பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கப்படுமா? நாளை நடைபெறும் விசாரணை!
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் அணி வழக்கு தொடர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாராணை நாளை நடைபெற உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி அவசர வழக்கு தொடர ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. … Read more