மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும் – திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்! 

பேரறிஞர் அண்ணா என்றும் வாழ்கிறார், இன்றும் ஆள்கிறார் என்று, திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  அவரின் அந்த கடிதத்தில், “தென்னாட்டு காந்தி, இந்நாட்டு இங்கர்சால், கருத்துமிக்க நாடகங்களைப் படைப்பதில் தமிழ்நாடு கண்ட பெர்னாட்ஷா, மக்கள் நலன் காக்கும் கொள்கைவழிப் பயணத்தில் மற்றொரு கார்ல் மார்க்ஸ் என உலகப் பேரறிஞர்கள் – பெருந்தலைவர்களுடன் ஒப்பிடத்தக்க உன்னதத் தலைவராம், நம் இதயத்தை அரசாளும் மன்னராம், காஞ்சி தந்த திராவிடத் தலைவராம் … Read more

பாஜக ஆதரவு யாருக்கு ? நாளை அறிவிப்பு ..!!

சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி 471 நாட்கள் அண்ணாமலை தலைமையில் நடைபயணம் நடைபெற இருப்பதாகவும் அதற்கான திட்டமிடல் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார். பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாஜக ஆதரவு … Read more

முதியவர் மீது பின்னால் வந்த கனிமவளம் ஏற்றி சென்ற மினி லாரி மோதி விபத்து… பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் ஓரமாக சைக்கிளை நிறுத்திய முதியவர் மீது பின்னால் வந்த மினி லாரி மோதும் விபத்து காட்சி, சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இலஞ்சி நான்கு முக்கு பகுதியில், மாணிக்கம் என்ற முதியவர் மீது மோதிய மினி லாரி, ஓரமாக சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியது. முன்னால் சென்ற லாரியை, மினி லாரி ஓட்டுநர் முந்திச்செல்ல முயற்சித்ததால் விபத்து நேரிட்டது. காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், … Read more

மதுரை மாநகராட்சியில் கருத்தடை பணி பாதிப்பால் பெருகிய தெரு நாய்கள்: குழந்தைகள், முதியவர்கள் அச்சம்

மதுரை: மதுரையில் மாநகராட்சி 100 வார்டுகளுக்கு 2 நாய் பிடிக்கும் வாகனங்களும், கருத்தடை செய்வதற்கு ஒரே ஒரு மருத்துவரும் மட்டுமே உள்ளதால் கருத்தடை அறுவை சிகிச்சைப் பணி பாதிக்கப்பட்டு தெரு நாய்கள் எண்ணிக்கை பெருகியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மதுரை மாநகராட்சியில் மட்டுமே 47,000 தெரு நாய்கள் இருந்துள்ளன. அதன்பிறகு தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதனால், தெரு நாய்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியிருக்க கூடும் என மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தெரு … Read more

ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பதால் ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு கல்தா – ராமதாஸ்

உயர்வகுப்பு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் அவசரம் காட்டிய மத்திய அரசு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு சமூகநீதி வழங்குவதில் மட்டும் தாமதம் காட்டக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் 14-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆணையம் அதன் பணிகளை முடித்து பரிந்துரைகளையும் … Read more

சேலம் ரயில்வே கோட்ட வழித்தடங்களில் குறிப்பிட்ட சில நாட்களுக்கு 6 ரயில்கள் ரத்து!

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட வழித்த டங்களில் தண்டவாள சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணி வரும் பிப்ரவரி மாதத்தில் பல்வேறு இடங்களில் நடக்கவுள்ளது. இதனால், கோட்ட பகுதியில் இயங்கும் சேலம்- கோவை ரயில், விருத்தாச்சலம் ரயில் உள்பட 6 ரயில்கள், ரத்து செய்யப்படுகிறது. இதன்படி, கோவை – சேலம் எக்ஸ்பிரஸ் (06802) வரும் பிப்ரவரி 3, 4, 6, 10, 11, 13, 17, 18, 20, 24, 25, 27ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. … Read more

தேசிய கீதம் ஒலிக்கும்போது செல்போனில் பேசிய சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

நாமக்கல்: நாமக்கல் அரசு விழாவில் தேசிய கீதத்தை அவமரியாதை செய்த எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் அருகேயுள்ள பொம்மைக்குட்டைமேட்டில் கடந்த 28ம் தேதி அரசு நலத்திட்ட உதவிகள் விழா நடை பெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவின் இறுதியில் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது மேடையின் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கல் … Read more

கள ஆய்வில் முதலமைச்சர்… மாவட்டம் தோறும் சுற்றுப் பயணம் செய்ய மு.க. ஸ்டாலின் திட்டம்

கள ஆய்வில் முதலமைச்சர்… மாவட்டம் தோறும் சுற்றுப் பயணம் செய்ய மு.க. ஸ்டாலின் திட்டம் Source link

டாஸ்மாக் நிறுவனத்துக்கு வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

சென்னை: டாஸ்மாக் நிறுவனம் ரூ.7,986 கோடி வரி செலுத்த வேண்டுமென வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்துக்கு கடந்த 2021-22-ஆம் நிதியாண்டிற்கு 7 ஆயிரத்து 986 கோடியே 34 லட்ச ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என வருமான வரித் துறை அனுப்பியிருந்தது. அந்த நோட்டீஸை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். 2016-17ஆம் நிதி ஆண்டுக்கான மதிப்பீட்டு … Read more

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? ஸ்டாலின் எடுக்கும் முடிவு என்ன?

தலைமைச் செயலாளர் இறையன்பு பணிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில்அடுத்த தலைமைச் செயலாளர் யார், இறையன்பு அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது குறித்த பேச்சுகள் கோட்டை வட்டாரத்தில் எழுந்துள்ளன. ஸ்டாலின் எடுத்த முடிவு!2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்க தயாரான சமயத்தில் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்தாரோ அதைபோல முக்கிய பொறுப்புகளில் எந்தெந்த அதிகாரிகளை நியமிக்கலாம் என்பது குறித்து அதிக கவனமாக … Read more