேரவையிலும் நிறைவேற்ற வேண்டும் என பாஜக அல்லாத முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் மக்களாட்சி இன்று முக்கியமான கட்டத்தில் உள்ளது என்பதையும், நமது நாட்டில் கூட்டாட்சித் தத்துவம் என்பது படிப்படியாக மறைந்து வருவதையும் காண்கிறோம். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்தும், ஒன்றிய மற்றும் … Read more

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு; செந்தில் பாலாஜி மாஸ் அறிவிப்பு.!

தமிழக சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி துறை மானியக் கோரிக்கை நடைபெற்றது. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். விவசாயிகளுக்கு மின் இணைப்பு அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் விளை நிலங்களின் பரப்பை அதிகரித்து, விவசாய உற்பத்தியினை பெருக்கி, உழவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாகவும் மற்றும் பசுமைப் புரட்சிக்கு வித்திடும் விதமாகவும், நடப்பு 2023-24ஆம் ஆண்டில் 50 ஆயிரம் எண்ணிக்கை புதிய விவசாய இலவச மின் இணைப்புகள், சாதாரண வரிசை, சுயநிதி திட்டம், சிறப்பு … Read more

மார்பகம் பெரியதாக இல்லை..விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை.!

தமிழ் சினிமாவில் கபாலி,ஆல் இன் ஆல் அழகுராஜா , சித்திரம் பேசுதடி-2, உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இவர் தமிழையும் தாண்டி பல மொழிகளில் பல படங்களிளில் நடித்துள்ளார். அடிக்கடி தனது மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக தைரியமாக இவர் தெரிவித்து விடுவார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் “பெண்களின் உடலை பற்றி விமர்சிப்பதை சிலர் அவர்களின் உரிமையாகவே கருதுவார்கள்” என பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” என்னுடைய உடல் எடை 3-4 கிலோ … Read more

டிஜிட்டல் ஹவுஸ் ஆக மாறிய தமிழக சட்டப்பேரவை – சிறப்பு அம்சங்கள் 

சென்னை: டிஜிட்டல் ஹவுஸ் திட்டத்தின் கீழ் தமிழக சட்டப்பேரவையில், கேள்வி கேட்பவர், பதில் சொல்பவர்களின் பெயர்கள் போன்ற தகவல்கள் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் 2021-22 நிதிஆண்டுக்கான தமிழக அரசின் முழுமையான பட்ஜெட் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் இருக்கை முன்பும் மேஜையில் சிபியுவை உள்ளடக்கிய ஆல்-இன்-ஒன் கணினி பொருத்தப்பட்டது. உறுப்பினர்கள் மட்டுமின்றி பேரவைத் தலைவர், அதிகாரிகள் இருக்கைகள் என அனைத்திலும் இந்த கணினி பொருத்தப்பட்டது. இதன்படி, … Read more

ஆளுநருக்கு எதிராக சண்டை செய்யும் ஸ்டாலின்.. மற்ற மாநிலங்களும் பின்பற்ற அழைப்பு.!

சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர்களுக்கு ஒன்றிய அரசும், குடியரசு தலைவரும் அறிவுரைகள் வழங்கிட வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தை இணைத்து, அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநில சட்டமன்றப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் முக ஸ்டாலின் நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், இந்தியாவில் … Read more

இனி இந்த 25 வகையான சான்றிதழ்கள் ஆன்லைனில் கிடைக்கும்..!!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 19 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வெளியிட்டார். அதன்படி, பேரிடர் முன்னறிவிப்புகளை தெரியப்படுத்த TN-Alert என்ற கைப்பேசி செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட TN-SMART செயலி உருவாக்கப்படும் என தெரிவித்தார். வெள்ள பாதிப்பிற்கு உள்ளாகும் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றின் இடது கரை 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பலப்படுத்தப்படும் என்றும், தமிழ்நாட்டில் புதியதாக நிலநடுக்க கண்காணிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும், … Read more

தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் தகுதியான 500 மதுபான சில்லறை விற்பனைக்‌ கடைகள்‌ கண்டறிந்து மூடப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.12) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தன் துறையின் கீழ் புதிய அறிப்புகளை வெளியிட்டார். அவற்றின் முக்கிய அம்சங்கள்: மறுவாழ்வு நிதி: … Read more

சட்ட சபை நேரலையில் பாகுபாடா? சபாநாயகர் அப்பாவு அளித்த விளக்கம்!

சட்டசபை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறக்கூடிய கவன ஈர்ப்புகள் இனி நேரலை செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இன்று சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்தது. பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேசியதை நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை என்றும், அதற்கு முன்னரும், பின்னரும் பேசியவர்களின் பேச்சு நேரலையில் ஒளிபரப்பான நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு மட்டும் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக கூறினர். செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “எதிர்க்கட்சி மக்களின் பிரச்சினைகளை … Read more

வினோத வழிபாடு! பக்தர்களின் தலையில் விளக்குமாறால் அடிக்கும் பூசாரி

Viral News In Tamil Nadu: ஒசூர் அருகே 383 ஆண்டுகால பழமைவாய்ந்த திருவிழாவில் துடப்பம், முறத்தால் அடிவாங்கும் வினோத வழிபாடு. காலம் காலமாய் பின்பற்றப்படும் வழிபாட்டு முறை குறித்து பார்ப்போம்.