பரந்தூரில் விமான நிலைய எதிர்ப்புகளுக்கு மாநில அரசு தீர்வு காண வேண்டும்: மத்திய அமைச்சர் ஜோதி ராதித்யா சிந்தியா

சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும். விமான நிலையம் அமைக்க எழுந்துள்ள எதிர்ப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மாநில அரசு தீர்வு காண வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜோதி ராதித்யா எம்.சிந்தியா தெரிவித்தார். மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட், அதில் இருக்கக்கூடிய சாராம்சங்கள் பற்றி மத்திய அமைச்சர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று சென்னை வந்த மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதி ராதித்யா எம்.சிந்தியா … Read more

டி.பி.கஜேந்திரன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 68. தமிழ் திரையுலகில் வீடு, மனைவி, மக்கள் திரைப்படம் மூலமாக 1988ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமான டி.பி.கஜேந்திரன், பாண்டி நாட்டு தங்கம், சீனா தானா, பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை … Read more

குளித்தலை கடம்பனேஸ்வரர் கோயிலில் தைப்பூச திருவிழா 8 ஊர் சாமிகள் தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

குளித்தலை: குளித்தலை கடம்பனேஸ்வரர் கோயிலில் தைப்பூச திருவிழா 8 ஊர் சாமிகள் சந்திப்பு மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வான் பொய்ப்பினும் தான் பொய்யா வற்றாத காவிரியின் தென் கரையிலே அமைந்து வடக்கே காசி திருத்தலப் பெருமையை காட்டிலும் மிஞ்சிய அருள் வழங்கும் சிறப்பு பெற்றதும் குபேர திசை என போற்றப்படும் வடதிசை நோக்கி எழுந்தருளி உள்ளதும் அப்பர், அருணகிரியார், ஐயடிகள், காணவக்கோன், போன்ற அருளாளர்களால் பாடப்பெற்றதும். கண்ணவ முனிவருக்கும், … Read more

தைப்பூச திருவிழா… முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்!!

இன்று தைப்பூசி திருவிழா என்பதால் தமிழ்நாடு முழுவதும் முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழ் கடவுளான முருகனுக்கு தனிச்சிறப்புடன் தைபூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கடவுள் முருகனுக்கு உகந்த நாள். அதே போல் இன்று பவுர்ணமி தினம். தைப்பூசத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் முருகன் கோவில்களில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று … Read more

அமெரிக்காவில் பலருக்கு பார்வை பாதிப்பு எதிரொலி: சென்னையின் ‘குளோபல் பார்மா’ நிறுவனத்துக்கு தடை

சென்னை: அமெரிக்காவில் பலருக்கும் பார்வை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள குளோபல் பார்மா நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், விசாரணை முடியும் வரை கண் தொடர்பான மருந்துகளை உற்பத்தி செய்ய அந்த நிறுவனத்துக்கு தடை விதித்துள்ளனர். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, திருப்போரூரில் செயல்பட்டு வருகிறது குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம். இந்த நிறுவனம் தயாரித்த சில கண் மருந்துகளால் அமெரிக்கர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்படுவதாக, அந்த நாட்டின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு … Read more

கலைஞர் பேனா சின்னம்: சீமானுக்கு பாஜக ஆதரவு!

தைப்பூசத்தை முன்னிட்டு பாஜக சார்பாக மதுரை திருநகரில் இருந்து திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் வரை பாதயாத்திரை நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். பாதயாத்திரையில் பாஜக பெண் நிர்வாகிகள் பாடலுக்கு ஆடிய வண்ணம் நடந்து வந்தனர். இந்நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன், “தமிழ்நாட்டினுடைய மூத்த அமைச்சர் தமிழ்நாட்டில் மூன்று முக்கிய கோயில்களை … Read more

ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது

திருப்பூர்: ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 12 கிலோ கஞ்சாவை, கோவைக்கு கடத்தி வந்த 2 பேரை, திருப்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

‘சாதி சாராதவர் என சான்றிதழ் தர அதிகாரிகள் மறுக்கிறார்கள்’: வெற்றிமாறன் புகார்

‘சாதி சாராதவர் என சான்றிதழ் தர அதிகாரிகள் மறுக்கிறார்கள்’: வெற்றிமாறன் புகார் Source link

தைப்பூசத்தையொட்டி மைக் செட் கட்டியபோது நேர்ந்த சோகம்.! மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி.!

கரூர் மாவட்டத்தில் தைப்பூசத்தையொட்டி மைக் செட் கட்டியபோது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கமேடு பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன் எலக்ட்ரீசியன் நவீன் குமார்(27). இவர் கரைப்பாளையம் பகுதியில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று காலை நவீன் குமார் மைக் செட் கட்டுவதற்காக கரைப்பாளையம் விநாயகர் கோவில் கோபுரத்தின் மீது நின்று ஒயரை வீசியுள்ளார். … Read more