சாப்பாடு இல்லை என்று சொன்னதால் ஓட்டலை சூறையாடிய இளைஞர்கள்..!
தென்காசி மாவட்டத்தில், ஓட்டலுக்கு நள்ளிரவில் வந்த இளைஞர்களிடம் சாப்பாடு காலியாகிவிட்டது என்று ஓட்டல் உரிமையாளர் சொன்னதால் ஆத்திரமடைந்து அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் நடத்திவரும் ஒட்டலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை காசிமேஜர்புரம் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட இளைஞர்கள் சாப்பாடு கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நீலகண்டன் புகார் அளித்ததையடுத்து, ஐந்து பேரை கைது செய்த போலீசார் மேலும் சிலரை தேடி … Read more