சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த 29 வயது இளைஞர் அருகில் உள்ள வீட்டில் தாயுடன் வசித்து வந்த ஐந்து வயது சிறுமியை, கத்தியைக் காட்டி மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. … Read more